திசை திருப்புகிறதா தமிழக சட்டம்?: திருமாவளவன்

சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவில்லையா அல்லது அவர் தமிழக அரசைத் தவறாக வழிநடத்துகிறாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ‘’2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. அதுபோலவே முதுநிலைப் படிப்புகளுக்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்படுவதால் தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதவேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு பின்னர் கடந்த ஜூலை 2016 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) சட்டம் 2016 என அழைக்கப்படும் அந்த சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையிலும்தான் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டத்துக்கு திருத்தம் செய்தோ அல்லது அதற்கு முரணாகவோ மாநில அரசு சட்டம் இயற்றினால் அது செல்லுபடியாகாது. எனவே, நுழைவுத் தேர்வு தேவையில்லை என இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் ரத்தாவது உறுதியென சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவில்லையா ? அல்லது அவர் தமிழக அரசைத் தவறாக வழி நடத்துகிறாரா ? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

தற்போதுள்ள சேர்க்கை முறை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உதவியாக இருக்கிறது என்பதுபோல சிலர் பேசுகின்றனர். அது தவறு என்பதை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 37 பேர்; 2015-16 ஆம் ஆண்டில் அது 24 ஆகக் குறைந்துவிட்டது. மருத்துவப் படிப்பில் 95% இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பெறுகிறார்கள். பள்ளிக் கல்வியும் மருத்துவக் கல்வியும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையை மாநில அரசு உருவாக்கிவிட்டு, கிராமப்புற மாணவர்களுக்கு உதவவே சட்டம் கொண்டுவருகிறோம் என்பது ஏற்புடையதல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டாமல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் கொடுக்காமல் இப்படி சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக மட்டுமே பயன்படும். இதை நம்பி தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது நுழைவுத்தேர்வு வேண்டாம் எனக் கூறுகிற மாநிலங்களுக்கு விலக்களிக்கும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

One thought on “திசை திருப்புகிறதா தமிழக சட்டம்?: திருமாவளவன்

  1. தனிழீழம் என்ற நியாயமான, அவசியமான, இயல்பான அபிலாசைகள் இலங்கைத் தமிழர்கள் அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது. அனைவரும் குரல்கொடுத்தார்கள்; ஒருசாரார் அதற்காக கடுமையாகப் போராடினார்கள், போராடிவருகிறார்கள்.
    ஆனால் இலங்கைத் தமிழ் மேட்டுக்குடியினர் போராடுவது போல் பாசாங்கு காட்டினார்கள். இழைஞர்களை தூண்டிவிட்டார்கள்; இழைஞர்களின் பாதை தவறானது என்பது தெரிந்தும், மௌனம் காத்தார்கள்; வானளவு பாராட்டி அவர்களை “பப்பாவில் ஏற்றிவிட்டார்கள்”(முறிந்து விழக்கூடிய மரத்தில் ஏறவைப்பது). ஆனால் தாம் தொடர்ந்தும் இலங்கையின் ஆழும் வர்க்கமாக இருப்பதிலேயே நாட்டங்காட்டி வந்தார்கள், வ்ருகிறார்கள், வருவார்கள். இதனால் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அரசியல் தலைமையாக விளங்கும் சிங்கள பேரினவாதிகளுடன் முடிவோ, சலிப்போ இல்லாத ஒரு சமரசப் போக்கைக் கையாண்டு வருகிறார்கள்.
    இதேவிதமான போக்கு தமிழ்நாட்டிலும் துரிதமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டு மேட்டுக்குடி இந்திய மேட்டுக்குடியின் பிரிக்கவொண்ணா அங்கமாக ஆவதையே தனது நோக்கமாகக் கொண்டதாகும். ஆகவே என்னவிலை கொடுத்தும் இந்திய கடும்போக்கு இந்துத்துவவாதிகளுடனும். மென்போக்கு இந்துத்துவ வாதிகளுடனும் ஒரு சமரசத்தை பேணுவதை இவர்களின் வரலாறாக இருந்து வருகிறது. இவ் வரலாறு தொடரும். மேட்டு மாநில நீர் பங்கீட்டுப் பிரச்சனை, விவசாயப் புறக்கணிப்பும் விவாசிகளின் அவலங்கள் பிரச்சனை, தமிழ்நாட்டு மீனவர்கள் ப்ரச்சனைநீட் பரீட்சை ஆகியவற்றில் இவர்களின் நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணங்களாகும். இவ் விவகாரங்களில் மத்தியரசுடன் ஒரு திரைமறைவு உறவைப்பேணியே வ்ருகிறார்கள்.
    மாநில நலனுக்கான போராட்டம் என்ற அதையாவது நடத்தி தம்மை உருமறைப்புச் செய்வதில் இவர்கள் மா கில்லாடிகள். ஆகவே நீட் தேர்வு விடயத்தில் இவர்கள் ஆடுவது ஒரு நாடகமேயாகும். கிராமப்புற படித்தவர்கள் உயர்கல்வி எனும் மண்டபத்துள் செல்வதற்கான வாசல்கள் அனைத்துமே ஏற்கனவே இறுக்க மூடப்பட்டுவிட்டது. கல்வி மேட்டுக்குடியின் பட்டியலுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நீட் வேண்டாம் என்பதல்ல பிரதான போராட்டம், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதே பிரதான போராட்டமாக இருக்கவேண்டும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.