எழுத்தாளர் தமயந்தியின் ‘கொன்றோம் அரசியை’ என்ற புதிய சிறுகதை நூல் வெளியீடு சென்னையில் மார்ச் 5-ஆம் தேதி நிகழ்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் குட்டி ரேவதி தன்னுடைய பனிக்குடம் பதிப்பகம் மூலம் இந்நூலை கொண்டுவந்திருக்கிறார். இதுகுறித்து குட்டி ரேவதி தன்னுடைய முகநூலில்,
“’பனிக்குடம் பதிப்பகத்தின்’ நூல்கள், அந்தந்தக்கால சமூக அழுத்தங்களின் குறுக்குவெட்டாகவும் அவற்றை வெல்லும் பதிவாகவும் இயங்குவதில் தம் கவனத்தை செலுத்தும். அந்த வகையில், தமயந்தியின் ‘கொன்றோம் அரசியை’ நூல், முதன்மை பெறுகிறது. தொடர்ந்து நூல்கள் வெளிவர இருக்கின்றன. உடன் பயணியுங்கள்” என தெரிவித்திருக்கிறார்.
வெளியீட்டு நிகழ்வும் விமர்சனக்கூட்டமும் வரும் ஞாயிறு 5.3.2017 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடக்கிறது.