திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசனின் மகனான சரவணன் கடுமையான முயற்சிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களிலேயே சரவணன், அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரவணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பது அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், சரவணன் தற்கொலை செய்ததற்கான தடயங்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என உடல் கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சரவணனின் உடலில் , உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இருந்ததா என்பது குறித்த அறிக்கை வெளியாக சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.