மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்யும் சட்டம் அமலாக்கச்சொன்ன நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே, அடைப்பை நீக்க மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருக்கிறார் இவர். இது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட படம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வந்த எதிர்வினை:
மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய காட்சி….சட்டத்தை அமல்படுத்தவேண்டியவர்களே மீறும் அவலம்.
Thanks P.C:- Manikandan Vathan
நியாயமாரே…
—————–
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலேயே மனிதக் கழிவை அகற்ற மனிதரைப் பயன்படுத்திய மனு(அ)நீதிக் கொடுமை…
Gopala Krishnan ஒரு வேலை அந்த தொழிலாளி தானே விருப்பபட்டு சுத்தம் பண்ணினார்னு சொல்லுவாங்ளோ ….
மை லார்ட்…சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாதுன்னு ஏற்கனவே நீங்க தடை போட்டிருக்கீங்க…ஆனால் ஒங்க நீதிமன்றத்திலேயே அந்த வேலை நடக்குது..பார்த்து ஏதாவது செய்யுங்கள் யுவர் ஆனர்..
பார்த்தோம்…அவராக விரும்பித்தான் சாக்கடைக்குள் இறங்கியிருப்பதால் அதில் தலையிடமுடியாது…வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
கோர்ட் கலையலாம்..
ஐகோர்ட் வளாகத்தில் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளி… ( உங்க தீர்ப்பையெல்லாம் நீங்களே மதிக்க மாட்டிங்களா சட்டம் படிச்ச….)