பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நீஸ் நகரின் ‌கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அந்நாட்டு தேசிய தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, லாரி ஒன்றை அதிவேகமாக ஓட்டியவாறு ஒருவர், திரண்டிருந்த கூட்டத்திற்குள் நுழைந்தார்.

அந்த நபர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் 80 பேர் உயிரிழந்தனர்;பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ‌அந்த நபரை சுட்டுக்கொன்றனர்.

இதைத்தொடர்ந்து பிரான்சில் பதட்டம் அதிகரித்துள்ளதால் அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஹோலண்டு அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து முகநூலில் பதிவான சில கருத்துகள்…

Yamuna Rajendran

பிரான்ஸ் என்பது பிரெஞ்சுப் புரட்சி மட்டுமல்ல. அது ஆப்ரிக்க, இந்தோ-சீன காலனிய அதிகாரம். பாரிஸ் கம்யூனின் இரத்த வெள்ளத்தில் கைநனைத்த நாடு. தியரியின் தலைநகரம். சார்லி ஹெப்டோ எல்லாமும்தான். பயங்கரவாதத்துக்குப் பலியான அனைத்து வெகுமக்களுக்கும் அஞ்சலி..

Arul Ezhilan

பிரான்ஸ் தெற்கு கடற்கரை நகரமான நீஸ் தாக்குதல் நாமும் இனி நிம்மதியாக இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் நிம்மதி எப்படி குலைந்ததோ அப்படி சூழல் உலகம் முழுக்க வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

Joshua Isaac Azad

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு.

பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தியை உங்கள் ‘செய்தி தொலைக்காட்சியில்’ பார்த்தேன். உங்கள் செய்தியில் சொல்லப்பட்ட தகவல்கள்.

1.இது தற்கொலைப் படை தாக்குதல் 2.வெடிகுண்டுகள் நிறப்பப்பட்ட லாரி மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடித்தது 3.மக்கள் பலர் உடல் சிதறி உயிர் இழந்தனர் 4.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக பிரான்ஸ் அரசு தகவல்.

இதில் ஒன்றிலாவது உண்மைத்தன்மை உள்ளதா?

நடைப்பெற்ற தாக்குதலில் ‘நபர் ஒருவர்’ லாரியை அதிகளவில் மக்கள் கூடியிருந்த சாலையில் புகுந்து ஓட்டினார். சுமார் இரண்டு கிமீ வரை சாலையில் மக்களை கொன்ற அந்த வாகனத்தை அதன் ஓட்டுநரை சுட்டுக் கொன்று நிறுத்தியது போலீஸ். இதுவரை கொல்லப்பட்ட அந்த நபர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. துனிசியா பூர்வீகத்தை கொண்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவனாக இருக்கலாம் என்று ‘சொல்கிறார்கள்’. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க்கவில்லை. அதைக் குறித்து எந்த தகவலும் இல்லை.

எங்கிருந்து தான் உங்களுக்கு இந்த தகவல்கள் கிடைத்தது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒன்றுக்கும் உதவாத மற்ற இந்திய தொலைக்காட்சிகளில் என்ன சொல்கிறார்கள் என்று கூட பார்க்க மாட்டீர்களா? அவர்கள் கூட இப்படி செய்தி போடவில்லை.

எங்கோ நடைப்பெற்ற பிரான்ஸ் செய்தியை தானே தவறாக சொல்லிவிட்டோம் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கோ இதே தரத்தை தான் எங்களுக்கும் கொடுப்பீர்கள் என்ற பீதி. நம்ம ஊரில் எப்போது செய்தியாளர்கள் தாங்களே தேடிச் சென்று செய்தியை கொண்டு வந்திருக்கிறார்கள்? எல்லாம் போலீஸ் ஸ்டேசனில் இருந்து தானே ‘கொடுக்கப்படுகிறது’ ‘வாங்கப்படுகிறது’.

Bogan Sankar

பிரான்ஸில் நடந்திருக்கிற தாக்குதல் குறியீட்டுரீதியாக மிக முக்கியமானது.கலை,கருத்துச் சுதந்திரம்,தனிநபர் சுதந்திரம்,சமத்துவம் ,சகோதரத்துவம் ,தாராளவாதம் ,ஆகியவற்றின் தலையூற்றாகவும் புரவலராகவும் பிரான்ஸ் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.brexit ,Donald trump போன்ற நிகழ்வுகளுக்கும் வருகைகளுக்கும் பிறகு இந்த தாக்குதல் பிரான்சை தற்காப்பு நிலை என்கிற மிகக் குறுகிய தன்னிருப்புக்குக் கொண்டு செல்லும்.பிரான்ஸை மற்ற நாடுகளும் தொடர வேண்டியிருக்கும்.இரண்டு உலகப்போர்களில் நாம் அறிந்துகொண்ட ஒரு விஷயம்.ஐரோப்பாவில் நிகழும் எதுவும் உலக அளவில் எதிரொலிக்கும் என்பதே.பிரான்ஸ் நவ சிந்தனையின் முன்னோட்டு குதிரை.அதைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.

நம்மை நமது இருண்ட காலங்களுக்கு இழுத்துச் செல்லும் எந்தக் கடவுளையும் மறுதலிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது இருக்கிறோம்

மூன்று முறை
முன்னூறு முறை
மூவாயிரம் முறை.

Aravindan Kannaiyan

பிரான்ஸ் ஒரு ஏகாதிபத்தியமே. அங்கு நிறவெறி ஜாஸ்தி. நேரிலும் கண்டிருக்கிறேன். மிகவும் மேட்டிமை குணம் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியனின் சிறிய நாடுகளை அவர்கள் ஒருப் பொருட்டாகவே நினைத்ததில்லை. பிரான்ஸில் யூத வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு, ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்பு எல்லாம் கனிசமானவை. நடந்த கொலை பாதகத்தை நான் நியாயப்படுத்தவில்லை.

Kalai Marx

பிரான்ஸ், நீஸ் நகரில் 80 பேரைக் கொன்ற தாக்குதலில், லாரி ஓட்டிச் சென்றவர் ஒரு “பொருளாதாரப் பயங்கரவாதி” என்று தெரிய வருகின்றது. அதாவது, பொருளாதாரக் கஷ்டம், பண நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட நபர் தான், லாரி ஓட்டிச் சென்று மோதி பலரைக் கொன்றுள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பெயரில் முஸ்லிமான அந்த நபர் மத நம்பிக்கையற்றவர். ஒரு நாளும் மசூதிக்கு சென்றதே கிடையாது. வீட்டில் கூட தொழுதிராதவர்.

தாக்குதல்தாரியை அறிந்த அயலாரும், நண்பர்களும் இந்தத் தகவலை தெரிவித்தனர். சமீப காலமாக பண நெருக்கடிக்கு ஆளானது மட்டுமல்லாது, மண முறிவு காரணமாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார்.

வழமை போல ஊடகங்கள் இதற்கு கண்,காது,மூக்கு வைத்து, உலகத் தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கு தீவிரவாதத் தாக்குதலாக்கி விட்டன. மர்ம நபர் ஓட்டி வந்த லாரியில் “பயங்கர ஆயுதங்கள்” கண்டுபிடிக்கப் பட்டதாக ஊடகங்களில் சொல்லப் பட்டது. ஆனால், லாரிக்குள் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி மட்டும் இருந்ததாக, நெதர்லாந்து தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டது.

மேலும் 80 பேர் கொல்லப் பட்டதற்கு லாரி மோதியது மட்டுமே காரணம் என்று சொல்லப் படுவதும் சந்தேகத்திற்குரியது. அந்த நேரத்தில் பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப் பட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வான வேடிக்கையை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை, அந்த இடத்தில் இருந்த டச்சு சுற்றுலாப்பயணி ஒருவர், டச்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

(பிற்குறிப்பு: இந்தப் பதிவு முகநூல் விதிகளை மீறவில்லை. பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை ஆதரிக்கவில்லை என்பதை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க நெதர்லாந்து செய்தி நிறுவனத்தால் (NOS) வெளியிட்ட தகவல்.)

One thought on “பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

  1. “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்”, “தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்று கொல்வான்” “உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்புச் செய்தவன் தண்டனை பெறுவான்” போன்ற முது மொழிகள் மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்தனவாகவே கருதப்படுகின்றன. அவ்விதமல்ல, இவை இவை சமூகவாழ்வின் அனுபவங்களை அவதானிப்பதன் மூலம் உருவான முதுமொழிகளாகும். தனிநபர் வாழ்வில் இம்முதுமொழிகள் உண்மையாகின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை. அனால் கணங்களின், குலங்களின், அரசுகளின், இராச்சியங்களின், தேசிய இனங்களின், தேசங்களின் வரலாற்றில் இவை உண்மைகளாகவே இருந்துவருகின்றன.
    கடற்கொள்ளை, வணிகக் கொள்ளை, மூலப்பொருள் கொள்ளை, அடிமைவியாபாராம் போன்ற தீய வழிகளில் பொருளீட்டி வளர்ந்ததுதான் ஏகபோக மூலதனமாகும். இதற்காக இம் முதலாளிகள் நடத்திய படுகொலைகள், மனித அழிப்புகள், இயற்கை அழிப்புகள் ஏராளம். இதுதான் முதலாழித்துவத்தின் பின்பான முதலாவது பயங்கரவாதமாகும். இழநிலை ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய முதலாளித்துவம் தமது “தேசிய” நிலையை ஏகபோகநிலையாக வளர்த்துக் கொள்வதற்காக இப் பொருளாதாரப் பயங்கரவாதத்தைப் பிரயோகித்தது.
    சுமார் முன்னூறு வருடங்களுக்கு முந்தைய அந்த முதல்வினை தற்போதுதான் எதிர்வினையாக மாறியுள்ளது போலும். முதலாவது எதிர்வினை ஹிட்லர், முசோலினி ஆகியோரால் ஆற்றப்பட்டது. இப்போது நடப்பது இரண்டாவது எதிர்வினையாகும். நியூட்டன் தப்புவிடவில்லை. “வினை விதைத்தவன் வினையறுப்பான்” என்பதுவும், “தெய்வம் நின்று கொல்லும்” என்பதுவும் தப்பாகவில்லை.
    ஆனால், இவ் எதிர்வினைகள் மக்களுக்கு நேரடிப்பலன் தருவதாக அமையவில்லை. “தினை விதைத்தவன் தினையறுகப்பான்” எனும் நிலை இன்னமும் தோன்றவில்லை. மாறாக மக்களையும் பாதிப்பதாகவே அமைந்துள்ளது. இத் தவறான எதிர் வினைகளில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளல் எவ்விதம் என்பதுவே இன்றைய கேள்வியாகும். பாஸிஸம், நாஸிஸம் எனும் முதலாவது மக்கள் விரோத எதிர்வினையில் இருந்து மக்களைப் பாதுகாத்த ஜோசப் ஸ்ராலின் போல் இன்னும் ஒருவர் தோன்றுவாரா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.