மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; கேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலாம்பூரில் நடந்த மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் இரு மாவோயிஸ்டுகள் கேரள போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் வழக்கறிஞர் அஜிதா என்கிற காவேரி (வயது 45),  குப்புசாமி என்கிற குப்பு தேவராஜ் (வயது 60) என தமிழக போலீஸ் டெக்கான் கிரானிக்கல் நாளிதழுக்கு அளித்த தகவலில் தெரிவித்திருக்கிறது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அஜிதா,  சென்னை கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் மாவோயிஸ்ட் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டு,  கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்ததாக டிசி ஏடு தெரிவிக்கிறது. அதோடு தமிழக போலீஸில் அவர் மீது எந்தவித குற்றப் புகாரும் இல்லை என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,  தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல கமிட்டியின் மூத்த செயல்பாட்டாளர். 90களில்  நடந்த மதுரை வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் டிசி ஏடு சொல்கிறது. கொள்ளை சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவர், பிறகு தலைமறைவானார் எனவும் செய்தி சொல்கிறது.

இருவரும் கர்நாடக வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் நக்ஸலைட் கொள்கைகளைப் பரப்பும் பணியில் இருந்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் பத்மா, மணிவாசகம், கார்த்திக், மகாலிங்கம், வேல்முருகன், காளிதாஸ், பகத் சிங் ஆகிய நக்ஸலைட் செயல்பாட்டாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் டிசி ஏடு குறிப்பிட்டுள்ளது.

One thought on “மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; கேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை

  1. தோழர் அஜிதா.
    தோழர் அஜிதாவின் குடும்ப பின்னணி அரசியல் பின்புலம் கொண்டது.அவரது பெயரே அவர் எம்.எல் பின்னணி கொண்டவர் என்பதை புலப்படுத்தும். அவரது தந்தை பரந்தாமன் இறக்கும்வரை மக்கள் யுத்தக்கடசியின் இருந்தவர். இரயிவே தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர் . அவர் தந்து மகளையும் அரசியல் ரீதியாக வளர்த்த்தார். அஜிதாவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் தியாகி தோழர் ரவீந்திரன் ஆவார்.
    சடடபடிப்பை முடித்த அஜிதா நீதிமன்றத்தில் செயல்பட மறுத்து முழுநேர ஊழியரானார். தமிழ்நாடு பெண்ணுரிமை கழகத்தில் செயல்படட அஜிதா அதன் பொதுச்செயலரானார்.ஊத்தங்கரை மோதலை ஒட்டி த.பெ.க.தடை செய்யப்படட பொழுது அஜிதா தலைமறைவானார். இதற்கு பிறகு இவரது செயல்பாடுகளை பற்றி எனக்கு தெரியாது.
    இவரது சிறப்பம்சங்களில் ஒன்று அரசியல் அமைப்பில் உறுதிப்பாடு ஆகும்.இதற்கு நல்ல எ-டு இவரது சொந்த வாழ்க்கை ஆகும்.இவருக்கு வாழ்க்கை ஒப்பந்தம்[திருமணம்] நிசசியமானது.சிறிது காலம் கழித்து அவரது இணை அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்தார்.அஜிதா அவருடன் செல்ல மறுத்து விடடார்.வாழ்க்கை ஒப்பந்தத்தை ரத்து செய்தார்[ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் 99.9% பெண்கள் தங்களது இணையுடன்[ஆண் ] சென்று விடுகின்றனர்].தனது சொந்த வாழ்க்கையை இறுதிவரை அரசியல் அமைப்புடன் பிணைத்துக்கொண்டு உறுதியுடன் வீரமரணம் அடைந்த தோழர் அஜிதாவை போற்றுவோம்!

    தோழர் துரைசிங்கவேல்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.