ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி. சிந்துவின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல விவாதங்களும் செய்திகளும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம், சிந்துவின் பயிற்சியாளரான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பி. கோபிசந்த் தன்னுடைய பயிற்சியில் கட்டாயம் அசைவ உணவுகளை உண்ண வேண்டும் என வலியுறுத்துவதான் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு.
இது பற்றிய செய்திக் கட்டுரையில், கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் சைவ உணவு உண்பவர்கள் சேர்ந்தாலும்கூட, பயிற்சியின் ஒரு பகுதியாக அசைவ உணவுகள் உண்பது கட்டாயம் ஆக்கப்படும். ஏனெனில் அசைவம் தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவு முறையால், விளையாட்டுக்கான போதுமான கலோரியை தர முடியாது என்பதே. சாய்னா நைவால், சாய்நாத் போன்ற சைவ உணவு உண்டவர்களும் இங்கு வந்த பிறகு, குறைந்தபட்சம் சிக்கனையாவது கட்டாயமாக உண்ண வைக்கப்பட்டனர். ஆரம்பித்தில் மறுப்பவர்கள்கூட அசைவம் உண்ண ஆரம்பித்த பிறகு, அதை விரும்புகிறார் என்கிறார் அகாடமியின் பயிற்சியாளர் ஒருவர்.
“புரோட்டீன் சத்துள்ள சிக்கன், உடல் எடை இழைப்பை ஈடுகட்டி மினரல்களையும் விட்டமின்களையும் தரக்கூடியது. ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி இரும்புச் சத்து நிறைந்தது, உடலில் உள்ள சத்துக்களை தக்கவைப்பதோடு, விளையாட்டின் போது ஏற்படும் தசை பிரச்சினைகளை இறைச்சியில் உள்ள அமினோ ஆசிட் சரிசெய்யக்கூடியது.” என்கிறார் அவர்.
“சீன பயிற்சி முறையை பின்பற்றும் கோபிசந்த், பயிற்சி வகுப்புகளில் தரப்படும் உணவில் இறைச்சி இருக்க வேண்டும் கட்டாயம் ஆக்கியுள்ளார். அவரே வந்து என்னமாதிரியான உணவுகள் தரப்படுகின்றன என சோதிப்பார்” என்று சொல்லும் பயிற்சியாளர், சாய்னா-சிந்துவின் வெற்றி பலரின் உணவுப்பழக்கம் குறித்த நம்பிக்கையை உடைக்கும் என நம்புகிறார்.
மிக நல்ல முயற்சி உழைப்புக்கேற்ற உணவு முறை சர்யினது தானே
LikeLike