ஆர். ராமமூர்த்தி
எது இனி நடக்கவே கூடாது என நினைத்தோமோ அது நடந்தேவிட்டது…
சிறுத்தைக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் சத்தம் ஓயவே இல்லை அதற்குள் ஒருபுலி கொல்லப்பட்டுவிட்டது…
அதுவும் சிறுத்தைச் சம்பவத்தைப் போலவே வனத்துறையினர் முன்பாகவே நடந்திருக்கிறது என்பதை அறியும்போது வனவிலங்களை நினைத்து வருத்தப்படுவதா ?
பரிதாபப் படுவதா ?
அதிகாரிகள்மீது கோபப் படுவதா ?
மக்களின் அறியாமையை எண்ணி எண்ணி சிரிப்பதா?
என்ன செய்வது ?…
அந்த வேதனைச் சம்பவம் கடந்த வியாழன்ன்று(24.11.16) வடகிழக்கு மாநிலமான அஸாமின் ஜோஹட் மாவட்டத்தலை நகரிற்கு அருகிலேயே அதாவது ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள பக்மாரா பகுதியிலுள்ள சந்த்பார் கிராமத்தில் நடந்திருக்கிறது…
முழுவளர்ச்சியடைந்த ராயல் பெங்கால் பெண்புலி காஸிரங்கா வனப்பகுதியிலிருந்து வழிதவறியோ அல்லது இரைதேடியோ பிரம்மபுத்திராவின் தேன்கரையிலுள்ள இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறது புலிநடமாட்டம் பற்றி வனத்துறைக்கு தகவல்கூட சென்றதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்போல் வனத்துறையும் வேலை செய்திருக்கிறது…
பிறகென்ன வனத்துறையை வைத்துக்கொண்டே புலியைக்கொன்று பல், நகம், வாலையும் இன்னும் சில பாகங்களையும் வெட்டித் தூக்கிச் சென்று விட்டனர்…
மக்கள் மிரட்டினார்களாம் வனத்துறையினர் பேசாமல் இருந்து விட்டார்களாம்… என்னதான் நடக்கிறது அங்கே? இருண்ட இடங்களா அவை ?
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் சில ஆண்டுகளில் புலி,சிறுத்தை மற்றும் யானைகளைப் பார்க்க வட இந்தியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக இங்கே வரப்போகிறார்கள்…
அரசு…
உயிரின ஆர்வலர்கள்…
சட்டம்…
இவையெல்லாம்அங்கும் இருக்கிறதா?…
ஆர். ராமமூர்த்தி, சூழலியல் செயல்பாட்டாளர்.