குஜராத்தின் தலித்துகளிடையே போராட்ட உணர்வைத் தூண்டிவிட்ட உனா தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஊடகங்களில் பேசியுள்ளனர். ஜூலை 11-ஆம் தேதி கிர் சோம்நாத் மாவட்டம் உனா நகர் அருகே பசு பாதுகாவல் கும்பலால் கடுமையாக தாக்க்ப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரான வஷ்ரம் சர்வையா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசும்போது, “செத்துப் போன மாடுகளின் தோலுரிப்பதை விடுங்கள், ஒரு மாட்டின் பார்வைகூட எங்களை நடுங்கச் செய்கிறது” என்று தெரிவிக்கிறார்.
இவருடன் தாக்குதலுக்கு உள்ளான அசோக், ரமேஷ், பெசார் மூவரும் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அரசியல்வாதி அவ்வவ்போது இவர்களை வந்து பார்த்த்துவிட்டுப் போகிறார்கள்.
“நாங்கள் கிராமத்துக்கு திரும்ப பயப்படுகிறோம். கிராமத்தில் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்கிறார் வஷ்ரம். “இந்த தொழிலில் நீடித்திருக்க முடியாது. நாங்க அதை விலகிவிட்டோம் எனில், நாங்கள் வாழ்வதற்கு என்ன செய்வோம்” வஷ்ரம் கோரிக்கையைவைக்கிறார்.