பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

சந்திரமோகன்
சந்திர மோகன்
சந்திர மோகன்

மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், “கண்டிக்கிறேன் ” எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன்.

விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன்.

“நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்” எனவும், “மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி (Shrewed Businessman) பியூஸ்” எனவும், கடந்த சில ஆண்டுகளாக பியூஸின் நண்பர்கள், ரசிகர்கள், தோழர்கள் ஆகியோரிடம் சொல்லி வந்ததை விரிவாக முன்வைக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், நண்பர்கள், அவரது முகநூல் Facebook குறிப்புகள், கள ஆய்வுகள் போன்ற ஆதாரங்களிலிருந்தே எழுதியுள்ளேன்.

பியூஸ்‬ செயல்பாடுகள் மீதான கொள்கை வேறுபாடுகள் தவிர, அவரிடம் தனிப்பட்ட பகை, மோதல், நலன்களோ எதுவும் இல்லை.

Chapter 1- தருமபுரி

(2010 க்கு பிந்தைய அவரது செயல்பாடுகளில் தருமபுரி பற்றிய பகுதியை விரிவாகவும், சேலம் பற்றிய சில முக்கியமான குறிப்புகளை மட்டும் பதிவு செய்கிறேன்)

பாக்கு மட்டையிலிருந்து மூங்கிலுக்கு மாறுதல் :-

தமிழகத்தில் உள்ள வட இந்திய மார்வாரி பான் புரோக்கர் வட்டிக்கடை முதலாளிகள், ரியல் எஸ்டேட் /நில வியாபாரத்தில் ஏராளமான முதலீடுகளை குவித்துள்ளனர். அவர்களோடு பங்குதாரர் ஆகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பவராகவும் பியூஸ் சேத்தியா உள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான் ! துவக்கத்தில் பாக்கு மட்டை பொருட்கள், இயந்திரங்கள் தயாரிப்பு தொழிலில் இருந்த பியூஸ் நிலம் மற்றும் மூங்கில் வியாபாரத்திற்கு மாறிய பின்னர்தான் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார்.

சேலம் மாவட்ட கல்ராயன் மலைப்பகுதியில், கருமந்துறையில் மார்வாரி சேட்டுகள் பழங்குடியினர் நிலங்கள் உட்பட 70 ஏக்கர் நிலங்களை வாங்கி சுமார் 35,000 மூங்கில் செடிகளை வளர்த்தனர். பியூஸ் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, நிர்வாகியும் கூட. ஒரு ஏக்கர் ரூ.3 இலட்சம் எனவும், நல்ல லாபம் கிடைக்கும் எனவும் தொடர்ந்து விளம்பரம் செய்தார். (பார்க்க : 23.4.2013 தேதிய அவரது முகநூல் பதிவு)

வெற்று வாக்குறுதிகள் !அந்த மூங்கில் பண்ணையில் பல பிரச்சினைகள். மூங்கில் வெட்டி வெளியே கொண்டு வருவதில் வனத்துறையுடன் பிரச்சினை. ஒரு பகுதி நிலங்களை விட்டுவிட்டு தருமபுரியில் கவனம் செலுத்தினார்.

ஜருகு மூங்கில் பண்ணை :-

8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப் பண்ணையானது, ரியல் எஸ்டேட் வியாபாரி திலீப் பேட் மற்றும் பியூஸ் சேத்தியாவிற்கு சொந்தமானதாகும். பெரிதும் மூங்கில் வளர்க்கப்படும் இப் பண்ணையில், மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் பட்டறையும் (Workshop) உண்டு. (படம் இணைக்கப்பட்டுள்ளது) வடகிழக்கு மாநில கைவினைஞர்களை

குறைந்த கூலிக்கு சுரண்ட முயற்சிக்க அவர்கள் பணியாற்ற முடியாது எனச் சென்றுவிட்டனர். உள்ளூர் தலித் தொழிலாளர்கள் பண்ணை வேலை மற்றும் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்களுக்கு மாதக் கூலி ரூ.6,000, பெண்களுக்கு ரூ.4,500 ஆகும். மூன்று மின் இணைப்புகள் உள்ளன. இயந்திரம், மின் மோட்டார்கள் உள்ள இப் பண்ணையின் மின் கட்டணம் ரூ.881(749+132) மட்டுமே ஆகும். திலீப் பேட் பெயரில் உள்ள இணைப்பு எண் 019-011-1263 க்கு நீண்ட காலமாக மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. மின்சாரம் திருடப்படுவதைப் பற்றி த.நா.மின் வாரியம் தான் கவலைப் பட வேண்டும்.

நமது கவலை என்னவெனில், இந்தப் பண்ணையை முன்மாதிரியாக சுட்டிக் காட்டி, ஜருகுவிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள நாகாவதி அணைப் பகுதியின் அருகில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் அற்ப விலைக்கு வாங்கப்பட்டு அமைந்துள்ள ” கூட்டுறவு வனம்” எனப்படுகிற Coop Forest பற்றியதே ! (படங்கள் இணக்கப்பட்டுள்ளது)

pima

கூப் பாரஸ்ட் (Coop forest) :-

பியூஸின் சாதனைகளில் ஒன்றாக புகழப்படுவது இந்த கூட்டுறவு வனம் எனப்படுகிற Coop forest ஆகும். பெண்ணாகரம் வட்டத்தில், நாகாவதி அணை அருகிலுள்ள எர்ரப்பட்டியில் துவங்கி பெண்ணாகரம் நோக்கி சுமார் 600 ஏக்கருக்கு விரிந்து பரந்துள்ளது. மூங்கில் கோம்பை கிராமம் எனப் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்மாக 150 ஏக்கர் நிலங்களையும், 40 பங்குதாரர்களையும் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் உள்ளூர் மக்கள் அல்ல ; சேலம் போன்ற வெளியூர் பணக்காரர்கள். அவர்களிடம் ஏக்கருக்கு ரூ.2.25 இலட்சம் வாங்கிக் கொண்டு,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 மட்டுமே பியூஸ் வழங்கினார்.வளர்ச்சி நிதி ரூ.2 இலட்சம் என அறிவித்து விட்டு, 5 ஆண்டுகள் கழித்து இலாபத்தில் பங்கு என்றும் அறிவித்தார். எதுவும் நடக்கவில்லை. பலருக்கு பட்டா கூட கிடைக்கவில்லை. நாம் இந்த பணக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் பற்றி கவலைப்படவில்லை.

இதே காலகட்டத்தில், தருமபுரியில் வரவிருந்த சிப்காட் தொழில்வளாகத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பியூஸ் ஏன் ஈடுபட்டார் என்பது நமது கவலையாக உள்ளது.

அடுத்த கவலையானது, இப் பகுதியில் பியூஸ் முதன் முதலாக வங்கி மரங்களை நட்டப் பயிரிட்ட நீரோடை பாய்கிற “வெள்ள மலைக்காடு” பகுதியில் நடப்பட்டு உள்ள மூங்கில்களை, மரங்களை படங்கள் எடுத்து “பாலைவனம் சோலைவனம் ஆகிவிட்டது ” எனப் பிரச்சாரம் கட்டமைத்ததுப் பற்றி தான். இன்றும் கூட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கரடுகளாகத் தான் உள்ளன.

காரப்பரேட் விவசாயம் :-

ஏழை விவசாயிகள் நிலங்கள் இழந்தார்கள்; புறம்போக்கு நிலங்களையும் இழந்தார்கள்; பியூஸ் தடுப்பணைகளை அமைத்ததால் நீராதாரங்களை இழந்தார்கள்; வெளியேறினார்கள் அல்லது அங்கேயே கூலி வேலைக்கும் சென்றார்கள் என்பதைப் பற்றி தான் நமது கவலையுள்ளது.
இந்த கூப் பாரஸ்டுக்குள் எவ்வளவு ரெவின்யூ நிலம், வனநிலம் வளைத்துப் போடப்பட்டுள்ளது, நில உச்சவரம்பிற்கு மேலாக எவ்வளவு நிலங்கள், யார் யார் பெயரில் உள்ளது என்பது எல்லாம் தமிழக அரசாங்கம் கவலைப்பட வேண்டிய விசயங்களாகும். கூட்டுறவு தத்துவத்தின் சாரமே, பின்தங்கிய பிரிவினர் முன்னேற்றத்திற்கு உதவும் முறையே கூட்டுறவு ஆகும். பியூஸ் அமைத்துள்ளது முதலாளித்துவ பண்ணை ஆகும். (Corporate farming)

இயற்கை சுற்றுலா! (Eco Tourism) :-

அய்யப்பன் வனம் என்ற பெயரில், தங்கும் விடுதிகள் அமைக்க,2015 செப்.15 தேதியிலிருந்து ICICI வங்கி கணக்கில் பியூஸ் நிதி வசூலித்தார். (SEED- Socio Economic Environment Development) a/c number 611901077536 IFSC no. ICIC 006119). மேலும் 2015 அக். 2,3,4 தேதிகளில் நேரடியாகவும் நிதி வசூலித்தார். Summer Camp என்ற பெயரில், தலைக்கு ரூ.2250 என்றடிப்படையில் அறிவிப்புகள் வெளியாயின. (படம் இணைக்கப்பட்டுள்ளது )

pima 2

SEED முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவோ, அதன் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டதாகவோ தெரியவில்லை.

மா, பலா, தேக்கு எனப் பலவகை மரங்கள் மூலம் பணம் வரும் என்றார், பியூஸ். மூங்கில் மட்டுமே பரவலாக நடப்பட்டுள்ளது. அடுத்தவர் முதலீட்டில் மூங்கில் பயிரிட்டு, தனக்கான தேவைகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்ளும் சாமர்த்தியமான வியாபாரிகள் பியூஸ் சேத்தியா ஆவார்.

வேண்டுகோள்!

பினாயக் சென் போன்ற அறிவாளிகள், பல்வேறு காந்திவாதிகள் சத்தீஸ்கர் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள விவசாயத்தை, பழங்குடிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். பணக்காரர்களுக்கு நிலங்களை வாங்கி கொடுத்து விட்டு மக்களை நிலங்களில் இருந்து வெளியேற்றவில்லை. மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அவர்களோடு பியூஸ் சேத்தியாவை ஒப்பிட வேண்டாம்!
வனம் Forest என்பது பல்லுயிர்களைக் கொண்டதாகும். மூங்கில் போன்ற எதாவது ஒரு ஒற்றைப் பயிரை மட்டுமே அமைக்கும் நடவடிக்கை முதலாளித்துவ, ஏகாதிபத்திய சிந்தனைப் போக்காகும். கூப் பாரஸ்ட் என்ற கருத்துக் கோப்பே ஏகாதிபத்தியம் உருவாக்கியது தான்!
Chapter 2- சேலம் தெரியாத சேதிகள்

(தற்போது சுருக்கமாக சில குறிப்புகள் மட்டுமே)

தண்ணீரைத் தேடி……
சேலம் மாநகரத்திற்கு அருகில், ஏற்காடு மலை அடிவாரத்தில் கன்னங்குறிச்சி அருகில் அமைந்துள்ள மூக்கனேரி இயற்கையாகவே, நீர் நிறைந்த, அழகான, பறவைகள் வந்து செல்கிற ஏரியாகும். 2009 ல் ஒருமுறை நீர் குறைந்தது ; பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்தது. இப் பிண்ணனியில் தான், 2010ல், அக்கறை மிக்க சுற்றுச் சூழலியலாளர்கள் கொண்ட சேலம் மக்கள் குழு Salem Citizens Forum என்ற அமைப்பானது உருவானது ; அரசாங்கத்திடமிருந்து ஏரிப் பராமரிப்பை பெற்றுக் கொண்டது. பியூஸ் அதில் இணைந்து கொணடார். படிப்படியாக அமைப்பே அவருடையதாக மாற்றிக் கொண்டார். அதிலிருந்த நல்லவர்கள் பலரும் வெளியேறிவிட்டனர்.

இதுவரையில் ரூ.52 இலட்சம் செலவு செய்துள்ளதாக பியூஸ் கூறுகிறார். சேலம் மக்கள் குழு பதிவு செய்யப்பட்ட அமைப்பும் அல்ல ! ஏரி பிரபலமானதால் ஆதாயம் அடைந்த பியூஸ் உறவினர் மதன்லால் சேட் சுமார் 40 ஏக்கரில் பிளாட்டுகள், வீட்டு மனைகளை அப்பகுதியில் அமைத்திருந்தார். அவரது நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. மதன்லால் சேட் ஒரு பிரபலமான மார்வாரி ரியல் எஸ்டேட் வியாபாரி. ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கினார். மீதி பணம் எந்த வகையில் வந்தது ( SEED, ICICI கணக்கிலா அல்லது Piyush sethia, Bank of Maharashtra கணக்கிலா) என்பது தெரியாது. 2015 ல் தான், மாரி ஸ்தலம் Mari Sthalam என்ற டிரஸ்ட்டை பதிவு செய்துள்ளனர். (Axis Bank a/c no. 915020020105876). இதிலும் ஏராளமான வரவு செலவுகள் நடந்து வருகின்றன. முறையான தணிக்கை உள்ளதா எனத் தெரியவில்லை.

சென்னை வெள்ளத்தில்….

சிறப்பாக செயல்பட்டதாக பியூஸ் விருது பெற்ற சென்னை வெள்ளத்தின் போது, 2015 டிசம்பர் 5- ந் தேதி துவங்கி பல நாட்கள் பியூஸ் வெளிநாட்டு நிதி வசூல்களை மேற்கொண்டார். தனது கணக்கிற்கு (Piuush sethia, Bank of Maharashtra, S/B account no.20111114356) அனுப்பச் சொல்லி பெற்றார். உள்நாட்டு நிதிகளை மாரி ஸ்தலம் கணக்கிற்கு அனுப்பச் சொல்லிவிட்டார். நிதி வரவு செலவு இதுவரையில் வெளியாகவில்லை.

pima 3

பல்வேறு மட்ட ராஜதந்திர முயற்சிகள் மூலம், வனத்துறையின் 20 டன்கள் மூங்கில்களை கருங்காலி கிராமத்தில் இருந்து பெற முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டது; பெற்றதாகவும் தெரிகிறது. ஆனால்…..தற்போது சேலம் மரக்கடை பஜாரில் தான் வாங்கியதாக கூறுகிறார். மற்றொரு புறம் தொழில்நுட்ப ரீதியாக தகுதியில்லாத மூங்கில் படகுகள் Rafts, மூங்கில் வீடுகள் என்ன ஆனது, எங்குள்ளது, கோல்டன் கேட்ஸ் பள்ளியில் குவிக்கப்பட்ட மீதியான நிவாரணப் பொருட்கள் நிலை ஏன்னவென்றெல்லாம் தெரியவில்லை.

பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்

12.6.2016 ல், சேலம் மாநகர காவல்துறை ஆணையரை கடுமையாக விமர்சனம் செய்து முகநூலில் எழுதிய பியூஸ், ஆதரவு தெரிவிக்க மூக்கனேரியில் ஒரு மூங்கில் குருத்தை நடச் சொன்னார். அல்லது ரூ.500 நோட்டைக் கவரில் போட்டு அவரது முகவரிக்கு அனுப்பச் சொன்னார்.

இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழலியலாளர் என்பதெல்லாம் முகமூடியே! 2000 களின் காலகட்டத்தில் அவர் செய்த கார்ப்பரேட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சில நண்பர்கள் வழங்கியுள்ள புரட்சியாளர் முகமூடி பற்றியும், பல்வேறு NGO க்களுடனான அவரது உறவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். பியூஸை போராளியாக்கி, உண்மையான மக்கள் ஊழியர்களை குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட வேண்டாம் என முகநூல், ஊடக நண்பர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர். சேலத்தில் வசிக்கிறார்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

28 thoughts on “பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

 1. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை .அவரும் அவரது நிறுவனமும் வருமான வரி கட்டவேண்டும் என்கிறீர்களா? இதை எழுதியிருக்கும் தலை வருமானவரி அதிகாரியா என்னா?கம்யூனிஸ்ட் முன்மாதிரிகளைக் கொண்டுதான் பண்ணைகள் அமைக்கப்படவேண்டும் இல்லையேல் ஒத்துக்க கொள்ள முடியாது என்கிறீர்களா?உங்கள் பிரச்சனை என்ன? வதந்திகளில் இருந்தும் ,சம்பந்தப்பட்டவரின் முகநூல் கணக்கிலிருந்தும் மட்டுமே தகவல்களைக் கொண்டு வந்து கொட்டும் நீங்கள் எதிர்பார்ப்பது என்னா ?

  உதயகுமார் போன்றவர்களை பற்றிய அரசாங்க அவதூறுகளை ஒத்திருக்கிறது இந்த சேதிகள்.இப்படியான செய்திகளை யாவர் மீதும் சுமத்த முடியும் .உங்கள் பழியுணர்ச்சிக்கான நோக்கம் மட்டுமே தரப்பாகாது .நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்.நம்மாழ்வார்,கோமதிநாயகம் உட்பட இந்த அடிப்படையில் பார்க்க தொடங்கினால் மிகவும் சொதப்பலாகிவிடும்.

  அவரது செயல்பாடுகள் உங்களுக்கு முரண்பட்டவையாக இருக்கின்றன என்பது உங்கள் பிரச்சனையா? அல்லது நீங்கள் அவரை கணக்குவழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்க அறிவுறுத்துகிறீர்களா ?அல்லது பியூஸ் சிறையில் தாக்கப்பட்டது சரிதான் என்கிறீர்களா?

  சொல்வதை தெளிவாகச் சொல்லுங்கள்.புறணி பேசாதீர்கள் .
  அவர் புனிதர் இல்லை.ஒத்துக் கொள்கிறேன் ஓகே.அவர் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்காதவர்.பண்ணை அமைக்கத் தெரியாதவர்.ஓகே.பலரின் உதவிகள் மூலம் பண்ணை அமைப்பவர் ஓகே.அதற்கென்ன ?

  இதை எழுதியவரைப் பற்றி கூட இதே கண்ணோட்டத்தில் எதிரான தகவல்களை 24 மணிநேரத்திற்குள் திரட்டி விடுவது இப்போது முடியாத காரியம் ஒன்றும் அல்ல.அடைப்படை என்ன என்பதே பிரச்சனை.உங்கள் பிரச்சனை என்ன?

  Like

  1. First answe his questions. SCF not registered gocerned body. No audited reports or statements. So much money collected. Who is accountable. Will nitidy this ti IT dept. You only said wherher he is from IT dept. Lets see there

   Like

  2. @Lakshmi Manivannan லக்ஷ்மி மணிவண்ணன் இதில் பியூஸ் கேட்டவர் என சொல்வதுபோல இல்லை. பொதுசேவை போர்வைக்குள் பணம் ஈட்டும் தொழிலாக பார்க்கிறார் என்கிறார். இப்படியும் விசயம் உள்ளது என சொல்லுகிறார். “எல்லோரும் நல்லவர் என்றால்” நானும் அவர் நல்லவர்தான் என சொல்ல சொல்லுவீர்களா. நான் தனிப்பட்ட வகையில் விசாரித்து முழுமனதுடன் நம்பியப்பிறகு தான் அவர் நல்லவர் என ஒப்புக்கொள்ள முடியும். சரி விடுங்கள் இப்பொது அவருடன் நீங்கள் நேரில் பார்த்து அல்லது பழகியது உண்டா, நீங்களோ உங்கள் நண்பர்களோ ஏன் உங்களுக்கு பழக்கத்தில் உள்ளவர்கள் எவரேனும் அவரை பார்த்தது உண்டா.அவர்க்கு சுற்றார் மக்கள் உதவிக்கு வந்தார்களா ?? பின் எப்படி முழுமையாக நம்புகிறீர்கள். உதாரணம் ( 2009 ஈழத்தில் போர் அப்போது ஆட்சில் இருந்த மஞ்ச துண்டும் அவர் அரசியலும் பார்த்துகொண்டு தான் இருந்தது இது எல்லோருக்கும் தெரியும், சரி இன்னும் பல காரணம் சொல்லி திட்டிக்கொண்டு 2011 ஆட்சியை மாற்றினோம் இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகு எப்படி 2016 தேர்தலில் இவ்வளவு வாக்காளர்கள் உறுதுணையாக வாக்களித்து உள்ளனர். இதில் பல அரசியல் இருந்தாலும் கூட. பார்க்கும் இடங்கள் எல்லா நாங்கள் நல்லவர்கள், ஊழலை தடுப்பவர்கள், யோக்யவான்கள் என இணையம், நாளிதழ், தொலைக்காட்சி, போஸ்டர், தொலைபேசி அனைத்திலும் சொன்னார்களே இதையும் நம்ப சொல்லுகிறீர்களா ?!?! நீங்களும் நானும் நம்பவில்லை ஆனால் நம்பி இருக்கிறார்களே பலபேர்.) இன்றைய சூழலில் பல விசயங்கள் வெளிதோற்றங்களே அழகாக உள்ளன. அதுதான் பயமே
   எனினும் பியூஸ் மீது பல நல்ல எண்ணம் இருந்தாலும் கூட, சில இடங்களில் எனக்கும் சந்தேகம் உள்ளது.
   பொறுத்து இருந்து பார்ப்போம்

   Like

 2. மிக முக்கியமான பதிவு இது. விளம்பர வெளிச்சத்தில் வசூல் வேட்டையாடும் இப்படிபட்டவர்களை அம்பலப்படுத்துவது மிக அவசியம். உண்மையில் மக்களுக்காக உழைக்கும் பலரை இத்தகய பியூஸ்கள் கேவலப்படுத்துகின்றனர்.

  Like

 3. This very wrong… இவரை குறிவைப்பதன் நேக்கம் என்ன? இதைப் போன்று நாட்டின் அரசியல்வாதிகளின் பகல் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டுவரவும்

  Like

 4. மாரி ஸ்தலம் ………? வட மொழி கலப்பு ஏன் ?
  நமது நீர் நிலைகளை 47 வகையாக நம் முன்னோர்கள் பிரித்து வைத்து இருக்கிறார்கள்… அதில் ஒன்று ஏரி… கன்னங்குறிச்சியில் இருப்பது முக்கன் ஏரி… இதுல மாரி ஸ்தலம் ………? வட மொழி கலப்பு ஏன் ?

  Like

  1. Neer comedy oih.. I m Nadar so blue blooded Tamilian, and I want to ask you, Why don’t you fix your ancesteral property? A guy frm North India has taken TN as home and work for it’s best why then make useless noise and bring in this and little nuisances. If you have fixed it then you could have given an 100% tamil name but you are a lazy guy or a person with 100 excuses

   Like

 5. @Lakshmi Manivannan லக்ஷ்மி மணிவண்ணன்
  இதில் பியூஸ் கேட்டவர் என சொல்வதுபோல இல்லை. பொதுசேவை போர்வைக்குள் பணம் ஈட்டும் தொழிலாக பார்க்கிறார் என்கிறார் போலும் . இப்படியும் விசயம் உள்ளது என சொல்லுகிறார்.
  “எல்லோரும் நல்லவர் என்றால்” நானும் அவர் நல்லவர்தான் என சொல்ல சொல்லுவீர்களா. நான் தனிப்பட்ட வகையில் விசாரித்து முழுமனதுடன் நம்பியப்பிறகு தான் அவர் நல்லவர் என ஒப்புக்கொள்ள முடியும். சரி விடுங்கள் இப்பொது அவருடன் நீங்கள் நேரில் பார்த்து அல்லது பழகியது உண்டா, நீங்களோ உங்கள் நண்பர்களோ ஏன் உங்களுக்கு பழக்கத்தில் உள்ளவர்கள் எவரேனும் அவரை பார்த்தது உண்டா.அவர்க்கு சுற்றார் மக்கள் உதவிக்கு வந்தார்களா ?? பின் எப்படி முழுமையாக நம்புகிறீர்கள். உதாரணம் ( 2009 ஈழத்தில் போர் அப்போது ஆட்சில் இருந்த மஞ்ச துண்டும் அவர் அரசியலும் பார்த்துகொண்டு தான் இருந்தது இது எல்லோருக்கும் தெரியும், சரி இன்னும் பல காரணம் சொல்லி திட்டிக்கொண்டு 2011 ஆட்சியை மாற்றினோம் இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகு எப்படி 2016 தேர்தலில் இவ்வளவு வாக்காளர்கள் உறுதுணையாக வாக்களித்து உள்ளனர். இதில் பல அரசியல் இருந்தாலும் கூட. பார்க்கும் இடங்கள் எல்லா நாங்கள் நல்லவர்கள், ஊழலை தடுப்பவர்கள், யோக்யவான்கள் என இணையம், நாளிதழ், தொலைக்காட்சி, போஸ்டர், தொலைபேசி அனைத்திலும் சொன்னார்களே இதையும் நம்ப சொல்லுகிறீர்களா ?!?! நீங்களும் நானும் நம்பவில்லை ஆனால் நம்பி இருக்கிறார்களே பலபேர்.) இன்றைய சூழலில் பல விசயங்கள் வெளிதோற்றங்களே அழகாக உள்ளன.
  அதுதான் பயமே .
  எனினும் பியூஸ் மீது பல நல்ல எண்ணம் இருந்தாலும் கூட, சில இடஙக்ளில் எனக்கும் சந்தேகம் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

  Like

 6. @Lakshmi Manivannan லக்ஷ்மி மணிவண்ணன் இதில் பியூஸ் கேட்டவர் என சொல்வதுபோல இல்லை. பொதுசேவை போர்வைக்குள் பணம் ஈட்டும் தொழிலாக பார்க்கிறார் என்கிறார். இப்படியும் விசயம் உள்ளது என சொல்லுகிறார். “எல்லோரும் நல்லவர் என்றால்” நானும் அவர் நல்லவர்தான் என சொல்ல சொல்லுவீர்களா. நான் தனிப்பட்ட வகையில் விசாரித்து முழுமனதுடன் நம்பியப்பிறகு தான் அவர் நல்லவர் என ஒப்புக்கொள்ள முடியும். சரி விடுங்கள் இப்பொது அவருடன் நீங்கள் நேரில் பார்த்து அல்லது பழகியது உண்டா, நீங்களோ உங்கள் நண்பர்களோ ஏன் உங்களுக்கு பழக்கத்தில் உள்ளவர்கள் எவரேனும் அவரை பார்த்தது உண்டா.அவர்க்கு சுற்றார் மக்கள் உதவிக்கு வந்தார்களா ?? பின் எப்படி முழுமையாக நம்புகிறீர்கள். உதாரணம் ( 2009 ஈழத்தில் போர் அப்போது ஆட்சில் இருந்த மஞ்ச துண்டும் அவர் அரசியலும் பார்த்துகொண்டு தான் இருந்தது இது எல்லோருக்கும் தெரியும், சரி இன்னும் பல காரணம் சொல்லி திட்டிக்கொண்டு 2011 ஆட்சியை மாற்றினோம் இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகு எப்படி 2016 தேர்தலில் இவ்வளவு வாக்காளர்கள் உறுதுணையாக வாக்களித்து உள்ளனர். இதில் பல அரசியல் இருந்தாலும் கூட. பார்க்கும் இடங்கள் எல்லா நாங்கள் நல்லவர்கள், ஊழலை தடுப்பவர்கள், யோக்யவான்கள் என இணையம், நாளிதழ், தொலைக்காட்சி, போஸ்டர், தொலைபேசி அனைத்திலும் சொன்னார்களே இதையும் நம்ப சொல்லுகிறீர்களா ?!?! நீங்களும் நானும் நம்பவில்லை ஆனால் நம்பி இருக்கிறார்களே பலபேர்.) இன்றைய சூழலில் பல விசயங்கள் வெளிதோற்றங்களே அழகாக உள்ளன. அதுதான் பயமே
  எனினும் பியூஸ் மீது பல நல்ல எண்ணம் இருந்தாலும் கூட, சில இடங்களில் எனக்கும் சந்தேகம் உள்ளது.
  பொறுத்து இருந்து பார்ப்போம்

  Like

 7. சரி …. சாதாரண மனிதன் செய்யும் தவறை இவ்வளவு விலாவாரியாக சுட்டி காட்டும் மனநிலை உள்ள நம்மிடம் அரசாங்கத்திடம் பணிந்துதானே போகிறோம் ? தவறு யார் செய்தால் என்ன ,அரசுகளே பிளாட் போடுகிறது ஏரிகளில் ,உயரதிகாரிகள் உத்தரவில் மரங்களும் வெட்ட படுகிறது .எதிர்த்து பேசுவோமா …வேஷம் போடுபவர்கள் யாரானாலும் தண்டிக்க படவேண்டியவர்களே . அவன் தமிழனோ வடஇந்தியநோ இவர் குற்றவாளியென்றால் வன நிலத்தை எப்படி வனத்துறையினரின் அனுமதியில்லாமல் எடுத்துக்கொண்டார்? இவ்வளவு காலம் மூக்கனேரி அருகில் மனைகள் வளர்ச்சி அடைந்தபோதும் , மூங்கில்கள் மட்டும் நாடும் போதும் ஏன் விவரம் அறிந்தவர்கள் கேட்கவில்லை .?? இப்போது இதை வெளியிட வேண்டிய அவசியமென்ன ? அப்போதே வெளியிட்டிருந்தால் நிலைமை இவ்வளவு தூரம் வந்திருக்காதே ?. ஆதாரத்துடன் நிரூபித்து அந்த நிலைங்களையும் ஏரிகளையும் அரசு இதே போல் பாதுகாத்தல் நன்று .

  Like

 8. என்னங்க பிரச்சனை? ஒரு சமூக சேவகர் பணம் சம்பாதிக்க வழி தேடினால் தப்பா? சமூக சேவகர் என்றாலே ஏழையாகத்தான் இருக்க வேன்டுமா? பியுஷ் ஒரு மார்வாரி, அவருக்கு மர்வாரி நன்பர்கள் இருப்பது சாதாரனமான விடயம். அவர்களுடன் சேர்ந்து 150 ஏக்கர் சும்மா கிடந்த நிலத்தை வாங்கி காடாக்கியதில் என்ன பிரச்சனை?

  Like

 9. அரசியல்வாதிகள் கண்ணெதிரே நம்மை சூரையாடுவதை வேடிக்கை பார்கும் நாம் நல்லது செய்வதையும் பொறனி பேசுவதில் பயனில்லை .

  Like

 10. Our future generations going to live in a pathetic situation. No one have time to look for that & except finding faults at others, especially only if they are weak. Millionaire like vijay malaya won’t spend money for a cause. If a normal person have to work for a cause as well as his life, he has to earn.. How come he can do both… May be everything can go wrong like, auditing, it, funding, . Since who is helping ppl who wrk for cause,, except posting their likes in fb… If anyone manages both cause & his personal life with ease,, let him speak..(let him be not born silver spoon, political, etc) a normal person..

  Like

 11. மதிப்பிற்குரிய சந்திர மோகன் மிக சரியாக பல விஷயங்களை மிக துல்லியமான ஆதாரங்களுடன் தந்துள்ளார்… முதலில் அதற்க்கு வாழ்த்துக்கள்…
  இப்படிபட்ட மிக உயர்ந்த சேவையை சந்திர மோகன் ஐயா செய்ய வேண்டிய அவசியத்தையும் தெளிவுபட விளக்கி கூறினால் அதை சேர்த்து படித்து இருப்போம்…

  “70 ஏக்கர் நிலத்தில் 35000 மூங்கில் செடிகளை வளர்த்தனர். மூங்கில் வெட்டி வெளியே கொண்டு வரவதில் வன துறையுடன் பிரச்சனை”
  – அட அது தான சார் பிரச்சனையே… ஆமாம் மூங்கில வெட்டி வெளிய கொண்டு வர முடியல.. அதத்தான பியுஷ் உம் சொல்றாரு…

  “ஜருகு மூங்கில் பண்ணை – வடகிழக்கு மாநில கைவினைஞர்களை குறைந்த கூலிக்கு சுரண்ட முயற்சிக்க அவர்கள் பணியாற்ற முடியாது எனச் சென்றுவிட்டனர், உள்ளூர் தலித் தொழிலாளர்கள் 6000ரூ பெண்களுக்கு 4500ரூ”
  இதுல உங்க பிரச்னை என்ன??? கூலி கொறச்சலா இருக்குன்னு தலித் தொழிலாளர்கள் உங்க கிட்ட வந்து அழுதாங்களா??

  “இப்பண்ணையின் மின் கட்டணம் ரூ.881(749+132) மட்டுமே ஆகும். திலீப் பேட் பெயரில் உள்ள இணைப்பு எண் 019-011-1263 க்கு நீண்ட காலமாக மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. மின்சாரம் திருடப்படுவதைப் பற்றி த.நா.மின் வாரியம் தான் கவலைப் பட வேண்டும்….”
  இதுல உங்க பிரச்னை என்ன??? எங்க ஊர்ல 30ரூ bill கட்டலைன்னா உடனே fuse அ புடுங்கிட்டு போய்டுவாங்க… அங்க அப்படி எல்லாம் செய்யுறது இல்லையோ!!!

  “நாகாவதி அணைப் பகுதியின் அருகில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் அற்ப விலைக்கு வாங்கப்பட்டு அமைந்துள்ள ” கூட்டுறவு வனம்”

  அற்ப விலைக்கு வித்துட்டோம்னு விவசாயிகள் உங்க கிட்ட மட்டும் வந்து அழுது இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… வித்தாங்க இவங்க வாங்கினாங்க… நீங்க சொன்ன மஞ்ச துண்டு காரர் மாதிரி அடிச்சி புடுங்கலைல???

  “சட்டப்பூர்மாக 150 ஏக்கர் நிலங்களையும், 40 பங்குதாரர்களையும் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் உள்ளூர் மக்கள் அல்ல ; சேலம் போன்ற வெளியூர் பணக்காரர்கள்…”
  இதுல உங்க ப்ரிச்சனை என்ன உள்ளூர் காரங்களை ஆட்டத்துக்கு சேர்த்துக்க மாட்டேன் நு பியுஷ் கழட்டி விட்டுட்டருன்னு சொல்றீங்களா???

  “வளர்ச்சி நிதி ரூ.2 இலட்சம் என அறிவித்து விட்டு, 5 ஆண்டுகள் கழித்து இலாபத்தில் பங்கு என்றும் அறிவித்தார். எதுவும் நடக்கவில்லை. பலருக்கு பட்டா கூட கிடைக்கவில்லை. நாம் இந்த பணக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் பற்றி கவலைப்படவில்லை.”
  வேற என்ன தாங்க உங்க பிரச்சனை???

  “இதே காலகட்டத்தில், தருமபுரியில் வரவிருந்த சிப்காட் தொழில்வளாகத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பியூஸ் ஏன் ஈடுபட்டார் என்பது நமது கவலையாக உள்ளது.”
  இப்போ தான் POINT க்கு வர்றீங்க… இவ்ளோ MATTERS அ சொன்ன நீங்க, இதுக்கான காரணத்தையும் விளக்கமா சொல்லி இருக்கலாம்…

  “இன்றும் கூட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கரடுகளாகத் தான் உள்ளன…”
  CORRECT தான்…. அதுக்கு நீங்க எதாச்சும் செய்யலாம் னு நினச்சிட்டு இருக்கீங்களா??? இல்லை தான???

  “ஏழை விவசாயிகள் நிலங்கள் இழந்தார்கள்; புறம்போக்கு நிலங்களையும் இழந்தார்கள்; பியூஸ் தடுப்பணைகளை அமைத்ததால் நீராதாரங்களை இழந்தார்கள்; வெளியேறினார்கள் அல்லது அங்கேயே கூலி வேலைக்கும் சென்றார்கள் என்பதைப் பற்றி தான் நமது கவலையுள்ளது.”
  SAME FEELING…… இப்போ அங்க SIPCOT வந்து இருந்தா என்ன ஆகி இருக்கும் னு நினைக்கிறீங்க???

  “இந்த கூப் பாரஸ்டுக்குள் எவ்வளவு ரெவின்யூ நிலம், வனநிலம் வளைத்துப் போடப்பட்டுள்ளது, நில உச்சவரம்பிற்கு மேலாக எவ்வளவு நிலங்கள், யார் யார் பெயரில் உள்ளது என்பது எல்லாம் தமிழக அரசாங்கம் கவலைப்பட வேண்டிய விசயங்களாகும்.”
  சாமி… இதுல அப்போ உங்க கவலை என்ன??? மஞ்ச துண்டு ஐயாவும் பச்ச புடவை அம்மாவும் எவ்ளோ வளைச்சி போட்டு இருக்காங்கனு ஒரு சர்வே எடுக்க கிளம்புவோம்… அது காடு… கூட்டுறவு காடு… அவ்ளோ தான்…

  “கூட்டுறவு தத்துவத்தின் சாரமே, பின்தங்கிய பிரிவினர் முன்னேற்றத்திற்கு உதவும் முறையே கூட்டுறவு ஆகும்.”
  இது ஒரு நல்ல கொள்கை விளக்கம்… நாளைக்கே தஞ்சை கல்வெட்டுல பதிக்க வைப்போம்…

  “SEED முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவோ, அதன் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டதாகவோ தெரியவில்லை.”
  தூரத்துல இருந்து பார்க்க உங்களுக்கு அப்படி தெரியலன்னா பியுஷ் கிட்ட போய் கேட்டு வாங்கி பார்த்து இருக்கனும்…

  “அடுத்தவர் முதலீட்டில் மூங்கில் பயிரிட்டு, தனக்கான தேவைகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்ளும் சாமர்த்தியமான வியாபாரிகள் பியூஸ் சேத்தியா ஆவார்.”
  உங்கள் தொழில் என்னவென்பது எனக்கு தெரியாத காரணத்தினால் உங்களின் இந்த கூற்றுக்கு, நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை…

  “மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அவர்களோடு பியூஸ் சேத்தியாவை ஒப்பிட வேண்டாம்!”
  ஒப்பனைகளே இங்கு இல்லை… அது தேவையும் இல்ல… முதலில் நீங்கள் கூப் பாரஸ்ட் ஐ நேரில் கண்டவரா??? அப்படி இல்லாத பட்சத்தில் அது வெறும் மூங்கில் காடு என்று வெறும் வார்த்தைகளை எப்படி வீசுவீர்கள்??

  “சேலம் மக்கள் குழு Salem Citizens Forum என்ற அமைப்பானது உருவானது ; அரசாங்கத்திடமிருந்து ஏரிப் பராமரிப்பை பெற்றுக் கொண்டது. பியூஸ் அதில் இணைந்து கொணடார். படிப்படியாக அமைப்பே அவருடையதாக மாற்றிக் கொண்டார். அதிலிருந்த நல்லவர்கள் பலரும் வெளியேறிவிட்டனர்.”
  ஒரு கோடி அப்பே… என்ற COMEDY போல உள்ளது இந்த கூற்று… நல்லவர்கள் பலரும் வெளியேறிவிட்டனர்… நீங்கள் சேலம் மக்கள் குழு (Salem Citizens Forum) த்தின் MEMBER ஆ??? அந்த குழுவுடன் சேர்ந்து இதுவரையில் எதாவது நல்லது செய்ததுண்டா??

  “இதுவரையில் ரூ.52 இலட்சம் செலவு செய்துள்ளதாக பியூஸ் கூறுகிறார். சேலம் மக்கள் குழு பதிவு செய்யப்பட்ட அமைப்பும் அல்ல !”
  சரி………. அதுக்கு???

  “ஏரி பிரபலமானதால் ஆதாயம் அடைந்த பியூஸ் உறவினர் மதன்லால் சேட் சுமார் 40 ஏக்கரில் பிளாட்டுகள், வீட்டு மனைகளை அப்பகுதியில் அமைத்திருந்தார். அவரது நிலத்தின் மதிப்பு உயர்ந்தது”
  மதன்லால் சேட் நிலத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பது மட்டும் தான் பியுஷ் இன் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும்… அப்படிதான சொல்ல வரீங்க???

  “2015 ல் தான், மாரி ஸ்தலம் Mari Sthalam என்ற டிரஸ்ட்டை பதிவு செய்துள்ளனர். (Axis Bank a/c no. 915020020105876). இதிலும் ஏராளமான வரவு செலவுகள் நடந்து வருகின்றன. முறையான தணிக்கை உள்ளதா எனத் தெரியவில்லை.”
  நீங்கள் ஒரு நல்ல தணிக்கையாளரை பியுஷ் க்கு அறிமுகம் செய்து வைக்கலாம்… அல்லது வருமானவரி / REVENUE DEPT. இடம் உங்கள் புகாரை கொடுக்கலாம்…

  “பல்வேறு மட்ட ராஜதந்திர முயற்சிகள் மூலம், வனத்துறையின் 20 டன்கள் மூங்கில்களை கருங்காலி கிராமத்தில் இருந்து பெற முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டது; பெற்றதாகவும் தெரிகிறது.”
  அந்த ராஜதந்திரங்கள் தெரிந்தால் போலீசிடம் ஏன் ஐயா அவரு அடி வாங்க போராறு??

  “கோல்டன் கேட்ஸ் பள்ளியில் குவிக்கப்பட்ட மீதியான நிவாரணப் பொருட்கள் நிலை ஏன்னவென்றெல்லாம் தெரியவில்லை…”
  சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய நிவாரணப் பொருட்கள் நிலை ஏன்னவென்றெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் போல….. எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்…

  “இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழலியலாளர் என்பதெல்லாம் முகமூடியே! 2000 களின் காலகட்டத்தில் அவர் செய்த கார்ப்பரேட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சில நண்பர்கள் வழங்கியுள்ள புரட்சியாளர் முகமூடி பற்றியும், பல்வேறு NGO க்களுடனான அவரது உறவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன்”
  அப்படியே, கார்ப்பரேட் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ன என்ன???
  அந்த எதிர்ப்புகளை அவர் ஏன் செய்தார்???
  எப்படி செய்தார்???
  இது எல்லாம் கூட உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்… அவைகளைப்பற்றியும் விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்…

  “பியூஸை போராளியாக்கி, உண்மையான மக்கள் ஊழியர்களை குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட வேண்டாம்.”

  பியுஷ் தனியாக தான் இவ்வளுவு வேலைகளையும் செய்கிறாரோ???? உண்மையான மக்கள் ஊழியர்கள் அவருடன் இல்லவே இல்லையோ!!!!!

  என்னங்க சார்….. நீங்க போட்ட ஒரு விடயம் கூட ஒப்புக்கரமாதிரியே இல்லையே…. எனது இந்த பதிவிற்கான உங்களின் நேரடி பதிலை காண ஆவலுடன் இருக்கிறேன்….

  Like

 12. நாம் ஒரு செடியை கூட நடமாட்டோம். ஆனால் மற்றவர்கள் குறையை மட்டும் கூறிக் கொண்டே இருப்போம். பியூஸ் மனுஷை, ப்யூஸ் சேத்தியா என்று உங்கள் கட்டுரையில் ஆரம்பிக்கும் போதே உங்களின் நோக்கம் புரிகிறது.

  Like

 13. Well said Raj Kumar bro…

  @ author

  So the author decided to bring a change in every readers mind… further he predicted himself that most readers will believe if our posts when it filled with statistics alike details, dates, photographs…. bla bla bla….
  That soon transforms as a hatred towards Piyush Manush….

  First off all I have noted, in your post word by word you mentioned ‘Sethia’.

  As you made a master mistake there which tend to think deep about your view through our Piyush manush.

  What about news that he had stopped jindal, Vedanta groups…

  Being a common man, I’m saying this….

  unga parupu inga vegala sir🙏

  If you have guts do the survey through any huge politician, businessman….

  Like

 14. Well said Raj Kumar bro…

  @ author

  So the author decided to bring a change in every readers mind… further he predicted himself that most readers will believe if our posts when itfilled with statistics alike details, dates, photographs…. bla bla bla….
  That soon transforms as a hatred towards Piyush Manush….

  First off all I have noted, in your post word by word you mentioned ‘Sethia’. As you made a master mistake there which tend to think deep about your view through our Piyush manush.

  What about news that he had stopped jindal, Vedanta groups…

  Being a common man, I’m saying this….
  .
  unga parupu inga vegala sir🙏

  Like

 15. Mr Chandra Mohan,

  From ur writing I could conclude, u never visited coop forest or a place called jarugu

  During peak summer, I visited here, and u know lots of water harvesting techniques attracted me,

  Do you have any idea on digging a small trench and how many man hours it requires along with machine hours?

  Your writing resembles thamizh nandu story,

  Anyways I admire the way u narrate things and I wish you have gutz to write Same way how missionary people get their money from abroad, hope it’s not against ur writings

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.