
ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் “விமலாதித்த மாமல்லன்” போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் தொகை ஒன்றரை லட்சத்தை தாண்டி விட்டது என அறிகிறேன். இன்னும் தொகை குவிந்த வண்ணமே உள்ளதாம், இது அனைத்தும் இனி பெண்கள் மீது நிகழவிருக்கும் வன்முறைகளை நியாயப்படுத்துவதாக, அவற்றுக்கு பலம் சேர்ப்பதாகவே இறுதியில் அமையப் போகிறது. கார் ஓட்டுநர் மீதான கருணை என்கிற பெயரில், ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு எதிராக அவர்கள் நபர்களையும், நிதியையும் வெளிப்படையாக திரட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாமோ, நிகழ் காலத்தில் கிருபா, விலாஸினிக்கு எதிராக சமூக வலை தளங்களில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கலாமா? வேண்டாமா? எதிர்த்து பதிவிட்டால், நம்மை அவர்கள் தவறாக நினைத்து கொள்வார்களோ…? என்கிற பல கேள்விகளுக்குள் சிக்கி தருணங்களை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த அற்பர்களுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை உரிய நேரத்தில் பதிவு செய்யாமல் கடந்து சென்றால், நாளை நான், மறுநாள் நீங்கள், அதற்கு அடுத்த நாள் உங்கள் தோழி என வரிசையாக இந்த கழிசடைகளின் தாக்குதலுக்கு உள்ளாக போவது மட்டும் நிச்சயம்.
திவ்ய பாரதி, சமூக செயற்பாட்டாளர்.