அண்மையில் வெளியான ‘ரெமோ’ படத்துக்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் இதழ், இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு கேடு என எழுதியது. இதற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதன் தொகுப்பு இங்கே:
Karthick Gopalakrishnan:
சன் டிவியில் கொலை செய்ய சொல்லிக்கொடுக்கிறது விகடன் சீரியல். டைம் பாஸ்
விகடன் , மக்கள் மனதை விஷமாக்கும் தொடர்களுக்கு ரெமோ பரவாயில்லை.
இவர்கள் ரெமோவிற்கு மார்க் கொடுக்கிறார்கள். ரெமோ உலகக் காவியம் எல்லாம் இல்லை.
அது குப்பையே, குப்பையை குப்பை என்று சொல்ல இன்னொரு கழிசடைக்கு உரிமை இல்லை.
Bharathi Nathan:
ரெமோ பத்தின விகடன் விமர்சனத்தப் படிச்சப்ப,
எங்க ஊர் சொலவடையொன்னு ஞாபகத்துக்கு வந்தது.
நீங்களும் தெரிஞ்சுக்குங்க.
“எல்லாருஞ் சிரிச்சாங்கன்னு பூனைப் போயி பொடக்காலில சிரிச்சுதாம்!!”
ரெமோ படம் சமூகத்திற்கே சீர்கேடு
– விகடன் விமர்சனம்
…
பிறகு என்ன நொன்னைக்குடா
36 மார்க் போட்டிருக்க?
Anbu Muthu Kumar:
” ரெமோ ” திரைப்படம் சமூகத்துக்கே கேடு என்று விமர்சனம் எழுதியிருக்கும் விகடன் இனி (தன் டைம் பாஸ் விகடன் உட்பட ) நடிகைகளின் புகைப்படங்களை வியாபாரத்துக்கு பயன்படுத்தமாட்டான் என நம்புவோமாக…!
Mohan Salem
ரெமோ …
” இது மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல . சமுதாயத்திற்கே கேடு. ”
– விகடன் .
விகடன் சொன்னது சரிதான். இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் ரெமோ மாதிரியே முற்போக்கு சிந்தனை ( ! ) உள்ள சிவா மனசுல சக்தி (SMS )என்ற படத்தை தயாரித்த விகடன் , அந்த படத்திற்கு 42 மார்க் போட்டு கொண்டாடியதையும் மறக்க வேண்டாம் …
ரெமோவின் வழியே தன்னைப் புனிதப்படுத்த முயற்சிக்கிறது விகடன். டைம்பாஸ் என்பது வாராவாரம் வரும் ரெமோ வல்லவோ மிஸ்டர் விகடன்?
ரெமோ ஒரு சீர்கேடு என்று சொல்வதற்கும் சில தகுதி வேண்டும்.
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் மாமியாருக்கு எப்படி நெஞ்சுவலி கொண்டுவருவது / பிறந்த குழந்தையை எப்படி யாருக்குமே சந்தேகம் வராமல் கொலை செய்வது, ICU ல இருக்கும் மாமியாரை எப்படி மூச்சுதிணறல் மூலம் கொலை செய்வது என்று நாடகத்தில் சீர்கெடுக்கும் விகடன் 🙂 இன்று ரெமோ சீர்கேடு என்கிறது.
ரெமோ சீர்கேடுதான் ஆனால் 🙂 அதை சொல்லவும் தகுதி வேண்டும்…
அது விகடனுக்கு இல்லை!!!
C P Senthil Kumar
விகடன் ரெமோ வை ஓவரா நக்கல் அடிச்சிருக்கே?பின்னணி என்னவா இருக்கும்?
சி.கா இப்போ யாரோட இடத்தைப்பிடிச்சுட்டதா பேசிக்கறாங்களோ அவர் வேலையோ?
>Nagajothi Nagamani
விகடன் ‘ரெமோ‘ திரை விமர்சனம் படித்தேன்,,, மிகவும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது,,,!!!!.
ரெமோ மாதிரியான படங்கள் சமூக சீரழிவுக்கு வழி வகுக்கும் என்று உச்சமாக சாடி விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது,,!!!
சிவகாசி படத்தில் சமுக புரட்சியாளர் விஜய் அசின் உள்ளாடை குறித்து மற்றும் ஜில்லா படத்தில் காஜல் உடல் பகுதியை தொடுவதை குறித்து இந்த விகடன் எந்த ஒரு விமர்சனமும் அந்த படங்கள் வந்த பொழுது எழுதியதாக தெரியவில்லை,,!!!
சிகாவின் வளர்ச்சிக்கு எத்தனை தடை,,!!
பச்சலை புடுங்கி உன்னத்தான் Ananda Vikatan கேக்குறேன்,,,!!!!
Shiva Chokkalingam
விகடன் ‘ரெமோ‘ விமர்சனம் படித்தேன். ரொம்ப கடுமைதான். இனி,சோதனை விகடனுக்குதான். இதே அளவுகோலை இனி அனைத்துப் படங்களும் எடுக்க வேண்டியிருக்கும்.
Vijesh Kadarkarai
ரெமோ– சமூகத்திற்கு கேடு!
அப்போ
திரிஷா இல்லனா நயன்தாரா —?????
(நான் யார் ரசிகனும் இல்லை)
மனிதன் எழும் கேள்வி?
Cook My Show
இன்னைக்கு ரெமோ ஒரு தவறான முன்னுதாரணம் னு போடுற அதே விகடன் தான் நாலு நாள் முன்னால
“லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்” னு positive ஆ எழுதிருந்தான்
எனக்கென்னவோ “இங்க ஒருத்தன் சிக்கிருக்கான் டா” எல்லாரும் திட்றாங்க நாமளும் சேர்ந்து திட்டுவோம்னு திட்ற மாறி தான் இருக்கு
இதே விகடன் மாரி, தகராறு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு மாறியான காவியங்களுக்கு எத்தனை மார்க் கொடுத்தாங்கனு சொன்ன தேவலை
ரெமோ நல்ல இருக்கு நல்ல இல்ல, சொல்றதுக்கு எல்லா உரிமையும் எல்லாருக்கும் இருக்கு
ஆனா இப்படி trend கு ஏத்த மாரி மாத்தி மாத்தி பேசுறது சரியாங்கிறது தான் இப்ப கேள்வி
Venketraman Yuvaraj
ரெமோ – விகடன் விமர்ஐனம் பற்றி அண்ணா அன்றே சொன்னார் .
அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினி அல்ல(Remo). நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல(Vikatan)
NA Mohan
விகடனில் காசுக்கேத்த தோசை தான் கிடைக்கும் … பத்திரிக்கை தர்மமாவது வெங்காயமாவது …
Suman S
ரெமோ படம் வெளியானபோது இரண்டு படங்கள் போட்டியாக வெளியாகிறது ரெமோ , றெக்க , தேவி ஆகிய மூன்று படங்களுக்கும் விகடன் விமர்சனம் எழுதுகிறது றெக்க , தேவி இரண்டு படங்களின் விமர்சனத்தின் கடைசியாக றெக்க தேவி படம் நல்லா இருக்காது நீங்கள் ரெமோ படத்திற்கு போகலாம் என்று எழுதுகிறது ஒரு படத்தை பற்றிய விமர்சனம் என்பது அந்த படத்தில் உள்ள நிறை குறைகளை தான் கூற வேண்டும் தானே தவிர வேறு படத்திற்கு செல்லுங்கள் என்று கூற கூடாது ஆனால் விகடன் கூறுகிறது ஆனால் இப்பொழுது என்ன நடந்தது என்று தெரியவில்லை ரெமோ சமூக சீர்கேடு என்று எழுதுகிறது
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் விகடன் !
Don Ashok
பதில்: ஆமாம். விகடன் ‘குடும்ப’ இதழான ‘டைம் பாஸ்’ படியுங்கள். சமூகத்தின் லிவருக்கு ரொம்ப நல்லது.
Anbu Muthu Kumar
” ரெமோ ” திரைப்படம் சமூகத்துக்கே கேடு என்று விமர்சனம் எழுதியிருக்கும் விகடன் இனி (தன் டைம் பாஸ் விகடன் உட்பட ) நடிகைகளின் புகைப்படங்களை வியாபாரத்துக்கு பயன்படுத்தமாட்டான் என நம்புவோமாக…!
சினிமா விகடனில் ரெமோ படத்தை ஆஹா ஓஹோ என்று எழுதி விட்டு ஆனந்த விகடனில் சமூகத்திற்கு கேடு என்றால் என்ன அர்த்தம் சினிமா விகடன் விமர்சனம் தான் முதலில் வந்தது படம் நன்றாக போகவும் சினிமா பாலிடிக்ஸ் ஆகிவிட்டது பிராடு விகடன்
LikeLike