மநகூ தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே: பேரா. அருணன்

மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே என பேராசிரியர் அருணன் கருத்திட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,

“மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு முக்கிய காரணம் அதிமுகவும் திமுகவும் அவிழ்த்து விட்ட பணபலமும் ஊடக பலமும். கூடுதல் காரணம் எது என்றால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது. அதுவும் கூட்டணியின் இதர கட்சி தலைவர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தது. போட்டியிடுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் அவர் மறுத்தது. இது வாக்காளர்கள் மத்தியில் கூட்டணி பற்றிய அவநம்பிக்கையை உருவாக்கியது. அதிமுக ஆட்சி மீது மக்களுக்கிருந்த அதிருப்தியின் பலனை திமுக தேர்தலில் அறுவடை செய்து கொண்டது. அதிமுக-திமுக இருதுருவ அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நல்ல நோக்கம் தோல்விகண்டு இன்னும் கறாரான இருதுருவ அரசியலாய் வந்து நின்றது. இந்த உண்மையை ஏற்காமல் வேறு ஏதேதோ காரணங்களை வைகோ அவர்கள் முன்வைப்பது நியாயமான அரசியல் ஆய்வு அல்ல” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்வினையாக வந்துள்ள சில கருத்துகள்…

உத்திர குமாரன்: மாற்று அணிக்கு இடதுசாரிகள் தலைமைப்பொறுப்பு ஏற்காதவரை இப்படித்தான் ஆகும்.

செல்வின் பிச்சைக்கனி: தேமுதிக மற்றும் தமாக வை சேர்த்ததும் காரணங்கள். கூட்டணியில் இருந்த மிகத்திறமையான ஆளுமையான தலைவரை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்காததும் தவறு.

அண்ணாமலை: அதுதான் சிறப்பான உண்மை.அது மட்டும் அல்ல.அவரின் வரம்புக்கு உட்படாத எல்லை மீறிய தேர்தல் பிரச்சாரமும் சேர்ந்துதான் பாதிப்பை ஏற்படுத்தியது.

ராஜமணி: வைகோவின் ஆளுமையை ஒடுக்கிவிட வேண்டும் என்று விரும்பும் சக்திகள் தற்போது வேகமாக இயங்குகின்றன. அடிப்படை நோக்கம் கடந்த 15 மாதகாலமாகவே மக்கள்நலக்கூட்டணி எனும் மாற்று அரசியலை விரும்பாத பல சுயநல சக்திகள், பணபலம், ஊடகபலம், அவதூறு பிரச்சாரம் போன்றவைகளை கையிலெடுத்து இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே வைகோ வின் மீதான தனிப்பட்ட தாக்குதலை அந்த சக்திகள் கையாளுவதை மதிமுக தவிர மற்றவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

நடன சுந்தரம்: ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்கிறது கம்யூனிஸ்ட்களை எங்கு வைக்க வேண்டும் என்று..வைகோ அவர்களுக்கு தெரியவில்லை.. எல்லோரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினால் இப்படி தான்.. இனியேனும் வைகோ அவர்கள் கட்சியின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும்.

நாகூர் மீரான்: மநகூ வீழ்ச்சியடைய முதல் காரணமே விஜயகாந்த் உடனான கூட்டணி தான்.. இல்லையென்றால் குறைந்தபட்சம் திருமா ஒருவராச்சும் வென்று இருப்பார்.

விஜயகாந்தை ஒரு காமெடியா பார்த்து ரசிச்சங்களே தவிர அவரை பொறுப்பில் வைத்து பார்க்க மக்கள் விரும்பவில்லை .. அதனால் அவரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் புறக்கணித்து திமுக பக்கம் கணிசமாக சென்று விட்டனர்

விஜயகாந்தை உள்ளே கொண்டுவந்ததுமே மநகூ பற்றிய பிம்பம் பரவலாக போய்விட்டது .. அதன்பின் வைகோ செய்த செயல்கள் .. வைகோவை எல்லாம் யாரும் ஆரம்பத்துல இருந்தே நம்பல ..அதனால அவர் செய்தது எல்லாம் ஒரு காரணமாகவும் எடுத்துக்கொள்ள இல்லை என்பதே நிதர்சனம்.

வைகோவை விரட்டிவிட்டுட்டு இரண்டு கம்யூனிஸ்ட் , விசிக மட்டுமே இருந்திருந்தாலும் இந்நேரம் கூடுதல் வாக்குகள் அதனால் வந்திருக்கும் என்பது மறுக்க இயலாது.

செய்யது அலி மு: மக்கள் நலக்கூட்டனி தோற்றதற்கு வைகோ தான் முக்கிய காரணம் அடுத்தது அதிமுக திமுகவின் பணமும் விஜயகாந்தின் மேடைப்பேச்சும் சரியா இல்லாததும் தான் வைகோவின் செயல்பாடுகள் எல்லாமே அதிமுகவிற்கு சாதகமானதாக தோன்றியதும் காரணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.