”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன.

இதைப் படியுங்கள்:  ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…

ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு புறம் இந்துத்துவ ஆதரவு வழக்கறிஞர் தாமாக முன்வந்து ராம்குமாருக்கு வாதாடப் போவதாக அறிவித்தார். பிறகு, பின்வாங்கினார்.

ராம்குமார் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக பலரும் எழுதிவந்த நிலையில், ராமராஜை வழக்கறிஞராக ராம்குமார் குடும்பம்  நிறுத்தியது.

இதையும் படியுங்கள்: போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

ராம்குமார்தான் குற்றவாளியா என கண்டறிவதற்காக அண்மையில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடந்தது. தற்போது ராம்குமாரை காவல் எடுத்து விசாரித்து வருகிறது காவல்துறை.

ஆரம்பம் முதலே ஸ்வாதியின் குடும்பம் இவ்வழக்கில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவர்கள் குடும்பத்திலிருந்து வழக்கை திசைதிருப்பும் வேலைகளும் நடப்பதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

இந்நிலையில், இந்த வழக்கின் திசை சரியான திசையில் செல்லவில்லை என சமூக செயற்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் தெரிவித்து வருகிறார். ராம்குமாரின் வழக்கறிஞருடன் தற்சமயம் இந்த வழக்குக்காக உதவிவருகிறார். இவர் தெரிவித்துக்கும் கருத்துகள் இந்த வழக்கின் திசையை மாற்றக்கூடும் என தெரிகிறது.

“ஸ்வாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர், பதிவுத் திருமணம் அது.  இவர் ரம்ஜான் நோன்பிருந்ததும் தெரிய வந்துள்ளது.  இன்னொரு பக்கத்தில் ஸ்வாதியின் தந்தை சந்தான கோபலகிருஷ்ணன். ஆர். எஸ். எஸ். இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். ஸ்வாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர். ஸ்வாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிவப்பாக, உயரமாக இருந்த நபர் அறைந்திருக்கிறார். இவர் யார்? ஸ்வாதி கொலையான நிலையைப் பார்த்த அவருடைய அப்பாவின் மேனரிசம் சந்தேகத்தைக் கிளப்பக்கூடியது. பதற்றமில்லாமல் மிகவும் கேஷுவலாக இருந்தார் அவர். ஸ்வாதியின் சித்தப்பா ஸ்வாதியின் உடலை படம் எடுத்துக்கொண்டே இருந்தார். இவர்களுடைய முகத்தில் தங்கள் அன்புக்குரியவரை இழந்துவிட்டோம் என்று எவ்வித வருத்தமும் வெளிப்படவில்லை. சந்தேகமும் சந்தேகத்துக்கான காரணமும் கூடிக்கொண்டே போகிறது” என்கிற திலீபன், விரைவில் ஆதாரங்களை வெளியிடுவோம் என்கிறார்.

5 thoughts on “”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

 1. நியாயமான சந்தேகம் தான். இருந்தாலும் இப்படி கொடூரக் கொலை செய்வதற்கு பதில் வேறு எத்தனையோ வழிகள் உள்ளது கொலை செய்ய. அதையும் யோசிக்க வேண்டும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். நோன்பிருந்ததை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள இயலாது.
  அவரது தந்தை எதற்கும் கலங்காத குணம் கொண்டவராக இருக்கலாம்.

  Like

 2. அப்பன் குதிருக்குள் இல்லை என்று சுவாதியின் குடும்ப அங்கத்தினர்களின் செயல் பாட்டிலும் உணர்வுகளின் வெளிப்பாட்டிலும் அப்பட்டமாக தெரிகிறது-அந்த பெண்ணை வெளி ஆட்கள் யாரும் கொள்ளவில்லை என்று நம்மால் உணரமுடிகிறது.சரியான பாதையில் இந்த வழக்கை கொண்டு சென்றால்,அரசியல் தலையீடுகள் இல்லை என்றால்.பூனை குட்டி வெளியே வந்து விடும்.

  Like

 3. இது ஆணவக் கொலை தான் என்பதை விட ஜாதி, மத பிச்சினைகளை தமிழகத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. இதை கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடர் கூடிய சமயத்தில் என்னுடைய முகநூல் பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன். காவல் துறை இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சுவாதியின் கொலை வழக்கில்.

  Like

 4. S true the case was not handled in proper way police has to take custody of her parents, ramkumar was pushed by some force to do this many mysteries inside this but nothing can be hided fr too long but dam sure that it was nt onesided love case bt he was screwtaniz to do that

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.