சு. இரவிக்குமார்
அதுதான் சித்தராமய்யாவைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், இத்தகைய முற்போக்கான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவோ அல்லது இல்லாமலே ஆக்கவோ செய்ய வேண்டும் என்பதும் பாஜகவின் உள்ளக் கிடக்கைகளில் ஒன்று.
அதற்குத் தோதாக வந்ததுதான் காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அதனை வைத்து, கன்னட இனவெறியர்களை உசுப்பேத்தி விட்டதோடு, தானும் கன்னட இனவெறியர் வேடமிட்டு, தமிழர்களைத் தாக்கி, இனவெறியைத் தூண்டி, மதவெறி அரசை ஏற்படுத்தும் புதியவகை உத்தியைக் கையாள்கிறது.
அதனால்தான் குருபீட உத்தரவுப்படி பிரதமர் வாய் பொத்திக் கொள்கிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன வெறியை விசிறிவிடுகின்றார். வெங்கையா நாயுடு கர்நாடகத்தை ஆதரிப்பதாகச் சொல்கிறார். பொன் ராதாகிருஷ்ணனோ தமிழக பாஜக வேறு, கர்நாடக பாஜக வேறு என்கிறார். கலவரத்துக்கு இருமாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் தமிழிசை.
ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் சொல்வது, சித்தராமய்யாவின் அரசு பதவி விலக வேண்டும் என்பது. தமிழ் மக்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இனவெறியர்களின் பேரில் மறைந்திருக்கும் இந்து மதவெறியர்களின் முகமூடிகள் அப்பட்டமாகக் கழன்று விழுகின்றன.
சு. இரவிக்குமார், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்; கவிஞர்.