சமூக – அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்…
தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த என்னைப் பற்றிய கட்டுரை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கட்டுரையின் தொடக்கத்திலேயே எனக்கும் அவருக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லை என தோழர் தெரிவிக்கிறார். சரியாகச் சொன்னீர்கள் தோழர் சந்திரமோகன், நான் உங்களை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை எனும்போது உங்களுக்கு எதிராக நான் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. ஆனால் தோழர் என்னை இத்தனை காலமும் பின் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆமாம்…ஏரிகளைப் புனரமைக்கவும், நீர் சேகரிப்புக்கும், மண் வள மேம்பாட்டுக்கும், காடுகளை உருவாக்கவும் எனக்கு நிதி தேவை.
மூக்கனேரியை மட்டும் நாங்கள் புனரமைக்கவில்லை. அம்மாபேட்டை ஏரி, இஸ்மாயில் கான் ஏரி, குண்டக்கல் ஏரி, அரிசிபாளையம் தெப்பக்குளம், சமீபத்திய பள்ளப்பட்டி தெப்பக்குளம் ஆகியவையும் அடங்கும். எங்கெல்லாம் நீர் நிலைகள் அழகாக இருக்கிறதோ அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. எண்ணற்ற மக்கள் அதற்காக எனக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். அதுபோல என்னுடைய திட்டங்களுக்கு அவர்கள் உதவினால் மகிழ்வேன்.” என்று தெரிவித்திருக்கும் அவர்,
வேதாந்தா- மால்கோ திட்டத்தை நீதிமன்றம் சென்று தான் நிறுத்தியதாகவும் அதுபோலா ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்துக்கு எதிராகவும் தான் போராடியதாகவும் பட்டியலிட்டுள்ளார்.
மூங்கில் குறித்தான கேள்விகளுக்கு மூங்கிலை சந்தையிலும் கருங்காலி அருகே உள்ள காடுகளிலிருந்து 20 டன் காய்ந்த மூங்கிலை ஒதுக்கீடு மூலம் பெற்றதாக குறிப்பிடுகிறார். காய்ந்த மூங்கிலை அறுவடை செய்ய, பணம் கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவிக்கிறார். மூங்கிலை வளர்ப்பதன் மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவதில் பலர் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என கேள்வி எழுப்புகிறார் பியூஸ் மனுஷ்.
மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் கூடத்துக்கு மின்சாரம் திருடப்படுவதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் மறுத்துள்ள அவர், மூங்கில் பொருட்கள் பெரும்பாலும் கையாள் செய்யப்படுவை என்றும் குறைந்த அளவே மின்சாரம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கிறார்.
கூட்டுப்பண்ணை குறித்து விளக்கமாக இணைய விவாதங்களில் தெரிந்துகொள்ள முடியாது என்னும் மானுஷ், வார இறுதி நாட்களில் நேரில் வந்து பார்க்குபடி அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வனத்துக்காக வாங்கப்பட்ட நன்கொடை விவரங்களையும் அங்கே காணலாம் என்கிறார். பிணையில் வெளியே இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கையெழுத்திட வேண்டியிருப்பதாகவும் சொல்கிறார் பியூஸ் மானுஷ்.
பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வதும் கூட அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், அந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டிப்பது நமது அனைவரின் கடமை.
தோழர் சந்திரமோகனுக்குப் பதிலளிக்கத் துவங்கிய பியூஸ் காவல்துறைக்குத் தகவல் அளிப்பவராக அவரைச் சித்தரிக்க முயல்கிறார். நாயக்கன் கொட்டடாய் பிரச்சனையில் தலையிட்டு காவல்துறையை அம்பலப்படுத்தியவர் தோழர் சந்திரமோகன். ஆந்திராவில் பலியான மரம் வெட்டும் பழங்குடிகள் பிரச்சனையில் தலையிட்டு அப்பிரச்சனையை தமிழக அரசியலின் கவனத்துக்குக் கொண்டுவந்து அகில இந்திய மக்கள் மேடையின் அமைப்பாளர்களில் ஒருவர். அந்த வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞர் சைதன்யாவிற்குப் பாராட்டுக் கூட்டம் நடத்த தோழர் சந்திரமோகன் முயற்சியெடுத்தபோது போலீஸ் அதற்கு அனுமதிய மறுத்தது. போலீஸ் தடையை உடைத்து கூட்டத்தை நடத்தியது எமது கட்சி. தோழர் சந்திரமோகன் குடும்பத் திருமணத்திற்குக் கூட காவல்துறை குவிக்கப்பட்டது என்றால், தோழரின் செயல்பாடுகளை காவல்துறை எப்படி கணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படி செயல்படும் கட்சியை/ அதன் தலைவர்களில் ஒருவரை காவல்துறைக்கு தகவல் அளிப்பவர் என்று பியூஸ் குறிப்பிடுவது அவர் யார் என்பதைக் காட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை நான் மதுரையில் இருந்து பியூசை அழைத்தேன். எந்தப் பிரச்சனைக்கு என்று நினைவில்லை. அவர் மிக ஏகத்தாளமாக எனக்கு பதிலளித்தார். “என்ன புரட்சி செய்றிங்க .. கம்யூனிஸ்ட் கட்சியெல்லாம் தேறாது… வாங்க எங்களைப் பாத்து கத்துகிங்க“, என்ற பொருள்பட என்னிடம் அவர் பேசினார்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம், அதுவும் தொலைபேசியில் பேசும் ஒருவரிடம் அறிவுரை வழங்குகிறார் என்றால், அவரின் அறிவாற்றலை எப்படி புரிந்துகொள்வது? ஆர்வக்கோளாறுகொண்ட இளைஞராக, எப்படியிருந்தாலும் விவரமில்லாத மனிதராக இருப்பார் என்று நினைத்து அழைப்பைத் துண்டித்தேன்.அதன்பின்தான், அவர் விவரமான வணிகர் மட்டுமல்ல, முற்போக்கு நடவடிக்கைகள் நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர்களை திசை திருப்புபவர் என்றும் தெரிந்துகொண்டேன்.
தொழில் நிறுவன சமூக சேவை என்ற ஒன்று உண்டு. அப்படிச் சேவை செய்வதால், தொழில்நிறுவனத்தின் கொள்ளை/ தொழிலாளர் சுரண்டல்/ சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாது போகாது. மனுஷ் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப, வணிக நிறுவன சமூக சேவை செய்கிறார் என்று நினைக்கிறேன். அப்படியானால், அதனை அவர் வெளிப்படையாகச் செய்ய வேண்டும். தனது நடவடிக்கைகளில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. தன்னை ஓர் தியாகம் செய்யும் சமூக சேவகராகப் படம் காட்டிக்கொள்ளக் கூடாது. மற்றவர்களை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளைத் தாக்குவதன் மூலம் தன்னை ஒரு புரட்சிகர டான் குயிக்சாட்டாகக் காட்டிக்கொள்ளக் கூடாது.
LikeLike
https://web.facebook.com/photo.php?fbid=10154478301589617&set=a.10150592669809617.403193.827374616&type=3&__mref=message_bubble
PLEASE SEE THE ABOVE LINK. THOSE WHO HAVE VISITED CO-OP FOREST POSTED THEIR COMMENTS AND THE AMOUNT COLLECTED FOR CAMPS. ITS OUR CRUEL MIND NOT ALLOWING A PERSON TO WORK FOR THE SOCIETY AND ENVIRONMENT.
LikeLike