“ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

நந்தன் ஸ்ரீதரன்

நந்தன் ஸ்ரீதர்
நந்தன் ஸ்ரீதர்

நிறைய நண்பர்கள் மோடியின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நெருங்கிய நண்பன் ஒருவன் கூட இதை வரவேற்பதாக போனில் சொன்னான். நல்ல வேளை போன் லைன் கட்டாகிவிட்டது..

மோடியின் இந்த முடிவின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று நம்பும் அப்பாவி நண்பர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியாக நம்பும் நண்பர்களில் மெத்தப் படித்த அறிவுஜீவி நண்பர்களும் இருப்பது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது..

வரி கொடாமல், கணக்குக் காட்டாமல் வங்கிகளில் சேர்ப்பிக்கப் படாமல் ரொக்கமாக பதுக்கி வைத்திருக்கும் பணமே கறுப்புப் பணம்.. இல்லையா..?

சரி.. மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் என்ன நடக்கும்..?

உடனே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் முன் வந்து தங்கள் கறுப்புப் பணத்தை அறிவித்துவிட்டு ஜெயிலுக்குப் போகப் போகிறார்களா..? இல்லை.. இப்படி மாட்டுவதற்கு பதிலாக பணத்தை எரித்து விடலாம் என்று எரித்து விடப் போகிறார்களா..?

நிச்சயம் இரண்டும் நடக்காது என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

அம்பானி, அதானி போன்ற பெரும் கோடீஸ்வர வரிஏய்ப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பால் பெரிய பாதிப்பு இல்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.. ஒரு வேளை அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று தெரிந்தால் நிச்சயம் மோடியே இந்த மாதிரி முடிவை அறிவித்திருக்க மாட்டார்..

அப்புறம் யாருக்கு இந்த பாதிப்பு..?

லோக்கல் பணக்காரர்களில் கணக்கு காட்டாமல் சில பல லட்சங்களையோ சில பல கோடிகளையோ பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களுக்கும் ஐநூறு ஆயிரம் கோடி ரூபாய்களாக பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும்தான் பாதிப்பு இருக்கும்..

சரி..

இவர்கள் இந்த அறிவிப்பால் என்ன மாதிரி பாதிக்கப் படப் போகிறார்கள் மற்றும் இந்த அறிவிப்பால் என்ன மாதிரியான நன்மை இந்த நாட்டுக்கு விளையப் போகிறது.?

யோசித்துப் பாருங்கள்.. நான் முன்னமே சொன்ன மாதிரி அவர்கள் ஜெயிலுக்குப் போகவோ அல்லது பணத்தை எரிக்கவோ மாட்டவே மாட்டார்கள்.. மாறாக உள்ளூர் பாஜக விஐபியில் இருந்து நேரடியாக மோடி வரை அப்ரோச் பண்ணப் போகிறார்கள். என்னிடம் இவ்வளவு கறுப்புப் பணம் இருக்கிறது.. அதில் இவ்வளவு உங்களுக்குத் தந்து விடுகிறேன். இவ்வளவை எனக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லப் போகிறார்கள். அவ்வளவே.. கீழிருந்து மேலாக கமிஷன் போக அவர்களுக்கு கொஞ்சம் மிஞ்சப் போகிறது..

இதில் யார் கொழிக்கப் போவது..? ஏற்கெனவே லஞ்சப் பணத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக பிரமுகர்களும் பாஜக கட்சியினரும் மட்டுமே..

ஆக இந்த அறிவிப்பு பாஜக வுக்கு அறுவடை காலம்.. நம் மக்களுக்கு மட்டுமே சிரம காலம்.. தினமும் ஐநூறு ரூபாய் கூலி வாங்கும் தொழிலாளி இரண்டு நாளுக்குப் படாத பாடு படப் போகிறான். ஏற்கெனவே செலவுக்குப் பணம் எடுத்து வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினன் படாத பாடு படப் போகிறான்..

மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நண்பனிடம் கேட்டேன்.. ஏன்ப்பா.. ஒண்ணரை சதம் பணக்காரர்களிடம் இருந்து இந்த திட்டத்தின் மூலம் கறுப்புப் பணத்தை மோடி வெளியே கொண்டு வந்து விடுவார் என்று நீ நம்புகிறாயா என்று.. அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் இந்த திட்டத்துக்காக நம் நாட்டு மக்கள் இரண்டு நாள் கஷ்டப் பட்டால் பரவாயில்லை என்றான் அவன்..

இதுதான் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்களின் பொது மன நிலை.. அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளும் டெபிட் கார்டுகளும் உள்ளன.. பொருள் வாங்கவோ வேறு எதற்குமோ அவர்களுக்குப் பிரச்சினை இல்லை.. எளிய மக்களின் சிரமங்களைப் பற்றி அவர்களுக்கு பிரச்சினையே இல்லை..

ஒரு வேளை அவர்கள் எளிய மக்களில் இருந்து முன்னேறி இருந்தாலும் எளிய மக்கள் பற்றி அவர்களுக்கு எள்ளளவும் கவலை இல்லை.. ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. ரெண்டு நாள் அவர்கள் கஷ்டப் பட்டால் என்ன போச்சு என்று மனிதாபிமானமே இல்லாமல் பேசுவார்கள்..

மொத்தத்தில் இந்த அறிவிப்பால் பாஜகவின் கஜானாவில் கறுப்புப் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டப்போகிறது.. எளிய மக்களின் பசித்த வயிறு மேலும் காயப் போகிறது.. அவர்கள் கையில் இருக்கும் ஒன்றிரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை மாற்ற அவர்கள் அலைந்து சீரழியத்தான் போகிறார்கள்.. இதைத் தவிர வேறேதும் புரட்சி நடந்துவிடப் போவதே இல்லை..

நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர்; வசனகர்த்தா.

முகப்புப் படம்: Maria Vincent Robinson

One thought on ““ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

 1. ஐநூறு/ஆயிரம் *மட்டுமே* வைத்திருப்பவர்களுக்குத் தான் பிரச்சனை. அதாவது, மட்டுமே.

  //தினமும் ஐநூறு ரூபாய் கூலி வாங்கும் தொழிலாளி //
  தினம் இவர் ஒத்தை நோட்டா வாங்கி அதை உடைச்சு தான் செலவு பண்ணிட்டு இருந்தாரா என்ன. இல்லை இல்லீங்களா?

  இது வரைக்கும் முதலாளிங்க கட்டாயப்படுத்தி ஒத்த நோட்டாத் தான் கொடுத்தாங்கன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம், இனிமேலேர்ந்து முதலாளிங்க அப்படி தர முடியாது இல்லையா. அதுனால தினப்படி செலவுக்கு இந்த தொழிலாளிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

  “இன்னிக்கு டீ கூட சாப்பிட முடியலை” போன்ற சோகக்கதைகள் எல்லாம் நம்புறமாதிரி இல்லை. இன்னைக்குன்னு இல்லை, என்னைக்குமே சிங்கிள் டீ குடிக்க
  500 நோட்டை நீட்டினா, டீக்கடைக்காரர் பாய்லர் வெந்நீரை மூஞ்சில ஊத்திருவார்.

  அதுனால மக்கள் தினப்படி 500 நோட்டை செலவழிச்சு தான் சாப்பிட்டாங்க/ வேலைக்கு பயணப்பட்டாங்க்கன்னு நம்புறதுக்கில்லை. பதட்டத்துல, 500 offload பண்ன முயன்று அவதிப்பட்டாங்கன்னு தான் எடுத்துக்க முடியும்.

  இப்போ சேமிப்புக்கு வருவோம்: 500/1000 தாள்கள்ல மட்டும் சேமிப்பை கையிருப்பா வைச்சிருக்கவங்க சேமிப்பு எல்லாம் ராவோட ராவா பஸ்பம் ஆயிடுமா? அதுவும் இல்லை. வங்கில போடலாம்/மாத்தலாம்.

  நமக்கு தெரிஞ்சவங்கள்ட்ட எல்லாம் தெளிவா சொல்ல வேண்டிய விஷயம்: உங்க பணத்துக்கு ஒண்ணும் ஆகாது.

  ஆனா இதுல ஒரு பெரிய பிரச்சனை இருக்கு தான். யாருக்கு: undocumented மக்களுக்கு. அந்த பிரச்சனையை மட்டும் பேசுவோம்.

  அவங்க என்னல்லாம் பண்ணலாம்: மார்ச்’க்குள்ள எதாவது ஒரு அட்டை வாங்கணும். அதை வச்சு வங்கி கணக்கு திறந்தோ, திறக்காமயோ காசு மாத்தலாம்.

  அட்டை வாங்குறதுக்கு ஆபீசருக்கு லஞ்சம் நூறுருவா தாள்களா தரவேண்டி வரும்!.
  இந்தச் சுரண்டலுக்கு ஆள் ஆகத்தான் போறாங்க.

  There is no easy way around it. (அப்படின்னு நான் easyஆ சொல்லிட்டேன்)

  குறைஞ்சபட்சம் நாம என்ன பண்னலாம்?
  சின்ன சின்ன அளவுல நமக்கு தெரிஞ்ச unbanked நபர்களுக்கு நாம மாத்தி கொடுக்கலாம். ஒவ்வொருத்தரும் நிறைய பண்ணிட முடியாது – அப்புறம் நீங்க ITல பதில் சொல்ல வேண்டி வரும். ஆனா முடிஞ்சவரை பண்ணலாம்)

  This is not a solution but a mitigation on behalf of the vulnerable.

  நாம ஏன் இவ்வளவு மெனக்கெடணும்: தாளிலா பணப்பறிமாற்ற பழக்கத்தை ஊக்குவிக்குறது நல்லது தானே. 10-15 வருஷம் முன்னாடி இவ்வளவு பேர் ATM, counterfoil stamp இல்லாத cheque drop-boxஐ எல்லாம் பயன்படுத்துவாங்கன்னு நாம நினைச்சுப் பார்த்திருப்போமா? அதோட அடுத்த கட்ட நகர்வா இதை பார்க்குறேன்.

  மத்தபடி இதன் நோக்கம் கொள்ளை மட்டுமே அப்படிங்க்ற உங்க வாதம் குறுகலா தோணுது. காசா வச்சிருக்குறது செல்லாதுன்னா எப்படி ‘அறுவடை’ ஆகும்னும் தெளிவா புரியலை.

  That said, இந்த அறிவிப்புல எனக்குப் புடிக்காதது ஒண்ணு உண்டு: புது 500, 2000 தாள்கள்! எதுக்குய்யா?

  100 தான் உச்சகட்டம்னு உறுதியா இருக்க வேண்டிதானே. 10,000 ரூபா செலவு அழிக்கணும்னா 1 கட்டு சுமந்துகிட்டு போகணும் அப்படிங்கிற அசௌகரியம் இருக்கணும்.

  2000 ரூபா தாள் அப்படிங்கிற வசதிக்கு பழகிட்டா, மக்களை தாளிலா பணப்பறிமாற்றத்துக்கு கொண்டு வரது இன்னும் கஷ்டம் ஆகும்.

  Of course, கொள்கை அடிப்படையிலேயே: ” அரசாங்கத்துக்கு என்னுடைய ஒவ்வொரு transactionஉம் தெரிவது எனக்கு விருப்பமில்லை” அப்படின்னு நினைக்குறவங்க இருக்காங்க. அந்த மாதிரி சொன்னீங்கன்னா, அது வேற விவாதம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.