வைரமுத்துவின் அந்த சிரிப்பு, யதார்த்தமானது அல்ல, வெறும் வெறுப்பில் வந்தது அல்ல, அது விஷமம்!

வாசுகி பாஸ்கர்

வைரமுத்து பேசியதை நானும் கூட ரொம்ப லைட் டோன்ல எடுத்துகிட்டோமோ என தோணியது, அதற்கு காரணம் இருக்கு, வைரமுத்து ஒரு முற்போக்குவாதி, திராவிட அரசியல் சார்பு கொண்டவர், இறை மறுப்பாளர், என்கிற விவகாரங்களால் அவர் பேசியதில் மிஞ்சி போனால் வெறும் வாய்ப்பு மறுக்கப் பட்ட தொனி மட்டுமே என விட்டு விடலாமா என்கிற போது தான் அந்த வீடியோவில் அந்த நமட்டு சிரிப்பு, ஏளன சிரிப்பு, என்னை உருத்திக் கொண்டே இருக்கிறது!

இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமான பிரச்சனை கூட வெறும் ஈகோ என்கிற புள்ளியில், இளையராஜா கொஞ்சம் ஈகோ அதிகம் இருப்பவர் என்கிற காரணத்தினால் பிரச்சனையின் பின்னணியில் ராஜாவுக்கு அதில் அதிக பங்கு இருக்கும் என்பது பொது அபிப்பிராயம். காரணம் அதற்கும் மேல் என்பது தான் ராஜா வட்டத்தினுள் நான் நெருங்கிய போது தெரிந்துக் கொண்டது!

சுந்தரபாண்டியன் க்ளைமாஸில் சூரி சசிகுமாரிடம் “அவனுங்களை அப்படியே ஒதுக்கிட்டயே டா”, நடந்தது தெரியும், சொல்லு’டா என கேப்பார், அது மாதிரி வைரமுத்துவுக்கும் ராஜாவுக்குமான பிரச்சனை ஒரு துரோக கதை, வைரமுத்துவின் மறைமுகமான சாடல், ராஜா வெளியில் சொல்லிக் கொள்ள விரும்பாத பிரச்சனை, அந்த பேச்சை எடுத்தால் கூட அதை விரும்பாத தன்மை ராஜாவிடம் இருப்பது உண்மை! விடுங்கள், பிரச்சனை அதுவல்ல!

நான் சொல்ல வருவது, நம்மூர் முற்போக்காளர்கள், நாத்தீகர்கள், புரட்சி யாளர்களின் இன்னொரு முகம், நாட்டாமை படத்தில் ஒரு காட்சி, பொன்னம்பலம் ஒரு பெண்ணை கற்பழித்து விட, விஜயகுமார் பஞ்சாயத்தில் சொல்வார் ” ஏண்டா கருத்தில்லாத நாயே, ஏழை பாழைங்க கோழை ன்னு நினைச்சிட்டியா, அவங்களுக்கு படுக்க பாயும், குடிக்க கஞ்சியும் நாம தானடா கொடுக்கிறோம், அதுல நீயே போய் படுத்தா என்னடா அர்த்தம்” என திருமணத்தில் முடியும்!

இது முதல் நிலை புரட்சி, இந்த மாதிரி தமிழ் சினிமாவில் எண்ணற்ற காட்சிகள் உண்டு, இது எல்லாமே நமக்கு அந்தந்த காலத்து நியாயமாக தெரிந்தாலும், இது அப்படியே நீடித்து இருக்க வேண்டுமென நினைப்பதில் தான் பிரச்சனை! தீர்ப்பை ஜமீன்தார் குடும்பம் தான் சொல்லணும் என்பதில் தான் பிரச்சனை, நீதியானாலும், நியாயமானாலும், அது அவனவன் தான் சொல்லணும் என்பதில் தான் பிரச்சனை, தான் பிள்ளைக்கு தவறான தீர்ப்பை சொல்லுகிற போது நாட்டாமையை கொல்லுகிற அளவு கோவம் வருகிற சக ஜமீன் வம்சமான பொன்னம்பலம் அப்பாவுக்கு வருகிற கோவம், கூனி குறுகி நியாயம் கேட்கும் கற்பழிக்கப் பட்ட அந்த தந்தை ஏன் நாட்டாமையிடம் கைகட்டி இருக்க வேண்டும்? அதை அவன் நேரடியாகவே பொன்னம்பலத்தையும், திமிர் பேசும் பொன்னம்பலம் அப்பனையும் அதே திமிரோடு கேட்கலாமே? அதென்ன எதிரிகள் எல்லாம் பங்காளிகளாகவே இருக்க, உங்க நியாயத்தை நிரூபிக்க மட்டும் ஏழைகள் என மறைமுகமாக சொல்லப் படுகிற கீழ் சாதி காரர்கள் நியாயம் கேட்டே போராடுவது போலவும், அவங்களுக்கு பார்த்து நல்லது செய்வது அதே ஆண்டையர்களாக இருக்கிறார்கள் என்கிற பதில் கேள்வி எழுகிற போது தான் பிரச்சனை வெடிக்கிறது!

ஒரு வேலை கற்பழிக்கப் பட்டது நாட்டாமை வீட்டு பிள்ளையாக இருந்து, நாட்டாமை தோட்டத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளி பஞ்சாயத்தில் நிற்க வைக்கப் பட்டால் இதே தீர்ப்பை தான் நாட்டாமை கொடுப்பாரா?

உயர் சாதி நாட்டாமை, கீழ் சாதி என சொல்லப் படுகிற பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது மட்டும் அது புரட்சியாகவும், அதுவே அவர் வீட்டு பெண்ணாக இருந்தால் அது பஞ்சாயத்துக்கு கூட வரமால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் என்கிற சொல்லப் படாத விதி இருக்கிறதே, அது தான் இன்று வரை ஆணவ கொலையாக தொடர்கிறது! அது பெரிய துரோகமாக பார்க்கப் படும், ஏனினில் ஆணின் விந்துவுக்கு தான் இவர் யார் என முடிவு செய்யும் தன்மை நம் சமூகத்துக்கு உண்டு, பெண்ணின் கர்ப்ப பைக்கு அது கிடையாது!

ஆக, இந்த கேள்விகளை நீங்கள் நீண்ட நாள் பொத்தி வைத்திருக்க முடியாது, கேட்க தான் செய்வார்கள், கேட்பதற்கான காலம் வரும், ஆயிரமாண்டு ரிகோஸ்ட் ஆகவே கேட்டு, ஒரு நாள் திமிரோடு கேட்டால் கோவம் வரத்தான் செய்யும், ஆனால் அந்த கோவம் நியாயமானது, அது வரத்தான் செய்யும்! காலம் தான் இதையெல்லாம் நிர்ணயம் செய்யும்!

மேற்சொன்ன தகவல், செலக்டிவ் முற்போக்காளர்களுக்கு கானது, நீங்கள் அழுத்தப் படுத்த படும் வரை, உங்கள் மீது கரிசனம் இருக்கும், திமிரிக் கொண்டு எழும் போது அது திமிராகவே பார்க்கப் படும், இந்த வகையறாவில் நான் ஏராளமான முற்போக்காளர்கள், இறை மறுப்பாளர்கள், புரட்சியாளர்கள் சந்தித்து இருக்கிறேன்!

வைரமுத்துவின் முற்போக்கு அத்தகையது தான், சந்தேகமே வேண்டாம், சாதி மறுப்பு எழுத்துக்கள், கவிதைகள், எந்த அளவு வாழ்க்கையில் நடைமுறை படுத்தப் படும், எவ்வளவு உயிர்ப்போடு இருக்கும், என்பது எல்லாம் நீங்கள் மிக நுணுக்கமாக பார்த்தால் தெரியும்!

நான் சுப்ரமணிய ஸ்வாமியின் ஏளன சிரிப்பில் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்தவன், அவனை வெறும் லூசாக பார்த்து பழக்கப் படாதவன், வைரமுத்துவின் அந்த சிரிப்பு, யதார்த்தமானது அல்ல, வெறும் வெறுப்பில் வந்தது அல்ல, அது விஷமம்! அந்த முற்போக்குக்கு வேலிடிட்டி உண்டு, தலித் அல்லாதவர் இந்த சமூகத்துக்கு செய்ததை எல்லாம் பட்டியலிடும் போது, அதையே தலித் கேக்கும் போது ஏண்டா உங்களுக்கு எல்லாம் உறுத்துது? காலம் முழுக்க நியாயத்தை நீங்க சொல்லணும், அவுங்க கேக்கணும்! அதானே?

நான் கலகக் காரன் அல்ல, என்னை நீங்கள் தாராளமாக நம்பலாம், மனசாட்சிக்கு விரோதமாய் ஒரு வார்த்தை என்னுள் இருந்து உதிராது! அந்த சிரிப்பில் விஷமம் இருப்பது உண்மை! கபாலியை கிண்டலடிப்பவர்கள், வெறுப்பவர்கள் அனைவருமே வெறும் சாதி வெறியர்கள் அல்ல என்பதை நானறிவேன், அதில் உள்ள பிரிவினைகளையும் நான் அறிவேன்! தனித்தனியாக தெரிகிறார்கள்!

கரும்பலகையை மட்டும் பார்த்து படிக்காமல், மோட்டுவலையையும், சக மாணவரையும், ஜன்னலுக்கு வெளியேயும் அதிகம் பார்த்து படித்து வளர்ந்தவன் நான்!

“கபாலிக்கு முன்னாலவே கோட்டு போட்டது நீங்க தானே” என பல்லை கடித்து கொண்டு வைரமுத்து சிரிப்பார் பார், அந்த சிரிப்பில் இருக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.