பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார்.
“முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். இதுபோன்ற நேர்மறையான கதாபாத்திரங்களை காட்டியதற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித்துக்கு என்னுடைய பாராட்டை எவரேனும் தெரிவியுங்கள். அதுபோல, அடுத்த படைப்பில் கருப்புத் தோலுடைய பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைக்க அவரால் முடியும் இல்லையா? ” என தனது முகநூல் பதில் அவர் தெரிவித்திருக்கிறார்.