தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்ப்பதில் பாஜக ஆளும் மாநில அரசுகள் முதலிடம்!

தலித்துகளை தாக்குவதற்குப் பதிலாக என்னைத் தாக்குங்கள் என்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்த அதிரடி வாசகங்களை தனது கட்சி ஆளும், மாநில முதலமைச்சர்களுக்கும் அவர் சொல்லியிருக்கலாம். குறிப்பாக  பிரதமர் ஆவதற்கு முன்பு வரை தான் முதலமைச்சராக இருந்த தன் சொந்த மாநிலத்தில் தலித்துகள் மீதான வன்முறையை கட்டவிழ்த்த இந்துத்துவ கும்பலுக்கு எடுத்துச்சொல்லியிருக்கலாம்.

இந்திய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள 2015-ஆம் ஆண்டின் அறிக்கையை ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த புள்ளிவிவரப்படத்தைப் பாருங்கள்.

dalit atrocit

குஜராத்தில் 2015-ஆம் ஆண்டு மட்டும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியதாக 6655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சத்திஸ்கரில் இதே அண்டு 3008 வழக்குகளும் ராஜஸ்தானில் 7144 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தத் தகவல் தெரிகிறது.

One thought on “தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்ப்பதில் பாஜக ஆளும் மாநில அரசுகள் முதலிடம்!

  1. இதை அந்த மாநிலங்களில் தலித்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தலித்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படுவதில்லையா. தலித்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொள்ளும் சாதிய கும்பல்கள் எல்லாம் இந்த்துவ கும்பல்கள் அல்ல.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.