மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. இப்படி அனுப்பப்பட்ட கடிதமே லெனின் உயிரைப் பறித்துள்ளது.
தலித் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியான லெனின், ரிலையன்ஸ் நிறுவனம் வட்டியும் முதலுமாக ரூ. 2, 48, 623 (ரூ. இரண்டு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து அறுநூற்று இருபத்தி மூன்று) கட்டச்சொல்லி கடிதங்களும் தொலைபேசி மிரட்டல்களும் விடுத்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
படங்கள்: திவ்யபாரதி (அகில இந்திய மாணவர் கழகம்-aisa)