“போதும் உங்க அன்பு… தெகட்டிருச்சு…”: தன் மீதான விமர்சனத்துக்கு சேரன் பதில்

‘கன்னா பின்னா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன்,

“தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என பேசியிருந்தார்.

இதுகுறித்து கண்டனங்கள் எழுந்தநிலையில் இயக்குநர் ஜி. விஜயபத்மா தன்னுடைய முகநூலில் சேரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

“தமிழ் நாட்டுல இருக்கிற 18000 திருட்டு டிவிடி கடைகளும் இலங்கைத் தமிழர்கள்தான் நடத்துகிறார்களா சேரன்? போர்க்களத்தில் சாவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்காக.. நீங்கள் ஒருநாள் போராடியதை அவமானமாகக் கருதுகிறீர்கள்.? ஆனால் நம் தமிழ் திரையுலகின் ஏ ஆர் ரஹ்மான், இளைய ராஜிவில் இருந்து நேற்று வந்த சூப்பர் சிங்கர்கள் வரை அத்தனை நடிகர் நடிகைகளும் வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதிப்பது இலங்கை தமிழர்கள் இடமிருந்துதான். அப்ப அதுக்கும் அவமானப்படுங்கள் சேரன். நம் ஊரில் வியாபாரத்தை சரி செய்யாமல், திரையரங்குகளை சரி செய்யாமல்,தொலைக்காட்சி உரிமைகளை சரி செய்யாமல் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை சரி செய்யாமல் வெளிநாட்டு உரிமை மொத்தமாக நான்கே பேரிடம் கால காலமாக சிக்கிக் கொண்டு தவிப்பதை சரி செய்யாமல்.. பிரச்னையின் ஆழத்தை புரிந்து சரி செய்ய முயற்சிக்காமல் பாவப்பட்ட பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களை குற்றம் சொல்வது.. முட்டாள்தனம் சேரன். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி செத்து விடுவமோ என்ற பயத்தில் ரொட்டியை திருடியவனைக் கட்டி வைத்து அவனை ஆட்களை ஏவி அடித்துவிட்டு, என் வீட்டு வைர நகையை திருடிவிட்டான் என்று அபாண்டமாக பழியை போடும் பணக்கார அரக்கத்திமிர் உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது. உங்கள் வார்த்தைகளை உங்களுடையதாக மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கருத்தும் இதுதான் என்று பதிவு செய்ய நினைக்காதீர்கள்” என விஜயபத்மா எழுதியிருந்தார்.

இதுகுறித்து சேரன் அளித்துள்ள பின்னூட்டம்: அனைவருக்கும் நன்றி… மிக்க சந்தோசம்… என்ன ஏதுன்னு கேக்காம எதுக்கு பேசினோம்னு தெரியாம ஒரு ம…….. னா பேச்ச நம்பி விமர்சனம் செய்த நண்பர்களுக்கு…போதும் உங்க அன்பு… தெகட்டிருச்சு…”.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.