ரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா? விநாயகர் சதுர்த்தியின் வரலாறு

விநாயகர், கணபதி, யானை முகன் என ஏராளமான பெயர்களில் அழைக்கப்படும் இந்துக் கடவுள் தோன்றிய எப்படி என்பது குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. சிவனும் பார்வதியும் ஆண் யானை பெண் யானை உருவம் எடுத்து உறவு கொண்டதில் பிறந்து குழந்தை என்பதில் தொடங்கி பார்வதியின் அழுக்கில் பிறந்தவர் என்பது வரை ‘கதைகள்’ உண்டு. இந்தப் புராணக் கதைகளை தனிப்புத்தகம் போட்டு ஆன்மிகப் பத்திரிகைகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளும் இந்தக் கதைகளை வீட்டுக்குள் வந்து ஒளிப்பரப்புகின்றன என்பதால் இந்தக் கதைகளை மீண்டும் கதைக்கவேண்டியதில்லை. இந்தக் கதைகள் எப்போது உருவாக்கப்பட்டன என்கிற தேடலை மட்டும் இங்கே செய்திருக்கிறோம்.

ரிக் வேதத்தில் எங்கே கணபதி?

சல்லடைப் போட்டுத் தேடியும் ரிக் வேதத்தில் இன்றைய விநாயகர் பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்றாசிரியர் எவரும் எழுதவில்லை. யானை முகம் கொண்ட விநாயகர் அல்லது கணபதி திராவிடர்கள் அல்லது பூர்வகுடிகளிடமிருந்து இந்துமதம் சுவீகரித்துக்கொண்ட கடவுளாக இருக்கலாம் என்கிற குறிப்பு உள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை.

ॐ गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम् ।
ज्येष्ठराजं ब्रह्मणाम् ब्रह्मणस्पत
आ नः शृण्वन्नूतिभिःसीदसादनम् ॥
ॐ महागणाधिपतये नमः ॥
Om Gannaanaam Tvaa Ganna-Patim Hava-Amahe
Kavim Kaviinaam-Upama-Shravas-Tamam |
Jyessttha-Raajam Brahmannaam Brahmannas-Pata
Aa Nah Shrnnvan-Nuutibhih-Siida-Saadanam ||
Om Mahaa-Ganna-Adhipataye Namah ||

Meaning:
1: Om, O Ganapati, To You Who are the Lord of the Ganas (Celestial Attendants or Followers), we Offer our Sacrificial Oblations,
2: You are the Wisdom of the Wise and the Uppermost in Glory,
3: You are the Eldest Lord (i.e. ever Unborn) and is of the Nature of Brahman (Absolute Consciousness); You are the Embodiment of the Sacred Pranava (Om),
4: Please come to us by Listening to our Prayers and be Present in the Seat of this Sacred Sacrificial Altar.
5: Om, our Prostrations to the Mahaganadhipati (the Great Lord of the Ganas).

Rig Veda (2.23.1)

இந்த மேற்கோள் ரிக்வேதத்தில் கூறப்பட்ட ஸ்லோகத்தின் பொருள் என இணையதளங்களில் காணக் கிடைக்கிறது. இதை தமிழில் எழுத்தாளர்கள் சிலரும் உண்மையென கருதியோ அல்லது தெரிந்தே திரித்தோ பரப்பி வருகின்றனர்.  தேவர்களின் குருவாக சொல்லப்படுபவர் பிரகஸ்பதி. இவரின் பெயராலேயே ஜோதிடத்தில் குருபெயர்ச்சி என்பது குறிக்கப்படுகிறது.  இவருக்கும் விநாயகரைப் போல தொந்தி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. இந்தத் தொந்தியையும் ஆரியரல்லாத பூர்வ குடிகள் வழிபட்ட யானைக்கடவுளையும் இணைத்து ‘விநாயகர்’ கதை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

பிரகஸ்பதி
பிரகஸ்பதி

ரிக் வேதத்தில் பிரகஸ்பதி வணக்கத்தின் கீழ் வரும் ஸ்லோகத்தின் பொருள் இது.

HYMN XXIII. Brahmanaspati.

1. WE call thee, Lord and Leader of the heavenly hosts, the wise among the wise, the famousest of all,
The King supreme of prayers, O Brahmanaspati: hear us with help; sit down in place of sacrifice. 

ரிக் வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன், விஷ்ணு, ருத்ரா போன்ற ஆண் கடவுளர்களும் இலா, அதிதி, உஷாஸ் போன்ற பெண் கடவுளர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்(டி. என். ஜா எழுதிய பண்டைக் கால இந்தியா: ஒரு வரலாற்றுச் சித்திரம் ப.59-60).

பேஸ்வாக்களின் குலதெய்வம்!

16-ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியை பிரபலமாக்கினார். தங்களுடைய குலதெய்வமான கணபதிக்கும் விழா எடுப்பதை மாராட்டிய ஆட்சியின் அதிகாரத்தில் இருந்த பேஸ்வாக்களின் ஊக்கம் கொடுத்தனர். பேஸ்வாக்கள் பார்ப்பன சமூகத்தின் ஒரு பிரிவினர். மாராட்டிய ஆட்சி வீட்சியை சந்திக்கும் வரை விநாயகர் சதுர்த்தி விழாக்கள் கொண்டாடப்பட்டன.

தமிழகத்தில் அரசமரத்தடி ‘பிள்ளையார்’

கி.பி. 641-42-ஆம் ஆண்டுகளில் பல்லவ அரசனான நரசிங்கவர்மன் இன்றைய மகாராஷ்டிரத்தில் உள்ள வாதாபி என்ற ஊரை வீழ்த்தியிருக்கிறார். நரசிங்கவர்மனின் படைத்தளபதியாக இருந்தவரே சிறுத்தொண்டர். இவர்தான் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து கணபதியைக் கொண்டுவந்து கணபதீச்சுரம் என்ற கோயில் எழுப்பினார்  என திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாக கூறுகிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரம்(பிள்ளை- யார்? திராவிடர் கழக வெளியீடு).

சங்க கால இலக்கியங்கள் எதிலும் இந்தக் கடவுள் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. பக்தி இலக்கியங்களில் பல பெயர்களில் பிள்ளையார் பற்றிய குறிப்பு வருகிறது. சங்க இலக்கிய காலங்களில் பௌத்த, சமண மதங்கள் கோலோச்சி இருந்ததும், அவற்றின் அழிவின் மேல்தான் வைதீக மதங்களான சைவ, வைணவ மதங்கள், பக்தி இலக்கிய காலத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கின. இந்தக் காலக்கட்டத்தில் அரசமரத்தடியின் ஞானம் பெற்ற புத்தரின் நினைவாக பௌத்தர்கள் கடைப்பிடித்து வந்த வழிபாட்டை ‘பிள்ளையார்’ ஆக்கிரமித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே உள்ளது. பௌத்தமும் தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வெங்கடசாமி அரசமர வழிபாட்டை வைதீக மதங்கள் சுவீகரித்துக்கொண்டதைக் குறிப்பிடுகிறார்.

இந்துக்களை திரட்ட சதுர்த்திவிழாவைப் பயன்படுத்திய திலகர்

இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி அன்னிபெசண்டுடன் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவரான பால கங்காதர திலகர்  1893 -ஆம் ஆண்டு முதல் பேஸ்வாக்களின் குடும்ப விழாவாக இருந்த சதுர்த்தி விழாவை ‘இந்து’க்களின் விழாவாக்கினார். திலகரும் மாராட்டியத்தைச் சேர்ந்த பார்ப்பனரே. சிவாஜிக்கு விழா எடுப்பதையும் ஆங்கிலேயருக்கு எதிரான இந்துக்களை திரட்டுதல் என்பதாக அறிமுகப்படுத்தினார்.

விநாயகர் சதுர்த்தியும் பால் தார்க்கரேயும்

இந்துத்துவத்தின் கூறுகளோடு திலகர் மறு அறிமுகம் செய்துவைத்த விநாயகர் சதுர்த்தி விழாவை சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்பை பரப்பும் விழாவாக மாற்றியவர் அதே மாராட்டியத்தைச் சேர்ந்த சிவ சேனா கட்சியின் நிறுவனர் பால் தார்க்கரே. 1966-ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி, தசரா, சிவாஜி விழா என்ற பெயரில் தார்க்கரே வெறுப்பு அரசியலை விதைத்து வந்தார். கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, அதாவது 1970-ஆம் ஆண்டு நடந்த சிவாஜி விழாவில் நடந்த மோதலில் 250 பேர் இறந்தனர்.

90களின் தொடக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் நாடு முழுவதும் இந்துக்களின் தவிர்க்க முடியாத விழாவாக திட்டமிட்டு நிருவப்பட்டது. பால் தார்க்கரேயின் முன்னெடுப்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூண்ட கலவரம் 1992-ஆம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டது.

முஸ்லிம்கள் அதிகமாக வசித்த பகுதிகளில் விநாயகர் சிலை, ஊர்வலங்கள் என்ற பெயரில் வன்முறைகளும் வெறுப்புப் பிரச்சாரமும் அதன் பிறகு வேர்விட்டு செழித்து வளர்ந்தது. இந்துமதம் ஒதுக்கி வைத்த சேரிகளிலும் காலனிகளிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, இந்துத்துவ மதவெறிப் பிரச்சாரம் வேகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார விழாக்களில் ஒன்றாகிவிட்டது. கார்ப்பரேட்டுகளும் ஊடகங்களும் அரசியல்வாதிகளுமாக விநாயகர் சதுர்த்தியை அவரவர் நலன்களுக்காக மக்களை  பக்தி என்னும் நம்பிக்கைக் காட்டி சுரண்டிப் பிழைக்கும் ஒரு வழியாக மாற்றிக்கொண்டனர். எங்கோ, எப்படியோ பிறக்க வைக்கப்பட்ட விநாயகர் இந்துக்களின் வீட்டில் பிள்ளையாராகிவிட்டார்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.