யார் அண்ணா?

ஜெயநாதன் கருணாநிதி

ஆண்டது இரண்டே ஆண்டு என்றாலும் அவர் உருவாக்கிய அரசியல் அமைப்பின் தாக்கம் இன்றும் தமிழகத்தின் சமூக – பொருளாதார வெளியில் காண்கிறோம் . மத்திய அரசாங்கத்தின் முதலீட்டை, காமராஜர் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று சொன்னாலும் திராவிட கட்சிகளின் தொடர் Policy Interventions யினாலும் கொள்கை முடிவுகளில் இருந்த Continuity னாலும் தான் பொருளாதாரத்தில் பின் இருந்த தமிழகம் இன்று இந்தியாவில் எத்துறையிலும் முதல் மூன்று இடத்தில இருக்கிறது (இல்லை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லுபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் நலம் ).

அதனை விட முக்கியமானது , உண்மையான தலைவனுக்கு தேவையென அவர் உணர்திருந்த குணம் , தன் மக்களின் சமூக – பொருளாதார நிலை குறித்த வரலாற்றுப்பூர்வ புரிதலும் , உலக அரசியல் பற்றிய அறிதலும். அந்த புரிதல் இருந்ததால் தான் , இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் இருந்த இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவினை திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையில் முதலீடு செய்யாமல், காலத்தின் தேவைக்கேற்ப திராவிட நாடு கோரிக்கையை சற்று தள்ளிவைத்தார் . இல்லையெனில், காஷ்மீரில், நாகாலாந்தில், மணிப்பூரில் தற்பொழுது என்ன நடக்கிறதோ அதுவே தமிழகத்திலும் நடந்திருக்கும் என்பதே நிதர்சனம். யாருக்கு தெரியும், அந்த வன்முறையால் இன்று நாம் (இந்திய தமிழர்கள்) பல தேசங்களின் அகதிகளாக கூட இருந்திருக்கலாம்.

14332925_10209099562458452_2319313134999675690_n

அவரின் ஒற்றை முடிவால், இன்று மூன்று தலைமுறை கல்வியறிவு பெற்று இடஒதுக்கீட்டின் பயனால் மேற்படிப்புக்கு சென்று, வெளிநாட்டு தொழில் முதலீடுகளின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள ஏதுவான Human Capital ஆக உருவாகி நிற்கிறது . 1991 க்குப் பின்னான தாராளமயாக்கத்தின் (Liberalization), உலகமயமாக்கலின்(Globalization) முழு பயனையும் தமிழகம் இன்று அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அண்ணா அவர்கள் உருவாக்கிய அரசியல் இயக்கம்.

திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது என்று அவர் சொன்னதின் நீட்சி தான் இன்று தமிழகம் GST, Reservations, NEET போன்ற விஷயங்களில் எடுக்கும் நிலைப்பாடுகள். அதன் பிரதிபலிப்பே, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தனது சுதந்திர நாள் உரையில் உரைத்த இந்த வரி, “Real freedom lies in economic freedom”.

அவர் அன்று சொன்ன வார்த்தைகளின், எடுத்த கொள்கைகளின் நீட்சி தான் இன்றும் தமிழகம் மாநில சுயாட்சிக்காக மத்திய அரசாங்கத்திற்கு எதிராக முழங்கும் முழக்கங்கள் .

“கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு” என்ற அவரின் வார்த்தைகளின் தேவை அன்று போல் இன்றும் இருக்கிறது,சற்று அதிகமாகவே.

இன்று , அண்ணாவின் பிறந்தநாள். இந்த நன்னாளில், நாம் சற்று meditate செய்ய அவர் 1942 இல் உதிர்த்த முத்து இதோ.

“வாசலிலே உள்ள பூனையை விரட்ப்போகிறோம்! புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. அங்கோர் ஓநாய், இரத்த வெறியுடன் நிற்கிறது! அது உள்ளே நுழையக்கூடாதே “.

#அண்ணா108

ஜெயநாதன் கருணாநிதி

One thought on “யார் அண்ணா?

  1. அவரின் ஒற்றை முடிவால், இன்று மூன்று தலைமுறை கல்வியறிவு பெற்று இடஒதுக்கீட்டின் பயனால் மேற்படிப்புக்கு சென்று, வெளிநாட்டு தொழில் முதலீடுகளின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள ஏதுவான Human Capital ஆக உருவாகி நிற்கிறது .

    —-இது உண்மை அல்ல..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.