மோடி + அதானி = மோடானி

இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டுவதே `மோடானி மாடல்’ என்று நில பாதுகாப்பு இயக்கத்தின் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற அறிஞர்கள் சாடியுள்ளனர்.நில பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்பு மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் குஜராத் வளர்ச்சி என்ற மாயை உடைத்து நொறுக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தில் பாஜக கடந்த 17 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ளது. வளர்ச்சி வளர்ச்சி என்று முன்னிறுத்தப்பட்ட குஜராத்தின் இருண்ட பக்கங்கள் வெளியே வந்திருக்கின்றன என மாநாட்டில் உரையாற்றிய தலைவர்கள் கூறினர். குஜராத் மாடல் என்று சில ஊடகங்களில் இம்மாநிலத்தில்தான் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளின் உரிமைகள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

பொதுமக்கள் கூட கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து மோடி – அதானி “மோடானி மாடல்” என்று அழைக்கின்றனர். இந்த இருவரும் இணைந்து குஜராத்தின் இயற்கை வளங்களையும் நிலங்களையும் சூறை யாடியுள்ளனர். குஜராத் மாநில அரசு 78 சதவீத நிதியை தொழிற்துறை மற்றும் மின்துறைக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் கல்விக்கு 2 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.பாதுகாப்பற்ற குடிநீரைத்தான் சாதாரண மக்கள் குடிக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 1000லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.10 விலைக்கு கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வளங்களும், மனித உழைப்பும் கொள்ளையடிக்கப்படுகிறது எனமாநாட்டில் உரையாற்றிய நிலப்பாதுகாப்புஅமைப்பின் தலைவரான பி.கிருஷ்ண பிரசாத் கூறினார்.

பொருளாதார பேராசிரியர் ரோஹித் தக்லா பேசுகையில், “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் என்பது பீகாரை ஒப்பிடும் போது பாதியாகவே உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி1.78 சதவீதம்தான்; சுகாதாரத்திற்கு 0.42சதவீதம்தான், ஊட்டச்சத்து உள்ள குழந்தைகள் 2.28 சதவீதம்தான்; பள்ளி செல்லும் 15 முதல் 17 வயது வரையிலான பெண்குழந்தைகள் விகிதம் மிக மோசமாக உள்ளது. 6 வயது வரையிலான குழந்தை களில் 47 சதவீதம் ஊட்டச்சத்தின்மையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

சுற்றுச்சூழல் ஆய்வாளர் ரோஹித் பிரஜாபதி பேசுகையில், “குஜராத் மாடலில் ஜனநாயகம் அல்லது சிவில் உரிமை களுக்கு எவ்வித இடமும் இல்லை. அனைத்தையும் முடிவு செய்வது முதலமைச்சரின் அலுவலரே மற்ற அமைச்சர்களோடு சம்பந்தப்பட்ட துறைகளோடு விவாதிக்கப்படாமல் முடிவுகளை முதலமைச்சரும் அவரது அலுவலகமும் மேற்கொள்கிறார்கள். இதுதான் குஜராத் மாடல். ஜனநாயக உரிமை உள்ளிட்ட அனைத்திற்கும் குஜராத்தில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்தவோ, கூட்டங்கள் நடத்தவோ அனுமதி கிடையாது”என்றார். பெரிய தொழில் நிறுவனங்களில் திடீரென பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கடுமையாக குறைக்கப்பட்டனர்; பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலியைத்தான் பெற முடிந்தது; இஎஸ்ஐ மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி கூட முறையாக நடை முறைப்படுத்தப்படவில்லை; தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார உரிமைகள் சலுகைகள் நசுக்கப்பட்டன; கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்கள் லாபத்தை குவித்தன என்றும் அவர் பட்டியலிட்டார்.அனைத்து ஆறுகளின் வளங்கள் சுரண்டப்பட்டு மாசுப்படுத்தப்பட்டுள்ளன. மண்வளம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் பால் உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

சமூகவியலாளர் பேரா. கண்ஷ்யாம் ஷாபேசுகையில், “குஜராத் என்பது முன்மாதிரி யான அரசு அல்ல. இந்த குஜராத் மாடல் என்பது சர்வதேச நிதி மூலதனமும், உலக வங்கியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஆதிவாசிகளின் உரிமைகளும் நிலங்களும் மோடி அரசாங்கத்தின் புதியதாராளமய கொள்கையினால் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது பழங்குடி மக்கள் அல்லாதவர்கள் பழங்குடி மக்க ளின் நிலங்களை வாங்க முடியும். அவர்களின் கல்வி சுகாதாரத்துறை மிக மோசமாக சீரழிந்துள்ளது. கிராமப்புற பொருளாதாரம் என்பது அடித்து நொறுக்கப்ப ட்டுள்ளது. கொடூரமான சுரண்டல்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

நன்றி: தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.