அஞ்சலகங்களில் கங்கை நீர் விற்பனை: ‘பிணம் மிதக்கும் புனித நீர்’

இந்துக்களின் புனித நீராக கருதப்படும் கங்கா தீர்த்தத்தை பார்சல் மூலம் வீடுகளில் டெலிவரி செய்யும் திட்டம் மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. பீகார்  தலைநகர் பாட்னாவில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், மனோஜ் சின்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘புனித தலங்களான ரிஷிகேஷ், கங்கோத்திரியில் இருந்து எடுக்கப்படும் கங்கை தீர்த்தத்தை  இனி அஞ்சலகம் மூலம் வீடுகளில் பெறலாம்’’ என்று தெரிவித்தார். கங்கை நீர் டெலிவரி குறித்து முகநூலில் வெளியாகியிருக்கும் சில பதிவுகள் கீழே.. முகப்பில் கூகுளில் கங்கா என தேடும்போது முதலில் வந்து நின்ற படம், ‘பிணம் மிதக்கும் புனித நீர்’

Karan Karki

இப்போதைக்கு கங்கா நீர்
அப்புறம் கோமியமா????
மேல் சட்டையற்ற நான்கு இளைஞர்களை(கேடுகெட்ட மிருகங்கள் ;அந்த கழிசடைகளை மனிதனென்ற வகையில் சேர்க்கவே முடியாது) அப்படி தாக்குகிறார்கள் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா? தேச பக்தர்களா?
இந்த கேடுகெட்ட கொடூரங்களை நிறுத்துங்க அப்புறம் கங்கா நீரையும்,கோமாதா மூத்திரத்தையும் விற்கலாம்.
தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்காதவர்கள் அந்த அநீதியை கண்டிருக்க முடியாது…அடப்பாவிகளா.
அந்த நான்கு இளைஞர்களும் பசுமாட்டு தோலை வைத்திருந்தார்களாம்.
அட எல்லாவற்றையும் விற்கும் வியாபாரிகளா…….தாக்கிய கயவர்கள் மீது என்ன நடவடிக்கை??????

Abdul Hameed Sheik Mohamed

கங்கை நீரை அஞ்சலகங்களில் விற்பது தொடர்பான செய்திகள் இரண்டு நாட்களாக அடிபடுகின்றன. கங்கை நீரை புனித நீராக ஒருவர் கருதுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதை ஏன் அஞ்சலகங்களில் வைத்து விற்கவேண்டும்? குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை சார்ந்த ஒன்றை மத்திய அரசு அலுவலகங்களின் வழியே சந்தைப்படுத்துவது அப்பட்டமாக மதசார்பின்மைக்கு எதிரான செயல். மேலும் அந்த நீருக்கு குடி நீருக்கான தரக்கட்டுப்பாடு எதுவும் செய்யப்படவில்லை. கேட்டால் ‘ அது தெளித்துக்கொள்வதற்கான நீரே தவிர குடிப்பதற்கான நீர் அல்ல ” என்று பதில் வருகிறது. புனித நீர் சுகாதார நீராக இருப்பதும் முக்கியம் இல்லையா?

புனித கங்கை நீரை நாடு முழுக்க மத்திய அரசு அலுவலங்களில் பாட்டிலில் அடைத்து விற்பதற்கு பதில் கங்கை, காவிரி இணைப்பை மோடி செய்துவிட்டால் நாடு முழுக்க கங்கை நீர் கலந்து பாரத தேசமே புண்ணிய தேசமாக மாறிவிடாதா?

இன்னும் என்னவெல்லாம் இந்த நாட்டில் நடக்கப்போகிறது என்று தெரியவில்லை.

An Indian Hindu takes a dip in the polluted waters of river Ganges in the northern Indian city of Allahabad June 5, 2005. The devastating impact of mankind on the planet is dramatically illustrated in pictures in the "One Planet, Many People" atlas published on Saturday showing explosive urban sprawl, major deforestation and the sucking dry of inland seas over less than three decades. REUTERS/Jitendra Prakash   FK/TZ - RTRDFYY
புனித சடங்குக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களால் மாசடைந்திருக்கும் புனித நீர்…

Sekar Eb

அஞ்சல் துறையில் இருந்த தந்தியை மூடிவிட்டார்கள். Postal order களை எந்த கல்வி நிறுவனமும் கேட்பதில்லை. கடிதாசியும் இல்லை மணிஆர்டரும் போச்சி.ஸ்டாம்புகள் அருங்காட்சியகத்தில் , வட்டியை குறைத்து ஊக்க தொகையை ஒழித்து சிறு சேமிப்பு பழக்கத்தையும் அழித்தாகிவிட்டது. பிறகு என்ன செய்வது. ஆரம்பிபித்து விட்டார்கள் அஞ்சலகத்தில் புனித நீர் விற்க. அடுத்து கோமியம் , யாகம் வளர்க்க சுள்ளி கட்டு , விபூதி ,சந்தனம் என்று தொடரலாம்.இதையெல்லாம் விற்பதற்கு 30000, 40000 சம்பளத்தில் மத்திய அரசு ஊழியர்கள் . சீக்கிரமே வல்லரசாகிவிடும் இந்தியா.

அஞ்சல் அலுவலகங்களில் புனித(!) கங்கை நீர் விறுவிறுப்பான விற்பனை. 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. – செய்தி.
விரைவில் திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஒவ்வொன்றாக அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படலாம். thanks to Modi for devolped india

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.