சன் குழும ஊடகங்களின் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சிக்கும், எஸ்ஆர்எம் குழுமத்திற்கும் எதிராக சன் குழும ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்பி வருவது கண்டனத்திற்குரியது என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எஸ்ஆர்எம் குழுமத்தால் 371 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சன் குழும ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 37 ஏக்கர் நிலத்தில் 29 ஏக்கர் நிலம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏரி என்றும் மீதமுள்ள நிலத்திற்கு முறையாக குத்தகையை அரசுக்கு செலுத்தி ஒப்புகைச்சீட்டுகளைப் ரசீது பெற்று வருவதாகவும் பாரிவேந்தர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏரியை தூர்வாருதல், பராமரிப்பு உள்ளிட்டவற்றை எஸ்.ஆர்எம் குழுமம், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் செயல்படுத்தி வருவதாக தனது அறிக்கையில் பாரிவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமான திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வரும் நிலையில் அக்கல்லூரிக்கு அனுமதியில்லை என்று செய்தி வெளியிடுவது உள்நோக்கமுடையது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மதன் வழக்கு புலனாய்வு நடந்து வரும் நிலையில் அந்த வழக்கு குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ஊடக தர்மத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ள பாரிவேந்தர், தொடர்ந்து இது போன்ற அவதூறு செய்திகளை ஒளிபரப்பினாலோ, பிரசுரித்தாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.