புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பறையாட்ட விழிப்புணர்வு போராட்டத்தை, சென்னை பல்கலையில் மாணவியர் குத்தாட்டம் என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.
இதற்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தினமலரின் இத்தகைய போக்கைக் கண்டித்து மாணவர்கள் தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் நடத்தினர்.
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரளவே பயன் தரும். மாறாக மான நட்ட வழக்கு போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் புகார் செய்தல் போன்றவை குறித்தும் பரிசீலிக்கலாம். தினமலர் போன்ற பத்திரிகைகளை புறக்கணிக்கக் கோரி பிரச்சாரம் செய்யலாம்.
LikeLike