தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் நவம்பர் 2-ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாள்: அக்டோபர் 21ஆம் தேதி.