“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன் 

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வங்கி ஊழியர் குறித்து இப்படிச் சொல்கிறார் ’தேவாங்கு’. செந்தில்ராஜ் என்பவர் வங்கி ஊழியர் ஒருவர் (அநேகமாக அவர் ஏதேனும் மருத்துவ பிரச்சினைக்கு ஆளானவராக இருக்கலாம்) மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றை அனுப்பி அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் எழுதியவை:

“நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.

எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!”.

அந்த வீடியோ

ஜெயமோகனின் இந்தப் பதிவுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி, “ஒரு வங்கி பெண் ஊழியரின் வீடியோவைப் போட்டு அநாகரிகமாக அது பற்றி ஒரு ‘எழுத்தாளன்” எழுதியிருப்பதைப பார்த்தேன். வக்கிரமும் வன்மமும்பொய்யும் புனைசுருட்டும் நிரம்பித்ததும்பும் மனதிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் ? எழுத்தாற்றல் என்ற முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு”.

 

அரவிந்தன் கண்ணையன்:

தவறு ஜெயமோகன், மிகவும் தவறு!

ஜெயமோகனின் இந்தப் பதிவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது பல கோணங்களில் தவறு.

ஒருத் தனி மனிதன் வேலைப் பார்க்கும் இடத்தில் அவரை வீடியோ எடுத்து அதைப் பகிர்வது மிகவும் தவறு. இது உரிமை மீறல். அந்த அலுவலர் சட்ட வீரோதமாக எதையாவது செய்திருந்தால் அதை வீடியோ எடுப்பது வேறு. இவரோ தன் வேலையை செவ்வனேச் செய்கிறார்.

அரசாங்க அலுவலர்களின் அலட்சியம், சோம்பல், எதேச்சாதிகாரத்தனம் எல்லாம் என்னை எப்போதும் எரிச்சல் படுத்துபவை. அமெரிக்காவிலும். ஆனால் இப்பெண்மனி மிக மெதுவாக செயல்பட்டார் என்பதைத் தவிர அவர் வேலையை கவனமாகவேச் செய்வதுப் போல் தெரிகிறது.

அவர் பெண் என்பதாலேயே ‘கிழவி’ என்கிறீர்கள், வீட்டில் கீரை ஆய்பவர் என்று ஞான திருஷ்டியால் பார்த்ததுப் போல் வேறு வசவு. அந்தப் பெண்மனிக்கென்று குடும்பம் இருக்கும், பிள்ளைகள் இருப்பர். அவர்கள் மனம் என்ன பாடுபடும். அந்த வீடியோவில் முகம் மறைக்கப்பட்டிருந்தாலாவதுப் பரவாயில்லை. இந்த வீடியோ எடுத்தவரை தண்டிக்க சட்டம் உண்டா எனத் தெரியவில்லை.

இந்தப் பதிவுக் குறித்து நண்பரிடம் சொன்ன போது அப்பெண்ணுக்கு ஏதும் உடல் குறைபாடு இருக்கலாமே என்றுப் பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்தப் பதிவு zootopia வருகிறது. இந்த வீடியோவிற்கு வேறொருவர் அந்த வங்கி உடல் குறைபாடுள்ளவர்களை நியமனம் செய்வதைக் குறிப்பிட்டதை நகைச்சுவை என்கிறார் ஜெ.

மிகவும் வருத்தம் தரும் பதிவுகள். நான் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய வங்கியில் பணிபுரிகிறேன். எங்கள் நிறுவனம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நியமனம் செய்வதைக் கொள்கையாகவேக் கொண்டுள்ளது.

உடல் ஊனமுற்றவரை தேசீய கீதம் பாடும் போது எழுந்து நிற்காததற்கு தர்ம அடி சாத்தும் நாட்டில் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

ஜெ, தயவு செய்து அந்தப் பதிவுகளை நீக்கி விட வேண்டும்.

Siva G Rao:

அறம் பயில சொன்ன ஆசானோட பேச்சா இது.. >.< =D எத்தனையோ நடுத்தர குடும்பத்து இல்லத்தரசிகள் தங்கள் குடும்ப பிழைப்பிற்கும், பிள்ளைகளின் படிப்பிற்கு வாங்கிய கடனிற்கும் தங்களால் இயலாதா நிலையிலும் இவ்வாறு வேலை செய்கின்றனர்..

40 வயது கடந்த நடுத்தர குடும்பத்து பெண்கள் அவர்களுக்கு வரும் உடல் மன உபாதைகளை தாங்கிக்கொண்டு குடும்பத்தை ஜீவனம் செய்ய வேலைக்கு வருகின்றனர்.

நிச்சியமாக இந்த அம்மாள் தன் சம்பளத்தில் காபி டேவிலோ beautyparlorலோ செலவளிப்பவராக தெரியவில்லை…

//நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல // ஆசானின் இந்த வரிகளுக்கே அவர் மேல் வைத்திருந்த மரியாதை முற்றிலும் ஒழிந்தது

முகப்புப் படம்: ஜெயமோகன் டாட் இன்

17 thoughts on ““கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன் 

 1. அந்த பெண்ணை குறிப்பிட்ட சேவைக்கு பணித்தது பெரும் தவறு. இங்கு கத்தி கூச்சலிடும் மேற்படியோர் மணிக்கணக்கில் கால் கடுக்க வங்கிகளில் நின்றது சந்தேகமே!!! அமெரிக்கா பற்றி பேசுவோர் இது போன்ற குறையுடையோருக்கு தரப்படும் பணியை குறிப்பிடவில்லை. மக்கள் தொகை மிகுந்த நம் போன்ற நாட்டில் அதுவும் இப்பெண் பணி புரிவது புனே கிளையில் இது போன்ற சேவை மக்களுக்கு அரசு நிறுவனங்கள் மீதும் சேவை மீதும் கூடுதல் வெறுப்பை வரவழைக்கும்.

  Like

 2. அந்த பெண்ணுக்கு வக்காலத்து வாங்குவோர் தங்களது நிறுவனங்கள் அல்லது தங்களது வீடுகளில் பணியமர்த்தி மனிதாபமாத்தை காட்டட்டும்

  Like

  1. உழைப்போடு எந்த தொடர்புமே இல்லாமல் ஜெ மோ-வின் கூட்டம் இங்கு ஆண்டாண்டு காலமாக கூச்சமே இல்லாமல் மணியை மட்டும் ஆட்டிக்கொண்டு நாட்டு செல்வாதாரத்தின் பெரும்பங்கை தின்று தீர்த்துக்கொண்டுள்ளது. அங்குபோய் இந்த மேதாவி தன் வாளை முதலில் சுழற்றட்டும்.

   Like

 3. உடலுபாதை கொண்டோரை அவருக்கேற்ற பணியில் அமர்த்துவதே சிறந்தது. அல்லது பணி ஓய்வு வழங்கலாம். ஏனெனில் வங்கிக்கு வருவோரின் அவசரகதியை நாம் அறிவோம். அவர்களின் சூழல், நேரம் இவைகளை மனதில் கொண்டு, அதற்கேற்றவாறு சேவை செயவதில் வங்கி நிர்வாகம் செயல்பட வேண்டும்.

  அதே நேரம்.. இவ்வாறான ஆலோசனைகளை கூறாமல், கீழ்தனமாக விமர்சிப்பது என்பது இரு எழுத்தாளனுக்கு அழகல்ல!

  Like

  1. அரசாணை மற்றும் உச்ச நீதிமநீதிமன்ற உத்திரவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பணியாளர் உடல் உபாதை மற்றும் ஊனம் காரணமாக பணியாற்ற இயலாத சூழ்னிலை ஏற்பட்டால் அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கக்கூடாது எனவும் அவரால் இயன்ற மாற்றுப்பணி வழங்கவேண்டும் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களின் பேரில் கட்டாய ஓய்வு என்பது கடைசி தீர்வாக மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது

   Like

 4. தப்பைத் தப்பென்று ஒத்துக் கொள்கிற மனோபாவமின்றி மக்கள் இருப்பதால் தான் நாடும், சமூகமும் பலவீனமாகவே உள்ளது. என் அனுபவம்: ஒரு நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்தபோது எனக்கு முன்பே அங்கிருந்த பலருடைய சம்பளத்தை விட எனக்கு சற்று அதிகமாக இருந்ததைப் பொறுத்துக் கொள்ளாமல் சக ஊழியர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை நிறுத்தியதை அலுவலக இயக்குனரிடம் (Director) சொன்னபோது, அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றாலும், சம்பளம் கொடுப்பது நிர்வாகம், உனக்கு அவர்கள் வேலைகள் கொடுக்காவிட்டாலும் நான் கொடுக்கிற வேலைகளை மட்டும் செய் என்றபோது, வேலைகள் செய்து சம்பளம் பெறுவதே சரி எனவும், சும்மா உட்கார்ந்து விட்டு சம்பளம் வாங்க நான் தயாரில்லை எனக்கூறி வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு அலுவகத்துக்கு மாறினேன். உழைப்பது என்று வந்த பிறகு சரியான உழைப்பைக் கொடுக்கத் தவறுகிற மனோபாவம் எல்லா மட்டங்களிலும் வளர்ச்சியை பாதிக்கும். நான் திரு. ஜெயமோகன் சொன்னதை வரவேற்கிறேன்.

  Like

 5. ஒரு சராசரி மனிதனுக்கும், பக்குவப்பட்ட எழுத்தாளனுக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. அதை உணர தவறிவிட்டார் ஜெமோ.
  ஆனால் அந்த பெண்மணி வேலை செய்யும் விதத்தை ஞாயப்படுத்தவும் முடியாது. அவர் உடல்நிலை சரியில்லாதவறாக இருப்பின், அந்த பகுதியில் அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கக்கூடாது. ஆக, தவறு பெண்மணியிடமோ அல்லது வங்கியிடமோ பாதிக்கப்படுவது பொதுமக்கள்தானே. ஜெமோவின் இழிசெயலை கண்டித்த பலர் இதை சுட்டிக்காட்டவில்லையே! ஏன்?
  அப்போது, ஜெமோவை விமர்சிப்பது மட்டுமேயான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்களா? ஜெமோ தன் நிலை கீழிறங்கி விமர்சித்தது தவறு! அந்தப் பெண்மணியின் செயலையோ அல்லது வங்கியின் செயல்பாட்டினையோ கண்டிக்காமல் இருப்பதும் தவறுதான்.

  Like

 6. பாதிக்கப்பட்ட மக்கள்…பைத்தியக்காரர்களா..
  ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கால் கடுக்க தினமும் கதறும் ஏழைகள் கதியை பாருங்கள்..
  தாமதம்..தாமதம்.
  உதாரணம் ஒன்று..
  நான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலூக்கா அலுவலகத்தில் நடந்த சம்பவம்..பற்றி..
  நான் மேலாளராக பணி புரிந்த உரிமையாளரின் சகோதர சொத்து பிரிவினைக்காக தடையில்லா சான்று விண்ணப்பத்தை 140 நாட்களாக தராமல் அலைக்கழித்த கொடுமை..50 முறை நேரில்..100 முறை தொலை பேசியில் கெஞ்சியும் பலன் இல்லை..பிறகு நான் தாசில்தாரிம் நேரில் பார்த்து ஐந்தே நிமிடத்தில் அதுவும் 500 ரூபாய் லஞ்சம் தந்து…பெற்றேன்…மக்கள் முட்டாள்களா

  Like

 7. ஜெயமோகன் எழுத்தாளர் ஒரு பெண் ஊழியரின் வேலை பற்றி விமர்சிக்க யோக்கியதை இல்லை வேலையில் கவனம் இல்லாவிட்டால் ஏற்படும் இழப்புகளை அப்பெண் ஊழியரே ஏற்கவேண்டும் ஜெயமோகன் இதை அறிய மாட்டார்

  Like

 8. வரிசையில் கால் கடுக்க நின்றால் தெரியும் என்பவர்கள் சேவைக் குறைவை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் ஜெயமோகன் இந்த பதிவில் உள்ள படத்தில் ஆடையே இல்லாமல் இருக்கிறாரா என்று கேட்டால் ஜெமோவின் அடிமை ரசிகர்களுக்கு கோபம் வருமா வராதா அது போல் தான் ஜெமோவின் வலைப் பதிவும் அரை வேக்காட்டுத் தனமாய் உள்ளது

  Like

 9. The person who took the video of the bank employee has violated the law. You cannot take pictures or videos of women without their consent. This video is a serious breach of her right to privacy. I hope someone draws the attention of the Police to this outrage.

  Like

 10. ஜெமோ வின் வார்த்தைகளைப் பிடித்துத் தொங்குபவர்கள்,.. அடிப்படைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வசதியாக மறந்திருப்பது, வினோதம்தான்! உங்கள் வார்த்தைப் பிரயோகம் மன்னிக்க முடியாத தவறு என்பதுடன், சாமானியனின் பணத்தில் வரும் வருமானத்தில் சம்பளம் பெற்று வங்கிவேலை செய்யும் அந்தப் பெண்மணிக்கு சர்வரோகக் கவசம் அணிவித்து காப்பாற்ற முயல்வது ஒருதலைப்பட்சம்.

  அரசுப் பணி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதா? இது என்ன புது நிலை?

  முக்கியமாக,… அரசுப்பணியாளர்களின் கேவலமான மனவோட்டத்தின் உதாரணமாக மட்டுமே அப்பெண்மணியின் செயல் பார்க்கப்படுகிறது. விமரிசனம் அப்பெண்மணியை மட்டுமே குறிவைத்து எய்ததல்ல.

  இங்கு பலர் குறிப்பிட்டது போல, அவரை வேறு பின்-அலுவலகப் பணியில் வைத்திருக்கலாம். அவழுக்குக் காட்டும் அனுதாபத்தில் பத்தில் ஒரு பங்காவது, அப்பாவி வங்கி உபயோகிப்பாளர் மீது காட்டியிருக்கலாம்!

  சரீஈஈஈஈஈ!

  என்க்கும் ஒரு கேள்வி உண்டு, ஜெமோ வை இங்கும் எங்கும் துவம்சம் செய்வோரை நோக்கி:

  “உங்கள் உறவினருக்கு ஆப்பரேஷன் செய்யும் டாக்டர் ,…

  உங்களை நிதமும் அலுவலகம் அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுனர்,..

  உங்கள் சிறு மகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பள்ளிப் பேருந்து/ஆட்டோ/வேன் ஓட்டுனர்,…

  உங்கள் வயதான தாயாரை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லும் உங்கள்/கால்டேக்சி கார் டிரைவர்,…

  நீங்கள் நெடுந்தொலைவுப் பயணம் செய்யும் விமானம்/ரயில் ஓட்டுனர்,…

  இவர்களில் யாராவது,.. ஒரே ஒரு தரம்,…

  இந்த வங்கிப்பணி அம்மா போன்று உடல் (/மன?) உபாதையால், ஸ்லோ-மோஷனில் பணி செய்தால்,…

  அப்போதும் இதேபோல் அவர்களுக்கு முழுமையாகப் பரிந்து பேசுவீர்களா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.