நடந்த முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி சர்ச்சைகள் ஏதும் இல்லாதது ‘சப்’பென்று இருந்தது என ஒரு தமிழ் நாளிதழ் கவலைப்பட்டது. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் முகநூலில் ஒரு சர்ச்சையொன்று மையங்கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி லீனா மணிமேகலை. சமீபத்தில் அவருடைய கவிதை நூல் (சிச்சிலி) ஒன்றும் நேர்காணல் நூல் (மொழி எனது எதிரி) ஒன்றும் வெளியானது. அந்த வெளியீட்டை ஒட்டி, கவிஞர் பழனிவேள் தனது முகநூல் பதிவில் இவ்வாறு பதிந்திருந்தார்.

சமகாலத்தில் எழுதும் சக பெண் படைப்பாளர்களைக் குறித்து ஏக வசனத்தில் விளிப்பதும், படைப்புக்கு வெளியே தனிநபர் ரீதியில் தாக்கி முகநூலில் பிணாத்துவதற்கும் பெயர் எதிர் அரசியல் அல்ல. அது சாதியாகவும் அதிகாரப் புற்றேறியிருக்கும் ஆணாகவும் நோயில் விழுந்திருக்கும் உடல் வெளியேற்றும் நாற்றம். #பழனிவேள்
எந்த வெட்கமும் இல்லாமல், சக பெண்களை ஏன் இப்படி அவமரியாதை செய்கிறாய் எனக் கேட்க துப்பில்லாது நோய்மனம் துப்பும் உளறல்களோடெல்லாம் உரையாடி தன் நட்பையும் கவிதையையும் மட்டும் பேணுவதற்கு பெண்ணிய அடையாளங்கள் எல்லாம் எதற்கு? #பெருந்தேவி
நேர்ப்பேச்சில், சபையில் நட்பாய் இளித்துவிட்டு, அந்தப்பக்கம் சென்று எல்லா வக்கிர வெளிப்பாடுகளையும் லைக் இட்டு பராமரிக்கும் இழிமனங்களை தற்போதைக்கு பளாக் செய்யலாம். நேரில் கண்டால் அருவருப்படையலாம். #தேவேந்திரபூபதி#ஶ்ரீசங்கர்#குமார்அம்பாயிரம்
அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழச்சிக்கும் மற்ற பெண் படைப்பாளர்களுக்கும் சேர்த்து தான் ரெளத்திரம் பழகியிருக்கிறேன். கண்டிக்க மனமில்லாதவர்கள் தோழி என்று அழைத்துக் கொண்டு என் திசைக்கு வந்துவிடாதீர்கள்.
அவர்கள் தனிமைப்படுத்தப் படவேண்டும் என்று கூட நான் விரும்பவில்லை.அவர்கள் விளக்கம் சொல்ல வேண்டியது வரும் என்கிற நிலையில் இருந்த பேசிப் பழக முதலில் பொதுவில் ஒரு ஏற்பாடு அவசியம்.
இது ஒழிந்து அவர்களிடம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் முன்னர் குறைந்த பட்சம் விளக்கம் கேட்கப்பட வேண்டும்.தனக்கு வந்தால் ரத்தம் எதிரிக்கு வந்தால் தக்காளி சட்னி என்னும் நிலை இருந்தால் இந்த அலப்பறைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது.
எல்லா இலைகளிலும் பாயாசம் குடிக்கவேண்டும் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று இருந்தால் இலக்கிய மதிப்பீடுகளைக் காக்க இயலாது.தங்கள் சார்ந்திருக்கும் அதிகார பீடங்களை திருப்தி செய்வதை மட்டுமே ஒரேயொரு நோக்கமாகக் கொண்டு சுயேட்சைத் தன்மையற்ற பலர் இங்கு சூழ்ந்திருக்கிறார்கள்.
பிறருக்கு நேரும்போது அமைதி காத்துவிட்டு தனக்கு நேரும் போது கத்துவதும் ஒருவகையான மடமைதான். சாதிரீதியில் அணிதிரட்டுவோர்,அவள்கள் படுக்க எனக்குதான் காசு தரவேண்டும் என்று சவடால் விட்டு விட்டு பொதுவில் மினுங்குவோர்,பொதுவிலேயே எல்லோருடனும் படுத்து விட்டு எழுதுகிறாள்கள் என ஓங்கி கத்தி விட்டு எதுவுமே நடவாதது போல நகர் வலம் வருவோர்,மடியில் உட்கார்ந்திருப்பார் , தங்கள் சார்ந்துள்ள அதிகார பீடங்களை திருப்தி கொள்ளச் செய்ய எதிரிகளின் மீதான அவதூறுகளை உண்மையாக்க முயல்வோர் கேள்விகளுக்கு உட்படுத்தப் படாமலேயே ஜொலிக்கிறார்கள்.ஜொலிக்க எல்லோரும் இடம் தருகிறார்கள்.தங்களுக்கு எதிராக இப்போது ஒன்றுமில்லையே ? என்று விடுகிறார்கள்.
இன்று பிறருக்கு எதுவோ ,அதுதான் நாளை நமக்கு.கொஞ்சம் தாமதமாகும் அவ்வளவுதான் விஷயம்.
Lakshmi Manivannanஅதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.அது ஒரு பப்ளிக் போஸ்ட் .அவரது நட்பையும் எனது வட்டத்திலிருந்து விலக்கி நெடுநாட்கள் ஆயிற்று .
நேசமித்திரனும்,லக்ஷ்மி சரவணகுமாரும் “நக்கிப் பிழைப்பவன் “என்று தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்கள்.ஒரு கேள்வி கிடையாதே? நான் நக்கிப் பிழைக்காதவன் என்று சொல்லவில்லையே எனக் கேட்டு விளக்கமும் எழுதியிருக்கிறேன்.மூச்சு சத்தம் கிடையாது.ஆக இந்த தனிநபர் தாக்குதல்கள் ஆண் பெண் விவகாரங்கள் மட்டும் அல்ல.
Lakshmi Manivannanநமக்கு தெரிந்தவர்கள் என்றால் அப்படி சொல்வார்களா? என்ன? நல்ல கரிசனம்.
அது ஒரு பப்ளிக் போஸ்டில் நெருங்கிய ஒருவருக்கு அவர்இ ட்ட பின்னுட்டம்
அவரை எடுத்து சந்தியில் விடுவதற்காக இதனை சொல்லவில்லை. ஒருவரை பாராட்டுவதற்காக அவசரத்தில் அவர் உளறிக் கொட்டியது அது.நான் சொல்ல வருவது இரட்டை நிலைப்பாடு இங்கு எல்லோரிடமும் இருக்கிறது என்பதை நினைவு படுத்துவதற்காகத் தான்.தனி நபர்களை புண்படுத்துவதாக அல்ல.
இது பெருந்தேவிக்கும் தெரியும். பெருந்தேவி பற்றி இவன் சொன்னது அவருக்கு இதுவரை தெரியாது. இலக்கியம் கிடக்கட்டும். மோசமான ஜாதி வெறியன். தோழர் ஜெகதீஸ்வரன் சொல்வது போல் ஈனப்பயல். அவனை பிளாக் செய்து ரெண்டு வருடங்களாகிறது.
ஆபாசத் தாக்குதல், நடத்தைக் கொலை, வன்கொடுமை
லீனா மணிமேகலை என்ற சினிமாக்காரர் என் பெயரைக் குறிப்பிட்டு மிக வன்முறையான, ஆபாசமான வசை ஒன்றை முகநூல் வழியாகப் பரப்பியிருக்கிறார். போகிற போக்கில் என் நடத்தை மீதான கொலைத்தாக்குதலைத் தொடுத்து என் மீது பெரும் வன்முறையை செய்திருக்கிறார். இந்தக் குற்றச் செயலைக் கண்டித்து மனித உரிமை மீறலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.
இதற்கு இலக்கியம்-அரசியல் சார்ந்த நண்பர்களும் தோழர்களும் துணை நிற்கவேண்டும்.
பிரேமின் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் சில..
Venkatesh Chakravarthy யாரும் யாரையும் எந்த காரணத்திற்காகவும் தரக்குறைவாக பேசுவதில் எனக்கு எந்த ஈடுபாடுமில்லை. விமர்சனங்களும் அந்த பொறுப்புடன் செயல்படுவது ஒரு விஸ்தாரமான பொதுவெளியை அமைக்க உதவும்.
Anangu Pathippagam இது யாருக்கானது?
பிரேம் பிரேம் இது விமர்சனம் அல்ல. தாக்குதல், வன்முறை, ஆபாசமான வசை. வீதியோரம் நின்றிருக்கும் ஒருவர் மீது கத்தியை வீசிவிட்டுச் செல்லுவது போன்ற Character assassination. வெறிநோய் கொண்ட தாக்குதல்.
Venkatesh Chakravarthy பிரேம் பிரேம்…விமர்சனங்களாக இருந்தாலும் என்றும் சொல்லியிருக்க வேண்டும். நான் எந்த காலத்திலும் காரக்டர் அஸாஸினேஷனை ஆதரித்ததுமில்லை அதற்கு துணை போனவனும் கிடையாது.
Manonmani Pudhuezuthu அப்படித்தான் இருக்கிறோம்.
பா. செயப்பிரகாசம் பா. செயப்பிரகாசம் நீங்கள் ஏன் ஆயாசம் கொள்கிறீர்கள்? அதுதான் அவர். என்றைக்காவது சமுதாய நோக்கத்துடன் எதையாவது செய்ததுண்டா அவர்!
குழாயடிச் சன்டையைக் காட்டிலு ம் கேவலமாக இருக்கின்றது , இத்தகைய எழுத்தாளர்களுக்காக [?] வருந்த மட்டுமே முடிகிறது . ஒரு முரண் .ஒரு சிதைவு .ஒரு குழப்பம். ஒரு கசப்பு .ஒரு தகர்வு .இது ஒரு அவசிய மற்ற , மற்றபதிவு.
LikeLike