நெடுவாசல் எழுச்சி!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் தொடங்கி தமிழகம் முழுதும் பற்றிப் படறி வரும் எதிர்ப்புகள் எண்ணெய் இயற்கை வள கொள்ளையில் ஏகபோக ஆட்சி செலுத்திவருகிற பெரு முதலாளிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடியாக சேவை செய்கிற மத்திய மாநில அரசுகளின் முகத்திரைகளை கிழித்துவருகிறது.இவர்களின் வர்க்க நலன் அரசியலை அம்பலப்படுத்திவருகிறது. நெடுவாசலில் நிலைகொண்டுள்ள இப்புயல் தமிழகத்தை தாண்டி தில்லியின் ஆளும்வர்க்கத்தை உலுக்கத் தொடங்கியுள்ளது.

நிலக்கரி,கனிம வளம்,எண்ணெய் எரிவாவு என நாட்டின் தேச வளத்தை ஆளும் கட்சியாக இருக்கிற அரசியல் கட்சிகளும்,அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சுரண்டிகொழுத்துவருகிற தனியார் பெரு முதலாளிகளின் வயிற்றில் புலியை கரைக்கத்தொடங்கியுள்ளது தமிழகத்தில் எழுச்சி பெற்றுவருகிற போராட்டம்.

முன்னதாக வங்காள விரிகுடா கடலுக்கு அடியில்,வளமான கோதாவரி-கிருஷ்ணா ஆற்றுப் படுகையை ஒட்டிய 50,000 சதுரகி மீ பரப்பளவை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்திடம் சுரண்டக் கொடுத்து இந்திய அரசு.இந்நிறுவனத்தின் மனம் போன போக்கில் வளத்தை சுரண்டியும்,விலையை நிர்ணயத்தும் லாபத்தை குவித்த கதையை மத்திய அரசின் தணிக்கை குழுவே அம்பலப்படுத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

ரிலைன்ஸ் நிறுவனத்தின் மோசடியை எதிர்த்தும்,இந்நிறுவனத்தால் அரசுக்கு 32,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும்,இப்பணத்தை அபாரதமாக கட்ட வேண்டும் எனக் கூறிய காரணத்தாலேயே 2012 ஆம் ஆண்டில் அப்போதைய எண்ணெய்,எரிவாயு துறை அமைச்சர் ரெட்டி தூக்கி எறியப்பட்டார். வீரப்ப மௌலி அப்பதவிக்கு அமர்த்தப்பட்டு ரிலைன்சின் ஏகபோக சுரண்டலுக்கு சேவகம் செய்தார்.

இந்தியப் பெருமுதலாளிய வர்க்கதின் வளர்ச்சியானது இவ்வாறு தேசத்தின் வளத்தை சுரண்டியும்,மக்கள் வரிப்பணத்தை வங்கிகளின் துணையுடன் முன்கடனாக பெற்று முதலீடு செய்தும்,அரசு துறையுடன் கைகோர்த்து விலையை நிர்ணயத்தும்,வரிச்சலுகை பெற்றும் லாபத்தை குவித்து வருகிறது.டாட்டா,வேதாந்தா,அதானி,ஜிண்டால்,தற்போது ரிலைன்ஸ் என இப்பட்டியல் தொடர்கிறது.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலைன்ஸ் நிறுவனத்தின் இப்போக்கிறிக்கத்தன சுரண்டலுக்கும்,அரசு அதிகாரிகளின்,அரசியல் கட்சிகளுக்குமான உறவை,சுரண்டலை அக்கு வேறு ஆணி வேறாக GAS WARS:CRONY CAPITALISM AND INDIA என்ற நூலில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய குஹா தாகுர்தா,ரிலைன்ஸ் குண்டர்களால் மிரட்டப்பட்டார்.இவர் மீதும் வழக்கும் பதிவு செய்தது.
இந்நூலை வாசித்தால் இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு எவ்வாறு இந்திய அரசு சேவை செய்கிறது,அதன் சுரண்டலை கை கட்டி வேடிக்கைப்ப் பார்க்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.
தற்போது நெடுவாசலில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்,இந்தியா எங்கிலும் எட்டு மாநிலங்களின் 31 இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியே.

2020 ஆண்டுக்குள்,எண்ணெய் எரிவாயு இறக்குமதியை பத்து விழுக்காட்டிற்கு குறைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப கடந்த 2015 ஆம்ஆண்டில் சிறு எண்ணெய் வயல்Discovered Small Field(DSF)கொள்கை உருவாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் எடுப்பு உரிமைக் கொள்கை(HELP)விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டது.அதாவது எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு சுதந்திரமாக விலை நிர்ணயம் செய்துக் கொள்கிற உரிமை வழங்கப்பட்டன,அதன் விருப்பம் போல சந்தைப்படுத்தலும் செய்துகொள்ளலாம்,முன்பண வைப்புத் தொகை கட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் நீக்கப்பட்டன.இந்த நடைமுறை அனைத்தையும் அரசின் எண்ணெய் துறை அமைச்சகத்தின் கீழ் ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் (Directorate General of Hydrocarbons) மேற்கொள்கிறது.

நாம் மேற்குறிப்பிட்டபடி சிறு எண்ணெய் வயல்Discovered Small Field(DSF)கொள்கை திருத்தத்தின் கீழ் இத்திட்டம் செயல்முறைக்கு வருகிறது.பெரும் எண்ணெய் வயல்களின் எண்ணெய் எரிவாயுவை எடுப்பதைப் போல சிறு எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் இயற்கை எரிவாயுவை எடுப்பதை ஊக்குவிக்கிற கொள்கை திட்ட மாற்றத்தை இதன் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வருகிற முயற்சியாகும்.

இம்முயற்சிக்கு
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பானது இந்திய எடுபிடி முதலாளித்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.மாற்ற மாநிலங்களில் எந்த சலனமும் இல்லாத சூழலில்,தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகள் பாஜக அரசை நிலைகுலைய வைக்கிறது.மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவிடுமோ என அஞ்சுகிறது.

எண்ணெய் எரிவாவு எடுப்பிற்கு எதிராக வெடித்துள்ள இப்போராட்டம்,தாது மணல்,ஆற்று மணல்,சுண்ணாம்பு வளம்,கனிம வளம்,நீர்வளக் கொள்ளை எதிராகவும் திரும்பிவருவதை தமிழக அரசு அச்சத்தோடு பார்த்துவருகிறது.எதிர்ப்புகளை போலீஸ் துணையுடன் ஒடுக்குகிறது.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.