குளியல் அறையிலிருந்து மனைவி “என்னங்க… “என்றால்..! சுவற்றில் “பல்லி ” இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் கணவன் தன்னை புத்திசாலியாகப் பாவித்துக்கொள்கிறான்!
பல்லியை பயங்கொள்ளும் உயிரினமாய் மாற்றியது எது..?
பல்லி உணவில் விழுந்தால் மரணம் என்று பத்திரிக்கைகளும், உடலில் விழுந்தால் சகுனம் என்று பஞ்சாங்கமும் அலறுவது எதற்காக ..?
வீட்டுத்தங்குயிரியாக மனிதர்களுக்கு அருகாமையில் பல்லிகள் வாழ்வது ஏன்..?
உதட்டோரம் சிறுசிறு கொப்பளங்களோடு எதிரே வரும் நண்பரிடம் “உதட்டில் என்ன கொப்பளம் என்றால்..!” பல்லி சிறுநீர் கழித்துவிட்டது என்பார் கொஞ்சமும் வெட்கமில்லாமல்!
மனிதர்களின் வாயை கழிப்பிடமாக்கி அதன்மீது சிறுநீர் கழிக்கும் அவசியம் எந்தக் காலத்திலும் பல்லிகளுக்கு ஏற்படாது!
உயிரின வரலாற்றில் பல்லிகளின் உண்மையான “பலனை ” பேசும் நூல் “பல்லி – ஓர் அறிவியல் பார்வை “! நூலாசிரியர்: கோவை சதாசிவம், வெளியீடு: குறிஞ்சி பதிப்பகம், விலை: ரூ. 25.