தீவிரமடைகிறது சேலம் உருக்காலைப் போராட்டம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

“கார்ப்பரேட்டுகளின் டார்லிங் “ஆன மோடியின் விருப்பத்திற்கு ஏற்ப SAIL நிறுவனமானது, சேலம் உருக்காலைப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.” 2010 ல் சேலம் உருக்காலை விரிவாக்கத்திற்காக வாங்கிய கடன் + வட்டியை செலுத்தவில்லை; நஷ்டம் அடையும் நிறுவனம் ” என அறிக்கை தயாரித்துக் கொடுத்து சேவை செய்தது. தனியாருக்கு பங்குகளை விற்பதற்கு சேலம் உருக்காலையோடு, துர்காபூர்,பத்ராவதி உருக்காலைகளையும் இணைத்துக் கொண்டது.

சில நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பெருங் கடன் நிலுவைகள்/ பாக்கிகள் பின்வருமாறு :-

IOC- ரூ.94,969 கோடிகள், ONGC- 49,126 கோடிகள், HP-47,998 கோடிகளாகும்.

ஏன் சேலம் உருக்காலையை வாங்க விரும்பும் சில கார்ப்பரேட் /பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் வங்கிக் கடன் பாக்கிகள் பின்வருமாறு தான் உள்ளது:-

Jindal Steel & Power – ரூ.36,532 கோடிகள்,
JSW Steel- ரூ.35,527 கோடி,
Tata Steel-ரூ.81,629 கோடிகளாகும்.

சேலம் உருக்காலையின் கடன் ரூ.2300 கோடி என்பது, மேற்கூறிய நிறுவனங்களின் வங்கிக் கடன்களை ஒப்பிடும்போது மிகச் சிறிய தொகையே !

பின் ஏனிந்த தனியார்மய வேகம்?

உருக்குத் துறையில், ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகம் உருவாக மோடி அரசாங்கம் விரும்புகிறது; அதற்கிசைவாக SAIL நிர்வாகமும், பொதுத்துறை உருக்காலைகளுக்கு சமாதி கட்ட பணிபுரிகிறது.

2003 ல், இதே போன்ற விற்பனை முயற்சி நடந்த போது, Global Tender ல் பங்கெடுத்தவர்கள், Tata Steel-Uninor மற்றும் Jindal-Strips மட்டுமே ஆகும். Tata பின்வாங்க, ஜிந்தால் தான் வாங்கும் நிலையில் இருந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு வரவே கைவிடப்பட்டது.

ஏற்கெனவே சேலம்-மேச்சேரி அருகில் பொட்டனேரியில் இருந்த SISCOL உருக்காலையை ஜிந்தால் வாங்கியிருந்தது. ஆனாலும், ஜிந்தால் கண் சேலம் உருக்காலையோடு, அதனருகிலிருந்த இரும்பு தாதுமிக்க கஞ்சமலையையும் அபகரிப்பதில் இருந்தது. 2006-07 காலத்தில், த.நா.அரசாங்கம், ஜிந்தால் உடன் சேர்ந்து கூட்டு நிறுவனம் உருவாக்கி, திருவண்ணாமலை -கவுத்தி மலை & சேலம் கஞ்சமலை நிலங்களையும் வாங்கியது. ஆனால், அப் பகுதி மக்களின் /விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக பின்வாங்கியது. மீண்டும் முயற்சிகளை கையில் எடுக்கிறது.

குடும்பத்தோடு போராட்டம்!


தனியார்மயத்திற்கு எதிராக, சில மாதங்களாக சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை கட்டமைத்து வருகிறது. CITU, LPF,INTUC,PTS மற்றும் சில நிலம் கொடுத்தோர் சங்கங்கள் இணைந்து இயக்கத்தை முன் எடுக்கின்றன. AITUC, HMS, AICCTU போன்ற சங்கங்கள் வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வருகின்றன.

பிப்,25 பெருந் திரள் தர்ணாவில், தொழிலாளர்களோடு, அவர்களது வீட்டுப் பெண்கள், குழந்தைகள் என 2000 ற்கும் மேற்பட்டோர், இரும்பாலை மோகன் நகர் வாயிலில் அணிதிரண்டனர்.

முக்கியமான பேச்சாளர்கள் :- LPF P.இராஜேந்திரன் MLA, CITU S.K.தியாகராஜன், AITUC ந.பெரியசாமி Ex.MLA, PTS R.அருள்,சாம்ராஜ், INTUC வடமலை, VCK நாவரசன், AIDWA ஜோதிலட்சுமி மற்றும் AICCTU சார்பில் சந்திர மோகன், இன்னும் சில பகுதி தலைவர்கள்.

கைத் தட்டல் வாங்குவதற்கானப் பேச்சு அல்ல!

நிலம் கொடுத்தோர் சங்க நிர்வாகிகள் பேச்சில் நிலம் இழந்து வேலையும் கிடைக்காத ஏமாற்றம், தார்மீகக் கோபம் கொந்தளித்தது.

“எங்கள் நிலம், பொதுத் துறைக்குத் தான் தந்தோம், ஒரு பிடி மண்ணைக் கூடத் தனியார் எடுத்துச் செல்ல அனுமதியோம்! ”

அனல் கக்கும் அவர்களது பேச்சைக் கேட்ட போது, சேலம் உருக்காலையை வாங்க விரும்பி பார்வையிட வரும் கார்ப்பரேட் முதலாளிகள், தலைமை நிர்வாகிகள், இரும்பாலையின் கேட்களில் இருந்து தலையோடு திரும்புவார்களா என்ற அய்யமும் ஏற்பட்டது.

உருக்காலை தனியாருக்குச் சென்றால், அங்கு பயன்படுத்தாத 3000 ஏக்கர் நிலத்தில் வந்தமர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் போலும் தெரிகிறது.

40 ஆண்டுகள் ஏமாற்றத்தின் மீதான கோபம் பற்றுகிறது போராட்டம்..

சேலம் மாவட்ட எடப்பாடி என்ன செய்யப் போகிறார்? SSP தனியார்மய எதிர்ப்புக்கு தமிழக முதல்வர் பணியாற்றவில்லை எனில், அவரது வீழ்ச்சிக்கும் சேலம் உருக்காலைப் போராட்டம் வித்திடும் எனத் தெரிகிறது. தமிழக பாரதீய ஜனதாவிற்கும் இது ஒரு சோதனைக் களம். மோடியை ஆதரித்தால் பின்னடைவு நிச்சயம்!

மெரீனா எழுச்சிக்கு திரண்டது போல, மாணவர்கள் வர வேண்டும்!

நிறைவுரையில், தோழர்.SKT :-

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா எழுச்சியில் பங்கேற்றது போல, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தருவது போல… தமிழக மாணவர், இளைஞர்களை ஈர்க்கும் போராட்ட மையமாக சேலம் உருக்காலை மாற வேண்டும் ”

கார்ப்பரேட்டுகளுக்கு எச்சரிக்கை !

இதுவும் நடக்கும்…நிலம் கொடுத்தோர் சொன்னதும் நடக்கும்… மோடியின் வாக்குறுதியை நம்பி சேலம் வராதீர்கள்!

மக்கள் கோபம் உங்களை சும்மா விடாது.  “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ” என்றொரு வாக்கியம் தமிழில் உண்டு.

கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக, இந்திய தொழிலாளி வர்க்கத்திடமிருந்து மோடியும் கூட தப்ப முடியாது. ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தின் சக்தி மகத்தானது.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.