தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
“யாரிந்த வனிதா மோகன்?
- கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர்.
- தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன் இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.
- ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது “சிறு துளி”எனும் அறக்கட்டளைக்கு, தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்து தொழிலாளர்களின் ரத்தத்தை உறுஞ்சி “இயற்கை ஆர்வலர்”எனும் அரிதாரம் பூசிக்கொள்பவர்.
- நொய்யலாற்றின் கிளை ஓடையை ஆக்கிரமித்து தாமரா ரிசார்ட் கட்டியவர்,”நொய்யல் எங்கள் உயிர் மூச்சு” என்ற பெயரில் அண்ணா ஹசாரே முதல் நடிகர் சூர்யா வரை அழைத்துவந்து நொய்யலைக் காப்பதாக நாடகம் ஆடுபவர்.
தொழிலாளர்கள் உழைப்பை உறுஞ்சுகிற கார்ப்பரேட் முதலாளியும்,நொய்யலைக் காப்பதாக பசுமைப் போர்வை போர்த்தி கபட நாடகம் ஆடுகிற, தொழிலாளிகளின் விரோதி ‘சிறுதுளி’ வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல் விருது”வழங்குகிற கேலிக் கூத்து நிகழ்வை புறக்கணிப்போம்!
சமூக அடையாளத்தின் பொருட்டு சூழல் பாதுகாப்பு என்ற முகமூடியுடன் வனிதா மோகன் நடத்துகிற இந்நாடகத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போவது என்பது தொழிலாளர்கள், இயற்கை வளப் பாதுகாப்பிற்கு செய்கிற துரோகமாகும்.எனவே அவரது விருது வழங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள சிறப்பு அழைப்பாளர்களான ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும் கேரள மாநில ஆளுனருமான சதாசிவம் மற்றும் மருத்துவர் சிவராமன் ஆகியோர், இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து ஜனநாயகப் போரட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று கோருகிறோம்.மேலும், இந்நிகழ்வில்,கலந்துகொண்டு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடாது என தமிழகத்தின் சூழல்வாதிகம்,செயற்பாட்டாளர்களும் கேட்டுக்கொள்கிறோம்.
கையெழுத்து இட்டோர்:
தோழர் முகிலன்
தோழர் சண்முகானந்தம்
தோழர் லீனஸ்
தோழர் அருண் நெடுஞ்செழியன்
தோழர் ஆர். ஆர். சீனிவாசன்
தோழர் ஜார்ஜ்
தோழர் லிங்கராஜா வெங்கடேஷ்
தோழர் தமிழ்தாசன்
தோழர் ஸ்ரீதர் நெடுஞ்செழியன்
தோழர் விஜய் ஆனந்த்
தோழர் சுசீலா ஆனந்த்
தோழர் தயாளன்
தோழர் அம்சா முகில்
தோழர் முருகராஜ்
தோழர் பாடுவாசி
முற்றிலும் உண்மை. தொழிலாளர்கள் போராட்டத்தின் போது’அருணன்’ வனிதாவின் முகத்திரையைக் கழித்தெறிந்திருந்த து குறிப்பிடத்தக்கது
LikeLike