“இந்தக் குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை”: டி. எம். கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது குறித்து ஜெயமோகன்

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகசசே விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே என்ற பெயரில் தனது வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியிருக்கிறார். அதில் டி. எம். கிருஷ்ணா மிக மிக சுமாரான பாடகர் என்றும் தி ஹிந்து நாளிதழின் துணையால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பதிவு கீழே தரப்பட்டுள்ளது:

டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான பாடகர் அவர். அவரது எந்தக் கச்சேரியையும் இரண்டாம்முறை கேட்கமுடியாது. படித்துவைத்ததைப் பாடுவார், அதற்கு பாட்டுவாத்தியார்த்தனம் என்று பெயர். சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்.

ஆனால் விருது அவரது ‘மனிதாபிமானச்’ செயல்பாடுகளுக்காக எனத்தெரிகிறது.என்ன மனிதாபிமானச் செயல்பாடுகள் என்று தேடினால் இந்து ஆங்கில நாளிதழில் எழுதிய ‘முற்போக்கு’ கட்டுரைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். குடிசைக்கு இசையை கொண்டு செல்ல முயன்றாராம். அது இதுவரை நிகழ்ந்ததில்லையா என்ன? அப்படி அதில் என்ன நீண்டகாலச் சாதனையை அவர் செய்திருக்கிறார்?

அவரது பங்களிப்பு என்பது எந்த ஆழமான புரிதலும் இல்லாமல், சூழலில் புழங்கும் பொதுவான மரபு எதிர்ப்புக் கருத்துக்களை , முற்போக்குக் கோஷங்களை, தட்டையான வேகத்துடன் கூச்சலிடும்  கட்டுரைகளை எழுதியதுதான். அவற்றைவிட பலமடங்கு மேலானவை ஞாநி எழுதும் தட்டையான கட்டுரைகள்.

பொதுவாகப் பிராமணர்கள் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கவோ, தாண்டவோ நாலடி கூடுதலாக எம்பிக்குதிப்பதுண்டு, அக்குளில் பிராமணியத்தை ரகசியமாக வைத்திருப்பவர்களின் சத்தம் மேலும் அதிகமாக இருக்கும். .டி.எம்.கிருஷ்ணா அதிகமாகச் சத்தம்போடுபவர் என்பதனால் எனக்கு அவர் மேல், அவரது  தி ஹிண்டு- அய்யங்காரிய பின்னணிமேல், எப்போதுமே சந்தேகம்தான். அவரைப்பற்றி அறிந்த ஒவ்வொன்றும் அந்த ஐயத்தை வலியுறுத்துவதாகவே இருந்தன.

தமிழின் பண்பாட்டியக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர் அவர். மிக எளியமுறையில்கூட தமிழக இலக்கியம், கலைமரபு பற்றிய அறிமுகமே இல்லாத ‘பெரியவீட்டுப்பிள்ளை’. பொத்தாம்பொதுவான ஒரு மொழியில் எது பொதுவெளியில் ‘அதிர்வு’களை உருவாக்குமோ அதைமட்டும் பேசும் காலி டப்பா.

ஆக, அவருடைய தி இண்டு பின்னணி மட்டுமே இவ்விருதுக்கான தகுதியை உருவாக்கியிருக்கிறது. இந்த விருது மட்டும் இல்லையென்றால் இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை.

இது முழுக்கமுழுக்க பணமும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களுக்குள் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வென்றெடுக்கும் கிரீடம். இவருக்கு இனி அந்த அசட்டுக்கட்டுரைகளுக்காக  ஞானபீடம் கிடைக்கலாம். நோபலுக்கே முட்டிப்பார்க்கும் அளவுக்கு அவருக்கு பணபலமும் ஊடகபலமும் இருக்கிறது

சமீபத்தில் மிகக்கூசிய ஒருதருணம் இது.”

5 thoughts on ““இந்தக் குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை”: டி. எம். கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது குறித்து ஜெயமோகன்

 1. தன் பெயரை பாகுலேயன் பிள்ளை ஜெயமோகன் என்று குறிப்பிடும் பலகையை தன் அறையில் கதவில் வைத்திருப்பவர் ஜெயமோகன். அதை புகைப்படம எடுத்து தன் இணையதளத்தில் போட்டுக் கொள்வார். ஆனால் அவர் தன் பெயரில் சாதியைப் போட்டுகொள்ளாத, சாதியத்தை விமர்சிக்கின்ற கிருஷ்ணா மீது அவதூறு செய்கிறார்.

  கிருஷ்ணா பல இதழ்களில் எழுதியுள்ளார், ஒரு விரிவான நூலும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.தான் ஐயங்கார் என்ற பெருமிதத்துடன் சாதிய மேலாண்மையை முன் வைத்து அவர் எழுதுவதில்லை. அவர் எழுதியதை முழுவதும் படித்து , அவர் பிறருடன் செய்யும் முயற்சிகளை அறிந்து அவர் பரிசுக்கு தகுதியானவரா என்று எழுதினால் அர்த்தம் உண்டு.ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அவருக்கு கிருஷ்ணா ஆங்கிலத்தில் கர்நாடக இசை குறித்தும், அதில் மரபு, நவீனம், இசைக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அந்நூலில் எழுதியுள்ளார் என்பதாவது தெரியுமா.

  ஜெயமோகன் இப்படியெல்லாம் எழுதி தன்னை தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்.அதுவும் நல்லதுதானே.

  Like

 2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் தொடர்புறுகின்றவர்கள் மீது எப்போதும் ஜெயமோகனுக்கு ஒரு காழ்ப்புணர்வு இருப்பது இன்று மீண்டும் உறுதியாகி விட்டது.

  Like

 3. இந்த உலக மகா அறிவாளிக்கு மகஸேஸே விருது கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் நாளைக்கே இண்டுவின் வாசலில் நின்றாலும் நிற்பார்

  Like

 4. சக எழுத்தாளர்கள் தாக்கப்பட்டால் கூட கலங்காமல் தன் தனி ??? தன்மையை கூசாமல் இருப்பவர்.அய்யரும் கொங்கு வேளாளரும் தான் சமூகத்தில் மிகவும் மென்மையானவர்கள் என்று பெரிய விஷயங்களைக் கூட சாதிச் சாயம் பூச முனைபவர் அவர். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

  Like

 5. நீதிக்கட்சி டி.எம்.நாயர் மாதிரி,திராவிட கழக ஈ.வெ.ராமசாமி மாதிரி ஜெய மோஹன் பிராமணர்களை எதிர்த்துப் போராட வேண்டியது தான் பாக்கி.பிரச்சினைக்கு ஏன் ஜாதி சாயம் பூசி தன்னின் பிராமண துவேஷத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்?அப்படியானால் முன்னவர்கள் சொன்னதெல்லாம் உண்மையா? ஜெ.மோ வின் எதிரி கருணாநிதியும் இந்து குழுமத்தைப் பற்றி இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் தமிழ் நாட்டில்!எல்லாம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்!Brahmin or Non Brahmin?ஜெ.மோ.சொன்ன இது ஒன்றே போதுமே கழகத்தினருக்கு!சீக்கிரத்தில் ஜெ.மோ.கழகத்தில் சேர்ந்து இம்மாதிரியான அநீதியை எதிர்த்துப் போராடலாமே?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.