பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார்.
பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை.
“ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க இனக்குழு மக்களை போட்டோ பிடிச்சி காட்டறுங்கிற மாதிரி, இந்தியாவுல சில இனக்குழுவுல காட்டுமிராண்டி மக்களுன்னு காட்டுகிறதுக்கு ஃபண்டிங் வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்” என்பன அவர் உதித்த சில கருத்துகள்.
வீடியோ இணைப்பு கீழே…
சாருவின் கருத்துரிமை விவாத கருத்துக்கு முகநூலில் வந்த எழுத்தாளர் Yamuna Rajendran எதிர்வினை: