20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!

பெரியாரிய அமைப்புகளில் ஒன்றான “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” வரும் 12-ம் தேதி (நாளை) சென்னையில் “ராவண லீலா” என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து……

ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக நம்மை இழிவுபடுத்தும் நோக்கில் தான் இவை இயற்றப்பட்டுள்ளது என்பது ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் ஆகியோரால் கூட ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

இவை அனைத்தின் உச்சமாக, தமிழ் மாமன்னரான இராவணர் அவர்களை அரக்கனாக சித்தரித்து மகிழ்ந்தது ஆரிய பார்ப்பனக் கூட்டம். இந்த இழிவு வருடா வருடம் தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே “தசரா”வின் இறுதி நாளன்று “ராம லீலா” என்ற பெயரில் நம் மாமன்னரான இராவணர் அவர்களின் உருவ பொம்மையை எரித்து, நம்மை இழிவுபடுத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1974 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், 1996 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் சார்பாகவும் “ராவண லீலா” நடத்தி ராமன் உருவப் பொம்மை கொளுத்தப்பட்டது. ஆக 20 வருடம் கழித்து, நம் ராவண மாமன்னரின் உருவத்தை ஆரியம் கொளுத்திக் கொண்டாடுவதை கண்டித்து, நாம் “ராவண லீலா” நடத்தி ராமனின் உருவத்தை எரித்து பதிலடி தரவுள்ளோம்.

14572225_1220495724640360_3220077579728908962_n.jpg

இந்த நிகழ்வு நடக்கக்கூடாதெனில் இந்திய அரசு “ராம லீலா”வை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து, பிரதமர், ஜனாதிபதி, உள்த்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு எந்த பதிலும் வராத காரணத்தால், தந்தை பெரியார் திராவிடர் கழகம் “ராம லீலா” நடத்துவது உறுதி எனக் கழகத்தின் துணைத் தலைவர் துரைசாமி அவர்கள் கூறினார்.

இராவண லீலா நடத்தி ஆரிய ராமனை எரிக்கக் கூடாது என பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியினர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மிரட்ட இது குஜராத் அல்ல, இது தமிழ்நாடு.

திட்டமிட்டபடி ‘இராவண லீலா’ நடத்தி, ஆரிய ராமன், லட்சுமணன், சீதையின் உருவப் பொம்மைகளைக் கொளுத்துவோம். அதை சின்னக் குடுமி ராம கோபாலன் அல்ல, பெரிய குடுமி மோகன் பகவத் நினைத்தாலும் தடுக்க முடியாது.

இந்த நிகழ்வு சென்னையில் அக்டோபர் 12, மயிலை சமசுகிருதக் கல்லூரி அருகில் நடைபெறும்.

தகவல் :

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை மாவட்டம்.
தொடர்புக்கு : 98417 09129,
98410 28111, 94440 11124

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.