கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், “கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்த தம்பி பா.விக்னேசு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிபடுத்தினார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.