தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை திட்டத்துக்கு மாடலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வெளியான விளம்பரம் பத்திரிகைகளில் வந்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் டெல்லி, குர்ஹான் உள்ளிட்ட நான்கு பதிப்புகளின் முதல் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமரின் படங்கள் அரசு சார்ந்த திட்டங்களின் விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ரிலையன்ஸ் தன்னுடைய வியாபார விஸ்தரிப்புகளுக்காக (தன் சக போட்டியாளர்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது) பிரதமரின் படத்தைப் பயன்படுத்தியுள்ளது. நரேந்திர மோடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்குமான நட்பு உலகறிந்த நிலையில், இப்படி வெளிப்படையாக ஒரு நாட்டின் பிரதமராக உள்ளவர் தனியார் நிறுவனத்துக்கு விளம்பர தூதுவர் ஆகியுள்ளது சமூக ஊடகங்களில் கண்டனங்களை கிளப்பியுள்ளது.
வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் ரிலையன்ஸ் செலுத்தி தாக்கம் எஸ்ஸார் டேப்ஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. அது குறித்து ஊடகங்களும் ஆட்சி இருப்பவர்களும் மவுனம் சாதித்துவருகின்றன. தற்போது பாஜக அரசிலும் ஆரம்பம் முதலே ரிலையன்ஸ் செலுத்தி வரும் அதிகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அதை மெய்ப்பிப்பதாக உள்ளது இந்த விளம்பரம்.
ஆம் ஆம்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்…
dedicated to india,modiji is symbol of india
LikeLike