இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோ உதவி: ஒடியன் லட்சுமணன்
பஞ்ச பரதேசிகள். தொண்டர்களை ஒழுக்க நெறியுடன் வழி நடத்தாத எந்த ஒரு அமைப்பும் மக்கள் மத்தியில் கருணை செல்வாக்கு பெறாது. அரசியல் கட்சிக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் ஆதரவு தரும் கட்சிக்கு என் வாக்கு ஒருபோதும் இல்லை. இப்படிக்கு இந்து சமயத்தில் பெற்றுள்ள சரவணன், திருப்பூர்.
LikeLike