பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; கடைகள் சூறையாடல்: கோவையில் நடந்த வன்முறைகளின் பட்டியல்

கோவையில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணியினர் நடத்திய வன்முறைகளின் பட்டியலுடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார் சிபிஐ(எம்)மின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். இந்த மனு விவரம்:

 கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் பொறுப்பில் இருந்த டி. சசிக்குமார் (35) என்பவர் 21.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச்சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது.

வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். உதாரணத்திற்காக கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1. வடகோவை, சண்முகா தியேட்டர் எதிரில் உள்ள பள்ளிவாசல், சுக்கரவார்பேட்டை பட்டுநூல்கார சந்து பள்ளிவாசல், கெம்பட்டிகாலனி லிங்காகவுண்டர் தோட்டம் பள்ளி வாசல் மீது தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிகாலை 3.30 முதல் 4.30 வரை நடைபெற்றது.

2. அன்னூர், தொண்டாமுத்தூர், கெம்பட்டிகாலனி, சுங்கம், சின்னவேடம்பட்டி, துடியலுhர், சுந்தரபுரம், எல்ஐசி காலனி ஆகிய பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்.

3. டவுன்ஹால் பகுதியில் 2 ஆட்டோ எரிப்பு, எண்-3டி பஸ் உடைப்பு, அவிநாசி சாலையில் ஒரு பஸ் எரிப்பு,

4. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி, கர்னாடிக் தியேட்டர் எதிர்புறம் உள்ள வாசவி காம்ளக்ஸ் மீது கல்வீச்சு, காந்திபுரத்தில் ஒரு கடை எரிப்பு.

5. சவ ஊர்வலம் செல்லும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் 50க்கும் மேற்பட்டவை எரிப்பு.

6. அண்ணா புதுலைன் பகுதியில் சிபிஐ(எம்) அலுவலகம் மீது தாக்குதல் வாலிபர் சங்க கொடி, பெயர்பலகை பிடுங்கி எரிந்துவிட்டனர், கொடி மரம் அடித்து நொறுக்கப்பட்டது.

7. உடல் அடக்கம் நடைபெறும் துடியலூர் பகுதியில் போலீஸ் வாகனம் எரிப்பு மற்றும் ஒரு ஆட்டோ எரிப்பு மற்றும் ஒரு ஆம்னி கார் எரிப்பு. அந்த பகுதியில் இருந்த கிருஷ்ணா ஜுவல்லரி, மற்றும் பேக்கரிகள் எரிப்பு. செருப்பு கடை சூறையாடல் மற்றும் இஸ்லாமியர் கடைகள் மீது தாக்குதல் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். மேலும் மகாலட்சுமி பேக்கரி, சென்னை மொபையில் கடையில் 30 லட்சம் மதிப்புள்ள பொருள் சூறையாடல், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் காஜனா ஜுவல்லரி விக்டோ செருப்புகடை மீது தாக்குதல், சென்னை மொபைல் கடை செல்வசிங் பேன்சி ஸ்டோர்ஸ் மீது தாக்குதல்.

மாவட்ட காவல்துறை இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர்.

1. அதிகாலை முதல் கலவர சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி வாசல் மீது தாக்குதல் அதிகாலை நடந்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை இல்லை, இருசக்கர வாகனத்தில் சென்று கடை அடைக்க சொன்ன இந்து முன்னணியினரை விரட்டவோ, கைது செய்யவோ இல்லை.

2. உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை பகுதியில் அனைத்து பகுதிகள் மற்றும் வெளி மாவட்ட ஆட்கள் வருவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3000 பேர் திரள அனுமதித்தது, அரசு மருத்துவமனையிலிருந்து இஸ்லாமிய குடியிருப்புகளான கோட்டை மேடு பகுதிக்கு தாக்குதல் நடத்த ஊர்வலமாக செல்வோம் என புறப்பட்டபோது தடுக்காமல் வின்சென்ட் ரோடு வரை சென்று கல்வீச்சு தாக்குதல் கடுமையாக நடந்த பின்னர் இந்து முன்னணியினரை தடுத்தனர். இச்சம்பவத்தையோட்டி கோட்டைமேடு பகுதியில் பெரிய அளவு கலவரம் நடைபெற கூடிய சூழல் ஏற்பட்டது.

3. அரசு மருத்துவமனையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மதுக்கரையிலிருந்து 150 இருசக்கர வாகனங்களில் இந்து முன்னணியினர் கொடிகளுடன் வந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆத்துபாலம் டோல்கேட் அருகில் நின்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு கோசம் போட்டனர். போலீஸ் ஆத்துப்பாலம் வரை இந்து முன்னணியினரை தடுக்காமல் விட்டது பெரிய தவறு.

4. மாநகர காவல் உளவுத்துறை பத்திரிகையாளர்களிடம் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர்களிடம் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் அவர்கள் ஆகள் என்ற முறையில் பிரச்சாரம் செய்ததாகவும் வாட்ஸ் ஆப்பில் ஆ என செய்தி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

5. இறுதி ஊர்வலம் தடை என்று சொல்லி விட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 10 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தனர்.

6. ஒண்டிப்புதூர் பகுதியில் கடைகளை அடைக்க சொன்ன இந்து முன்னணியினர் சிபிஐ(எம்) தோழர் பாண்டியனிடம் வம்பு செய்துள்ளனர். அந்த சம்பவத்தை காவல்துறை உளவுத்துறை போலீஸ்காரரிடம் தெரிவித்த போது இஸ்லாமியர்களை இந்த நேரத்தில் தான் செய்ய முடியும் என்றும் அவனுகளை விடக்கூடாது என்றும் பேசியுள்ளார்.

இவை உதாரணங்கள் மட்டுமே. பொதுவாக காவல்துறை சார்புத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது. எனவே தாங்கள் நேரடி தலையீட்டின் மூலம் காவல்துறை நடுநிலையோடு செயல்படவும், தற்போது பல்வேறு ஊடகங்கள் வந்துள்ள கானொளிக் காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலமும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.