தபால் நிலையங்களில், கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பாட்டில்களில் கங்கா நீர் என்று மட்டும் அச்சிடப்பட்டிருக்கிறது. அது குடிப்பதற்கு உகந்ததா என்பது பற்றிய சுகாதாரத்துறையின் எந்தவித அறிவுறுத்தலும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளது புதிய தலைமுறை. மேலும் இந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கங்கை நீர் என்பதால் இதனை வாங்க ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்த கங்கை நீரை குடிக்கக்கூடாது என்று தபால் துறை தற்போது அறிவித்துள்ளது. இது குடிக்க உகந்த நீர் அல்ல என்று பாட்டிலிலேயே அச்சிடப்பட்டுள்ளதாகவும் தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. லாப நோக்கில் அல்லாமல் சேவை நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மண்டல தபால்துறை கூறியுள்ளது.
சேவை நோக்கமெனில் மற்ற மதங்களின் புனித நீரும் விற்பனைக்கு வருமா என்பதை நாம் கேட்க நினைக்கிறோம்.