ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். சிந்துவுக்கு சமூக வலைத்தளங்களில் குவியும் சில பாராட்டுகளின் தொகுப்பு இங்கே…
உஷையில் தொடங்கி சாக்சி, சிந்துவெனப் பறந்து திரியட்டும். பட்டங்கள் மட்டுமல்ல; பதக்கங்களோடு.
சிந்து வழி நாகரீகம்…
நாளைல இருந்து பெய புள்ளைக.. பேட்டும் கையுமா அலையுமே…
சீன முகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு இடத்தில் ஒரு திராவிட முகம் கலக்குகிறது!
இதயங்களை வென்று விட்டாய் சிந்து! 🙂 ❤
விளையாடுவது மெடல் வாங்குவது வேறு ஸ்டைலாக நல்ல உடல் மொழியோடு விளையாடும் சாத்தியம் எல்லோருக்கும் வாய்க்காது. சிந்து சர்வதேச அரங்கில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்று விட்டார்.ஸ்டைலிஷான கேம்!..(இதை நீங்க நம்பமாட்டீங்க என்னை மாதிரியே ஸ்டைலா விளையாடுறாங்க)
Natarajan Kembanur Karai Gowder
வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில்…
தங்க நகைகளிலிருந்து விடுபட்ட கழுத்துகள்
அணிந்துகொண்டது
வெள்ளி வெண்கல மெடல்களை !!
அனாயசமாக ஆடும் ஸ்பெயினை நெருங்கவே இந்தியா நிறைய போராட வேண்டியிருக்கிறது. அவ்வப்போது out வேறு. சாதனை நாயகியாக வெல்லப்போகும் வீராங்கனை யார் யூகித்தவாறும் இல்லை இல்லை வாய்ப்பிருக்கிறது என நிகழ்தகவின் இன்னொரு பக்கத்தைப் புரட்டிப் பார்க்க விரும்பியது மனம்.
என்றாலும் இறுதிவெற்றியில் திணறித் தவிக்கும் சிந்துவைப் பார்க்க வருத்தமாக இருந்தது. ஊழல்களும் சுரண்டல்களும் மலிந்த நாட்டிலிருந்து செமி இறுதிகளை வென்று இறுதிஆட்டத்தில் பங்கேற்றதே பெரிய சாதனைதான் தாயே.. விளையாட்டு அரங்க மைதானத்தில் விழுந்து கதறிய உன் வேதனை சாதாரணமானது அல்ல.
நடந்து முடிந்த இந்த ஆட்டத்திலேயே தெரிந்தது ஸ்பெயின் மரின் வெல்லவும் சிந்து போராடியும் தோற்றது இந்தியாவுக்கே பொருத்திக்கொள்ளலாம். பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்துவதிலேயே இந்திய ஜனநாயகத்தில் ஒரு போராட்டம் இருக்கிறது.
இன்னுமொரு நான்கு ஆண்டுகள் இந்தியா காத்திருக்க வேண்டும். அதற்குள் நம் நாடு திருந்த வேண்டும். புதிய வீரர்களை உரிய பயிற்சியோடு களமிறக்க வேண்டும். எந்த நாட்டில் சகல விளையாட்டுகளுக்கும் சரிநிகர் சமானமாக மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களோ அங்கே
வளிமண்டலம் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஒலிம்பிக்கின் விதியென்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள்… பங்கேற்பதுதான் முக்கியம் எனும் தாரக மந்திரத்தைச் சொல்லி அடுத்த ஒலிம்பிக்கிற்கு உற்சாகமாகத்தோடு வெல்லட்டும் அடுத்த ஒலிம்பிக்கில் நமது வருங்கால இளைஞர்கள்.. என்று இப்போதைக்கு ஆறுதல் பெறுவோம்.
தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் நானே..!
ஒவ்வொரு பாயிண்ட்க்கும் அந்த ஸ்பெயின் புள்ள வுட்ட கியா மியா சவுண்டும் பேட்டை அப்பப்போ ஊதுறதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி!
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்துவுக்கும் ஸ்பெயின் புள்ளைக்கும் வாழ்த்துகள்!
வெண்கலம்,வெள்ளி வென்றது போல தங்கத்தையும் வெல்வாள் இந்திய மங்கை…
இதயம் நொறுங்கியது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஆனாலும் போராடித்தான் தோல்வியடைந்தோம். போராட்டம் எப்போதுமே வெற்றிக்கான உறுதியான முதல் படி. வாழ்த்துக்கள் வெள்ளி பெற்ற எங்கள் தங்க மங்கை சிந்துவுக்கு. வெற்றி பெற்ற ஸ்பெயின் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.
வெள்ளி நிச்சயம்னு நேத்திக்கு ஸ்டேட்டஸ் போட்ட பயல தேடிகிட்டு இருக்கன் ..
#sindhu #Rio
வெள்ளியன்று வெள்ளி வென்றதே வெற்றி !
முகப்புப் படம் நன்றி: தி க்விண்ட்