இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

பிரேம் 

பிரேம்
பிரேம்

ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்.

மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது.

அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை அதனை ஒரு பெரும் செய்தியாக உலகம் அறியச் செய்துள்ளார்.

இனி அவர் ஒரு தியாக தெய்வமாக இருக்க விரும்பவில்லை. அந்த வலி நிறைந்த வாழ்விலிருந்து விடுபட்டு தனக்கு விருப்பமான வாழ்வை வாழ நினைக்கிறார். அரசியல்-போராட்டம் என்ற பெயரில் அவரைப் பலிகொடுக்க இனி யாருக்கும் உரிமையில்லை.
அரசின் அச்சுறுத்துதலை, அவமதிப்பை தாங்கி வாழ்ந்து வந்த அவர் ஆயுதம் கொண்ட குழுக்களின் அச்சுறுத்துதலை எதிர்கொண்டு அஞ்சி பதுங்கிவாழ வேண்டிய ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமையான ஒரு நிலை இது.

“நான் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக வாழவிரும்புகிறேன். இயல்பு வாழ்க்கையை வாழ நினைக்கும் என்னை ஏன் தெய்வமாக்க நினைக்கிறார்கள். நான் சாக விரும்பவில்லை. வேண்டுமானால் என்னைக் கொல்லட்டும்.” என்ற கண்ணீர் குரல் மிகுந்த அச்சமூட்டுகிறது.
எதன் பெயராலும் அவர் மீது திணிக்கப்படும் கடமை மிகக்கொடுமையானது.

எந்த நிபந்தனையும் இன்றி அவர் தன்போக்கில் வாழ்வதை மக்களும், அமைப்புகளும் அனுமதிக்க வேண்டும். அவருக்கு நேரும் ஒவ்வொரு அவமதிப்பும் இனிவரும் தலைமுறையை அரசியல் உணர்வு பெறுவதிலிருந்து விலகித் தப்பித்து ஓடவைக்கும். அடக்குமுறை அரசுகளும், அதனை எதிர்க்கிற அமைப்புகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. தனிமனிதர்களைப் பொருளற்றவர்களாக மாற்றுகின்றன. தமது இருப்புக்காக தனிமனிதர்களைப் பலியிடுகின்றன.

இரோம் ஷர்மிலாவின் இனி வரும் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் மிகுந்த நடுக்கம் தருவதாக உள்ளது. அதிலிருந்து அவர் மீண்டு வெளியேற வேண்டும்.

யாரிடம் இருந்து அவருக்கு விடுதலை இப்போது? வரலாறு இத்தனை கொடூரமானதா?
மாலதி மைத்ரியின் கவிதையை நான் ஆங்கிலத்தில் தந்ததை மணிப்பூர் மாணவர்கள் தங்கள் அமைதிக்கான நிகழ்ச்சிகளில் நெகிழ்ச்சியுடன் படிப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் தாளில் இருந்து அதை மீண்டும் மீண்டும் படித்த ஒரு நிகழ்ச்சி மனதை பாதித்தது.
அவர்கள் சொல்ல நினைப்பது ஆனால் அதை அவர்கள் சொல்ல முடியாது, ஒரு கவிதை அதைச் சொல்கிறது. இன்னொரு மொழியில் தமக்கான கவிதை எழுதப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கு ஒரு தெம்பு தருகிறது. எழுத்துக்கு அப்படி ஒரு பங்கு உள்ளது.

Sharmila, My Love…

All my kisses to you return back to me futile
Locked all the entries of indulgence in your body

Streets without regimental parade
Gardens without echoes of gunshot
Villages without torture chambers
Jungles not contain mutilated bodies of women
Mere residual of your dreams

Life and justice of our land trampled under the heavy boots of soldiers
Your emaciated body, your trembling fingers desire peace on our land
Stubborn heart inside your fragile chest
Struggling constantly against bloody maniacal power
Not even mild ray of justice touches your doorway

Demonic mouth of atrocity goes on munching your tender dreams under the silent guard of hundred and ten crores.

-Malathi Maithri

(Let her live her life as she desires, like a bird or a fish or a cat but not in fear and shame)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது ‘காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.