விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நேற்று (05.09.16 ) “காப்பி வித் டிடி” ஒலிபரப்பானது. திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் திவ்ய தர்ஷினியின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் “நகைச்சுவை நடிகர் சதிஷுக்கும், தனக்கும் திருமணம் என்று வெளியான செய்திதான், தான் மிகவும் ரசித்த தன்னை பற்றிய கிசுகிசு” என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த திவ்யதர்ஷினி “ஆமாம். ஒரு நிருபருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, நடிகர் சதிஷ் என்னிடம் 1000 ரூபாய் கேட்டு வாங்கினார்” என்று கூறினார்.
நிருபர்களின் இந்த ஆவேசம் காரணமாக “திவ்யதர்ஷினியின் இந்த பேச்சு குறித்து, என்னவென்று விசாரிப்பதாக” விஜய் டிவியின் ப்ரோக்ராம் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர் தெரிவித்துள்ளதாகவும் நிருபர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.