பதிப்பாளர் விலாசினி மீதான எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவுக்கும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீதான முகநூல் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் திவ்ய பாரதி இந்தப் பதிவை எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் Karthikeyan N. அவருடைய பதிவு கீழே:
விலாசினியையும், கிருபா முனுசாமியையும் ஒரே தட்டில் வைத்து பேசும் இந்த போராளி பெண்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இங்கு எந்த காலத்திலும், சமூக வெளியில், பொது சமூகத்தில் விலாசினியும், கிருபாவும் “பெண்” என்ற பொதுப்படையான பார்வையில் பார்க்கப்பட போவதே இல்ல.
விலாசினி என்றுமே வெள்ளை தோலுடைய பார்ப்பன பெண்தான். அந்த பார்ப்பன கண்களின் வழியாகத்தான் இந்த சமூகம் விலாசினியை பார்க்கும்.
ஆனால், இந்த சமூகத்திற்கு, கிருபா என்றுமே தலித் பெண் மட்டுமே. அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆகும் ஒரு நாளிலும், அவரை இது போன்ற ஈனத்தனமான கருத்துக்களில் மூலமே இந்த சமூகம் பேசும், பார்க்கும்.
விமலாதித்த மாமல்லன், எரிச்சல் வரவைக்கும் ஒரு மனிதர்தான். சில நேரங்களில் கொலைவெறி கூட ஆக்கிவிடுவார்.
ஆனால், அவர் விலாசினியை பற்றி எழுதியதில் என்ன பொய் கூறுகளை கண்டுவிட்டது இந்த சமூகம். ஓலா ஓட்டுனரை, ஒரு தொழிலாளியை பொருக்கி என்று அழைத்து தன்னுடைய “சங்கு சுட்டாலும்”மேன்மைதன்மையை காண்பித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், அந்த ஓட்டுனர் குறித்து அத்தனை நாசூகாகா “ஆயுதம் வைத்திருந்தானா” என்று எழுதி நம்மை கொதிக்க வைக்கிறார். இதைத்தானே மாமல்லன் எழுதி இருக்கிறார்.
அவர் எழுத்தில் என்ன வன்மம் தெரிந்தது ?? கார்த்திக்குடன் – விலாசினி எங்கேஜ் ஆகி இருந்த விவகாரமா ?? அது கூட – நீதிமன்றம் வழக்கு வேண்டாம் – என்ற விலாசினியின் “போனால் போகட்டும்” மனப்பான்மைக்கு சான்று காட்டுவதற்கான ஒரு எழுத்துதானே ?
எங்கேஜ் என்று மரியாதையாகத்தானே சொல்லி இருக்கிறார். கிஷோர் சாமி எழுதியதை போல, கவுந்த மலர், வினி சப்புனா, கவிதா சொறிநாய் வள்ளி என்றெல்லாமா ? எழுதி இருக்கிறார்.
இடைசாதி, தலித் சாதியை சேர்ந்த இந்த பெண்களை எல்லாம் கிஷோர் சாமி, மிக கேவலமாக எழுதிய போது எங்கே போனார்கள் இந்த பெண்ணிய போராளிகள் எல்லாம் ?
விலாசினியின் பொய்களை (மாமல்லன் எழுதிய கூற்றுகளின்படி) அப்படியே ஊடகங்களில் எழுத உதவிய கவிதா முரளிதரன் (விலாசினியின் கூற்றுப்படி) எதற்காக, கவின்மலருக்காகவோ, வினி சர்ப்பனாவுக்காகவோ ஊடகங்களில் பேசவில்லை ???
மீனை கொல்லும் மீனவர்களை கொல்லுவதில் தப்பில்லை என்று சொன்ன, சின்மயியை , எதிர்த்து எழுதியதற்க்காகதானே ராஜன் உள்ளிட்டோர் சிறை சென்றார்கள் ???
ஒரு வேலை மீனவ சமுதாயத்தில் இருந்து , சின்மயி மீது புகார் அளித்திருந்தால் இதே போல் சின்மயியை கைது செய்வார்களா ? சின்மயி எழுதியதும் எழுத்துதான். ராஜன் எழுதியதும் எழுத்துதானே ??
பார்ப்பன திமிரை அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு “நான் பெண்; என்னை மிரட்டிவிட்டார்கள்” ஊழை கூப்பாடு போட்டு மற்றவர்களின் பரிதாபத்தை சம்பாதித்து கொள்பவர்களுக்கும்,
அதிகாரம் என்பதே எட்டாக்கனியாக இருக்கும் பெண்கள் போராடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
பெண்கள் எல்லாருமே ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் தமயந்தி அக்கா, ஒரு முறை ரோட்டில் நடந்த சண்டையை தடுக்க போய் , சம்மந்தப்பட்ட ஆண் அந்த அக்காவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது பற்றி எழுதி இருந்தார் அக்கா Dhamayanthi Nizhal எத்தனை பேர் உங்களுக்காக இதே போல் கொதித்தார்கள் ?? எத்தனை பேரை உங்களால் கைது செய்ய வைக்க முடிந்தது ???
தன்னுடைய பார்ப்பன அதிகாரத்தின் மூலம், காவல்துறை அதிகாரிகளிடம் நேரடியாக புகார் அளிக்க சின்மயியால் முடியும். மற்ற பெண்களால் கான்ஸ்டபிளிடம் புகார் அளிக்க இயலுமா ?
பார்ப்பன திமிரில் ஆடும் சின்மயி, விலாசினி போன்ற பெண்களைத்தான் தோலுரித்து தொங்க விடுகிறார் மாமல்லன்.
பெண் பெண் என்றால், அந்த ஓட்டுனரின் வீட்டில், அவருடைய சம்பாத்தியத்தை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்கள் பெண்களில்லையா ? ஒரு வேளை…. இவர் சிறையிலேயே இருந்து விட்டால், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு அவர்கள் என்ன தொழில் செய்தாலும் இந்த சமூகம் ஏற்று கொள்ளும் இல்லையா ?
ஏன் என்றால், தின கூலியை வோட விலாசினியின் பெண்ணியம் பெரிது. மீனவனை சுட்டு கொல்ல சொல்லும், சின்மயியை விட அதை எதிர்த்த (நியாயமாக எதிர்த்த) ராஜனின் செயல் ஆணாதிக்கமமானது.
மற்றபடிக்கு….. கிருபாவையும் – விலாசினியையும் ஒரே தட்டில் வைத்து பேசுவதெல்லாம், கிருபாவின் இத்தனை வருட போராட்டத்தையும், உழைப்பையும் கேவலப்படுத்தும் ஒரு செயல். அவ்வளவே.