சந்தை நிலையை காரணம் காட்டி, தனியார்மயம்… பட்ஜெட்டில் மத்திய அரசு செய்யப்போவது இதுதானா?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

உலகப் பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் 3.1 % விழுக்காடிற்கு தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில்,சர்வதேச அரசியல் அரங்கில் ரஷ்யா-சீனா-ஈரான் கூட்டணி புதிய உலக அடுக்காக வளர்ந்து வருகிற நிலையில்,அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் அதிரடி protectinist கொள்கையானது உலகப் பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படுத்திவருகிற நிலையில், நாளை இந்தியாவின் ஆளும்வர்க்கம் 2017-18 ஆண்டிற்கான பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்-பொருளாதார நிகழ்வாக காணவேண்டியுள்ளது.

இந்திய முதலாளிய வர்க்கத்தைப் பொறுத்தவரை அதன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் எந்த இடத்திலும் புரட்சிகர தன்மையிடைய வர்க்கமாக இருக்கவே இல்லை.மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிற அரசின் மூலதனத்தை ஒட்டுண்ணித்தனமாக சுரண்டி வளர்ந்த குறைத்தன்மையுடைய முதலாளிய வர்க்கமாக உள்ளது.இன்றும் தொழிற்துறை மூலதனத்தில் அதன் முதலீடு குறைவுதான்.மாறாக சேவை, ஊக வணிகம், தொலைத்தொடர்பு என அதிக முதலீடும், ஆபத்தும் இல்லாத, அரசை சுரண்டிப் பிழைக்கிற வர்க்கமாக இந்திய முதலாளிய வர்க்கம் உள்ளது.

இந்திய அரசு, அரசியல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் இந்த வர்க்கம் உலகப் பொருளாதாராத்தில்(தொழிற்துறை சந்தையில்) வெற்றிகரமாக இணைத்துக் கொள்ள இயலவில்லை.உலகப் பொருளாதாரத்தில் போட்டி போட இயலவில்லை.மாறாக சேவைத் துறையின் துணையுடன்,வளர்ந்து வருகிற நாடாக தன்னை மிகைப்படுத்திக் காட்டிக் கொள்கிறது.

உலகளவில், தொழிற்துறை மூலதனத்தை உறிஞ்சி விரைவாகவும் விரிவாகவும் வளர்ச்சி பெற்று வருகிற நிதி மூலதனத்தின் ஆதிக்கமானது பெரும் பொருளாதார நெருக்கடிகளில் உலகைத் தள்ளி வருகிறது.இந்த நிலையில் தொழிற்துறை முதலீட்டில் பின்தங்கிய, குறைத் தன்மையுடைய ஒட்டுண்ணித்தன இந்திய முதலாளிய வர்க்கத்தால் இந்தியப் பொருளாதாரத்தை மீட்க முடியாது.

இந்நிலையில் வரவுள்ள பட்ஜெட் எதிர்பார்ப்புகளாக

• உலகளவில் சந்தை நிலை மந்தமாக உள்ள காரணத்தால், இந்திய அரசின் வசமுள்ள நிறுவனங்களை, தனியார் மயப்படுத்தக் கோரும்
• வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசின் மூலதன பங்கீட்டை முதலீட்டைக் கோரும்
• தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தக் கோரும்.
• சேவை வரி மசோதாவை மிகைப்படுத்தி பெரும் சாதனையாக கூறும்
• ரயில்வே நிறுவனம், தனியார் மையப்படுத்துகிற முயற்சிக்கான பரிசோதனைகள் நடத்தப்படும்
• இந்திய பெரு முதலாளிகளுக்கான வரி விலக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்டும்
• ஸ்மார்ட் சிட்டி திட்டம், துறைமுக திட்டங்கள் பாரிய அளவில் மிகைப்படுத்திப் பேசப்படும்
• அரை நூற்றாண்டு காலமாக, இந்திய விவசாயத்திற்கு துரோகம் செய்து வருகிற இந்திய முதலாளிய வர்க்கம், இப்போதும் தனது வழக்கமான பாணியைத் தொடரும்
• உலகமயத்திற்கு பின்பாக தடுமாறி வருகிற சிறு குறு தொழில்நிறுவனங்கள் வழக்கம் போல புறக்கணிக்கப்படும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால்,

• இந்திய அரசு “சேம நல அரசு” என்ற தண்மையில் இருந்து மாறி வருகிற இடைநிலைக் கட்டத்தின் இறுதி சுற்றில் உள்ளத் தன்மை
• இந்திய முதலாளிய வர்க்கத்தின் தொடர்கிற பிற்போக்கான வளர்ச்சி
• உள்நாட்டில் அதிகரிக்கிற வேலை வாய்ப்பின்மை
• உலக ஏகாதிபத்திய முகாம்களில்,மாறிவருகிற நிலைமைக்கு ஏற்ப எந்தப் பக்கத்தில் அணி சேர்வது என இந்திய ஆளுவர்க்கதிற்கு ஏற்பட்டுள்ள குழப்பம்
மாபெரும் இக்கட்டான நிலையில் பாஜக அரசை நிறுத்தியுள்ளது.

மக்களுக்கும் இந்திய ஆளுவர்க்கத்திற்கும் தவிர்க்கவே இயலாத வகையில் முரண்பாடு முற்றி வருகிறது.இங்கு கேள்வி என்னவென்றால் எவ்வளவு விரைவாக தனக்கான சவக்குழியை இந்திய முதலாளிய வர்க்கம் தோண்டிக் கொள்ளும் என்பதுதான்.அடுத்த இரண்டு வருடத்திலா அல்லது ஐந்து வருடத்திலா என்பதுதான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.