‘காக்கா முட்டை’ திரைப்பட இயக்குனர் மணிகண்டனுடன் ஞாயிறு (31-07-2016) மாலை 5.30 மணிக்கு ஓர் உரையாடலை ஏற்பாடு செய்துள்ளது தமிழ் ஸ்டுடியோ. காக்கா முட்டை திரைப்படம் குறித்து, திரைக்கதையாக்கம் குறித்து, ஒளிப்பதிவின் தொழில்நுட்பம் குறித்து இன்னும் பல்வேறு வகைகளில் மணிகண்டனுடன் உரையாடலாம். சந்திப்பை முன்னிட்டு, ஞாயிறு நூறு தமிழ்ப் படங்கள் திரையிடல் நடைபெறாது. ஞாயிறு திரையிடப்பட வேண்டிய படம் திங்கள் திரையிடப்படும் என தமிழ் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
இடம் : பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
