அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராக இருக்கும் பட்சத்தில் “சைகாலாஜிஸ்ட் அபிலாஷா”வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள், கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே, சமீபமாக ஊடகங்கள் அதிகமாக நாடுகின்றன.

இந்நிலையில்  அபிலாஷா மருத்துவரே அல்ல என்றும் அறமற்றவர்சட்டவிரோதமானவர்மோசடி பேர்வழி என்றும் மனநல மருத்துவர் ஷாலினி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.  இது குறித்த மருத்துவர் ஷாலினியின் முகநூல் பதிவுகளை தமிழாக்கம் செய்து கீழே வெளியிட்டுள்ளோம்.

Shalini

தன்னுடைய மகளுக்கு, மனநிலை பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து, அந்த மகளை டாக்டர் அபிலாஷாவிடம் அழைத்து சென்று இருக்கிறார் ஒரு பெண்மணி. ஆலோசனைகள் மூலம் தன்னுடைய மகளின் பிரச்சனைகளை அவர் தீர்க்கலாம் என்றும் அந்த பெண்மணி நம்பி இருக்கிறார். ஆனால், அதுவரை எடுத்துகொண்டிருந்த அலோபதி மருந்துகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறும், அதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார் அபி.

அத்துடன் பக்க விளைவுகள் அற்ற மாற்று மருத்துவம் என்ற பெயரில் சிவப்பு நிற மாத்திரைகள் அடங்கிய கண்ணாடி பாட்டில்களை,  25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையும் செய்திருக்கிறார்.

எட்டு மாதங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாததோடு, மகளின் பிரச்சனைகளும் அதிகமான நிலையில், ஒவ்வொரு முறையும் “அதிசயம் நடக்கும்” என்று அபி நம்பிக்கை ஒட்டி வந்திருக்கிறார். கடைசியாக நம்பிக்கை இழந்த பெற்றோர், முறையான மனநல மருத்துவரை சந்திக்க முடிவெடுத்திருக்கின்றனர்

 என்னுடைய கவலைகள் என்னவென்றால்….

1) முறையான மருத்துவ பட்டம் பெறாத அபி,  பிஹெச்டி பட்டமும் பெறவில்லை என்பதால், அவர் எப்படி தன்னை “டாக்டர்” என்று அழைத்து கொள்கிறார் ?

2) அவர் மருத்துவ உளவியலாளர் இல்லை என்பதாலும், எப்படி அவர் மனநலம் சார்ந்த நோய்களையோ / பிரச்சினைகளையோ கண்டறிகிறார்?

3) மாற்று மருத்துவ முறையில் கூட அவர் எந்த பட்டமும் பெறவில்லை

4) மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான மருந்துகள் 200- 1000 ரூபாயிலேயே கிடைக்கும்போது, போலி மருந்துகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வாங்குவது எப்படி ?

5) மெத்த படித்தவர்கள் கூட அவரால் ஏமாற்றப்படுகிறார்கள்

6) சமூகவிரோதமான, ஆபத்தான இவரை எப்படி தடுக்கப் போகிறோம் ?

இந்த அபிலாஷாவை யாராவது அறிந்தவர்கள் உண்டு என்றால் தயவு செய்து அவரிடம் சொல்லுங்கள். அவர் செய்வது அறமற்றது. நியாமற்றது. முறைகேடானது.  முழுக்க முழுக்க மோசடியானது என்று.

#I protest.

சிவப்பு பாட்டிலில் இருப்பது என்ன?

 

1) Psychiatry is not my தொழில். Medicine is not தொழில்/business. It is my occupation. பணி.

2) மனநல பிரச்சனைகள் உடையவர்களுக்கு  அவமானம் குறித்த கவலைகள் அதிகமிருக்கும். இது போன்ற சூழலில், போலியான மனநல மருத்துவரால் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தால், அதை பற்றி பகிரங்கபடுத்தாமல், மனதிற்குள்ளேயே புழங்கத் தொடங்கிவிடுவார்கள்.

3) இதுதான், அவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பை நமக்கு அதிகமாக்குகிறது.  போலிகளுக்கு எதிரான குரல் என்பது, இந்த சமூகத்தில் உரிமை அற்றவர்களுக்கான குரல். குரலற்றவர்களுக்கான குரல்.

4) மனநலம் சார்ந்த பணியில் இருக்கும் மற்றவர்களுக்கு (மருத்துவர் அல்லாதவர்களுக்கு) எதிராக நான் பேசவில்லை. ஆனால், மருத்துவ அறத்தை, நம்பி வருபவர்களின் நம்பிக்கையை உடைக்கிறவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை மேற்கொண்டே ஆக வேண்டும்.

5) கேள்விப்படும் ஒவ்வொரு போலிகளுக்கு எதிராகவும் என்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அதனால், என்னால் முடிந்தளவு,  போலிகளுக்கு எதிராக விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறேன். இதனால், போலி மருத்துவர்களை நாடு மக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறேன்.

6) என்னுடைய குற்றசாட்டுக்கேல்லாம் அபிலாஷாவின் பதில் என்பது “சேற்றை வாரி இறைப்பதாக” மட்டுமே இருக்கிறது. “சிவப்பு மாத்திரைகள் அடங்கிய அந்த கண்ணாடி பாட்டில்கள் பற்றி அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

7) தெரிந்தே தவறு செய்வது. சொந்த லாபங்களுக்காக, தன்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது. இதை எல்லாம் முறையான மருத்துவர் செய்தால், சட்டங்களின் அத்தனை பிரிவுகளின் கீழும் நிறுத்தப்படுவார்கள். ஆனால், இதை மட்டுமே செய்து வரும் போலிகள் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள்.

This is utterly wrong.
I continue to protest.

போலி டாக்டர்களை கண்டுபிடிப்பது எப்படி!?

1) நிஜ டாக்டர்கள் விளம்பரம் செய்ய மாட்டார்கள் – விளம்பரம் செய்வது unprofessional என்பதால் பெயர், முகவரி, தொலைபேசி எண் இவற்றை விளம்பரப் படுத்த எங்களுக்கு தடை. ஆனால் இதற்குக் நேர் எதிராய் போலி ஆட்களுக்கு எந்த அற வரையறைகளுமே இல்லை என்பதால், அவர்கள் ஊடகம், துண்டு பிரசுரம், வலைப் பதிவு என்று கிடைக்கும்/உருவாக்கிக்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுய விளம்பரம் செய்வர்.

2) நிஜ டாக்டர்கள் ஓவராய் அலங்காரம் செய்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் போலித்தனம் செய்பவர்களுக்கு ஒரு பிரத்தியேக நாடகத்தனம் இருக்கும்.

3) நிஜ டாக்டர்கள் தொழில்நுட்ப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தவர். போலிகள் வார்த்தை ஜாலத்தை வைத்து ஒப்பேற்றுவர்

4) நிஜடாக்டர் “என்னிடம் வாருங்கள் நான் பார்ததுக்கொள்கிறேன்” என்றெல்லாம் சவடாலாய் வாக்குறுதிகளை வாரி வழங்க மாட்டார்கள். காரணம் complications பற்றி அவர்களுக்கு உண்மை கவலை இருப்பதனால், ஓவராய் நம்பிக்கை கொடுக்க தயங்குவர். ஆனால் போலிகளுக்கு அது பற்றி தெரியாது என்பதால் குருட்டுநம்பிக்கையை வாரி வழங்குவர்.

 

3 thoughts on “அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

 1. Tamil Nadu medical council doing excellent service by keeping drs name board with their photo, specialty

  Tamil Nadu medical council can help to find out is the dr studied in approved medical college or quakes

  Media also to be collect one copy of their certificate before the program and find out their speciality ,originality through sources

  Like

 2. உண்மை தான் அபிலாசாவினால் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவரால் எடுத்துரைக்க முடியவில்லை.
  உளறல் மட்டுமே மிச்சம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.